என்றாவது
யோசித்ததுண்டா ஏன் இந்த மூன்று பின்களில் ஒரு பின் மட்டும் நீளமாகவும்
தடிமனாகவும் உள்ளதென்று? இந்த தகவலை ஆங்கில கோரா மூலம் தான்
கற்றுக்கொண்டேன்,
நீளமாக
இருக்கும் அந்த பின் தான் grounding என்று சொல்லப்படக்கூடிய earthing
point . அந்தப் pin தான் முதலாவதாக போர்டை தொடும், கடைசியாக போர்டிலிருந்து
விடுபடும். உலோகத்தினால் ஆன மின்சார கருவிகளில் முதலாவதாக கரண்ட் பாய்ந்து
அசம்பாவிதமாக உங்கள் உடல் அதனோடு தொடர்பில் இருக்குமாயின் உங்கள் உடலை அது
ஒரு கடத்தியாக பயன்படுத்தி உங்களின் வழியே பூமியை அடையும். அதாவது நீங்கள்
மின்சாரத்தால் தாக்கப்படுவீர்கள்.
அதனை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.
அது சரி நீளம் ஓகே. ஏன் அந்த தடிமன் என்றுதானே கேட்கிறீர்கள்?
அந்த
போர்டில் தலைகீழ் அல்லது குறுக்குவாட்டில் இப்படி எதாவது கோணத்தில் base
அல்லது nuetral ஓட்டைகளில் earth pin -ஐ விவரம் அறியாதவர்களோ அல்லது
குழந்தைகளோ சொருகிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment