கதை 1:
ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர்.
ஆனால்
அவரோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார். வந்தவர்களுக்கு
அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,"நீங்களே இப்படி செய்யலாமா?என்ன
இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி
இறந்திருக்கும்போது,நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?" அவர்
சொன்னார்,"பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?
பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ
இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன. இப்போது இரண்டும் போய்விட்டன. இடையில் வந்தவை இடையில் போயின. இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?"
கதை 2:
தொடர்ந்து
சில ஆண்டுகளாக மழையே பெய்யாமல் ஒரு ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. நல்ல
உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர். "ஐயா!
பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர்,
சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய
வேண்டும்" என்று வேண்டினர்.
"இந்த
ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம்
கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச்
சொல்லுங்கள் !" என்றார் அந்த செல்வந்தர்.
மாளிகை
திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்து, "இந்த ஊரில் உள்ள குழந்தைகளின்
எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும்.
கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில்
சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு" என்றார்.
மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
பெரிய
மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி
மட்டும் அமைதியாக, எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய
மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள்.
இப்படியே
தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக்
கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த
சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன்
வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்த
போது, அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்தத்
தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி.
"ஐயா! இது உங்கள் தங்கக் காசு. மோதகத்தில் இருந்தது " என்று கூறி
திருப்பிக் கொடுத்தாள். செல்வந்தர், "உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும்
நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக்
கொண்டு வீட்டிற்குச் செல்" என்றார். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள்,
நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.
கதை 3 :
இரு
நண்பர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு
விஷயத்தை பற்றி பேசிக் கொண்டே செல்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும்
வாதமாகி, வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான்
மற்றொருவன்.
அறை வாங்கியன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான். விரல்களால் மணலில் ஒன்று எழுதினான்:
"இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்".
மற்றவனுக்கு
ஒன்றும் புரியவில்லை. இருவரும் பேசாமலேயே நடையைத் தொடர்ந்தார்கள். வழியில்
ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர
குளிக்க ஆரம்பித்தார்கள்.
கன்னத்தில்
அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. புதைகுழியில்
சிக்கிக் கொண்டான் அவன். நண்பன் நிலை கண்டதும், கடும் முயற்சி செய்து அவனை
காப்பாற்றி கரை ஏற்றினான்அறைந்தவன்.
உயிர்
பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு
கல்லின் மீதமர்ந்தான். ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி எழுத ஆரம்பித்தான்.
"இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்".
இதையெல்லாம்
பார்த்த மற்றவன் கேட்டான்.."நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய்.
இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏன்? இதற்கு என்ன
அர்த்தம் நண்பா?"
நண்பனின்
பதில், "யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு
எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது
செய்தால் அதை கல்லில் எழுத. காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்!"
கதை 4 :
ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது ஒருவனுக்கு.
அவன்: மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?
கடவுள்:
மனிதன் ரொம்ப நாள் குழந்தையாக இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து
பெரியவனாகிறான். ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம்
இருக்கிறான். பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான். பின்னர் இழந்த நலத்தைத்
திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான். எதிர்காலத்தைப் பற்றியே
எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும்
நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான். நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு
இல்லாமலே போகிறது. சாகாமல் இருக்க வாழ்கிறான். ஆனால் வாழாமலே சாகிறான்.
அவன் : ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?
கடவுள்
: யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே.
நேசிக்கப்படும் அளவு நடந்து கொள். வாழ்க்கையில் ஒருவன் சம்பாதித்தது
மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதித்தான் என்பதில் தான் மதிப்பு.
ஒன்றை விட ஒன்று சிறந்தது என்று ஒப்பிடுதல் கூடாது.
எல்லாம் இருக்கிறவன் பணக்காரன் என்று நினைக்காதே. உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன் தான் பணக்காரன்.
பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்க முடியும் என்று நினைப்பது தவறு. மகிழ்ச்சியை ஒரு போதும் வாங்க முடியாது.
இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.
ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!
அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்.
நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம். நீ செய்தததையும் மறந்து போகலாம். ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
கனவு முடிந்தது. கதைகளும் முடிந்தன.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment