Skip to main content

மண்பாண்டம்_அதன்_முக்கியதுவம்

No photo description available.
Santhosh Kumar March 13  மாலை மலர் (12-3-2019) நாளிதழ்காக எழுதப்பட்டது.- மு.சந்தோஃச் குமார்
 









#மண்பாண்டங்களும்_நவீன_பாத்திரங்களும்மண்பாண்டங்கள் மனித குல நாகரீகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறப்பு பெற்றவை. சக்கரம் மற்றும் மண்பாண்டம் மரபு கண்டுபிடிப்பின் உச்சம் எனலாம். மனித குலம் தோன்றிய முதலே இதன் பயன்பாடும் தோற்றம் பெற்றது. அதன் தேவையை புரிந்து சிறப்பாக வடிவமைத்து பயன்படுத்திருக்கிறார்கள்.
உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களில் உணவைச் சமைத்ததும் உற்சாகமான மனநிலையில் அன்பையும் கரண்டி வழியே கலந்து பரிமாறிய காலம் போய் இன்று நவீனமயம் தான் பல்வேறு இன்னல்களுக்கு காரணம்.
உணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.
மண் பாண்டத்தில் ஆரோக்கியமாய் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம் என்பதோடு நில்லாமல் எவர்சில்வர், அலுமினியம் எனத் தொடர்ந்து, தற்போது... ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனைக்கு வந்து பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
அதுவே சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, உடல் வீக்கம், நுரையீரல் தொற்று, விரைவில் முதுமை, என இதர வியதிகளுக்கும் இந்த பாத்திரங்களுக்கும் தொடர்பு உண்டு.
நான்ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் ரசாயனம் உணவில் கலந்து உடலை பாதிக்கறது. அதனால் கருப்பை கோளாறு, புற்றுநோய், குழந்தையின்னை என பல குறைபாடுகளுக்கும் நோய்களுக்கும் வித்திடும்.
மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை, மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள், இன்று காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன.
விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக்கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.
இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.
பாத்திரம் என்ற வரிசையில்கூட அது வராதது வருத்தத்தை அளிக்கிறது.
மண்பாண்டமா அதில் சமைக்க முடியுமா என்று இன்றைய தலைமுறையினர் ஆச்சர்யாமக கேட்கும் அவல நிலையில் நாம் உள்ளோம். நமது தாத்தா பாட்டி காலத்தில் அதுதான் பிரதான உணவு சமைக்கும் பொருட்கள். இன்னும் சில கிராமங்களில் பயன்பாட்டில் உள்ளது ஆனால் சிறிதளவே. ஏனென்றால் இன்றைய நவீன தாக்கத்தால் அதன்பின் ஓடி கொண்டு இருக்கும் மக்கள் அலுமினியம், சில்வர், மைக்ரோஓவன் ஏன் சில பிளாஸ்டக் பைபர் ரகங்கள் என நவீனத்தின் பிடியில் உள்ளார்கள். ஆனால் இதில் சமைக்கும் உணவைவிட பலமடங்கு உயிர்சத்தும் ஆற்றலும் கொண்டது மண்பாண்ட சமையல். அக்காலத்தில் நேயின்றி அதிக காலம் உயிர் வாழ்தமைக்கு மண்பாண்டம் பயன்பாடு பெறும் பங்கு வகிக்கிறது. மண்பானையில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சமச்சீராக மெல்ல பரவுவதால் உணவை சீரான முறையல் சமைக்க ஏதுவாக இருக்கிறது. மேலும் இதில் இருக்கும் நூண்துளைகள் மூலம் நீராவி மற்றும் காற்று ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகின்றது. அதனால் ஆவியால் வேக வைத்த உணவு பக்குவம் கிடைப்பதால் சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு எளிதில் செரிமானமாகக் கூடிய உயர்தர உணவாக அமைகிறது. அத்துடன் மண்பாண்டம் உணவில் உள்ள அமிலத்தன்மையை சம்ப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவைகளை சமைக்கும் போது எந்த தீங்கான விளைவும் ஏற்படுத்தாமல் கட்டுபடுத்துகிறது. அதுபோல் அதிக எண்ணெய் பயன்படுத்த தேவையிருக்காது. உணவின் சுவையும் தன்மையும் கூடுவதோடு ஆரோக்கயத்தற்கும் உகந்ததாக இருக்கறது. இதில் வைக்கும் தயிர் மற்றும் மாவு வகைகள் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.
மண்சட்டிகளில் தயாரிக்கும் உணவு வகைகள் உயிராற்றலுடன் நம் ஆரோக்கியத்திற்கும், நம் உடல் நலனிற்கும் ஏற்றது. இயல்பாக மண்ணில் அதீத உயிர்சத்துக்கள் இருக்கும் ஆதலால் அதில் சமைக்கும் உணவு பதார்தங்களில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும். மற்ற உலோகப் பாத்திரங்களில் சமைத்த உணவு பலவகை நச்சுத்தன்மையை கொண்டதாக இருக்கிறது என ஏனைய ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கிறது. மண்பாண்டம் அப்படியில்லை முற்றிலும் பாதுகாப்பானது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உணவுப்ப பொருட்களை கெடாமல் நீண்ட நாள் பாதுகாக்கிறது அத்துடன் கீரை, காய்கறிகள், பழங்கள் மற்றும் மாவு என பலவகையான உணவு பொருட்களை சேமிக்கவும் உதவுகிறது.
மண் பானைகளால் செய்யப்பட்ட உணவுகளுக்கு தனி ருசி இருக்கும். ஆனால் தற்போதைய இயந்திர உலகத்துக்கு ஏற்ப அந்த மண் பானைகளிலும் சில புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன.
அந்த காலங்களில் நமது மூதாதையர்கள் களிமண்ணினால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருள்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் செய்த உணவு பொருள்கள் கூடுதல் ருசியுடனும், பிரிட்ஜ் இல்லாமல் நீண்ட நாள்களுக்கு கெடாமலும் இருந்தது.
மேலும் அவர்களுக்கு எவ்வித நோய் பாதிப்பும் இன்றி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர். இன்றும் பல் உள்ள, முடி நரைக்காத பாட்டிகளை நம்மால் காணமுடிகிறது.
ரகசியம் என்ன?
நமது மூதாதையர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்ததற்கு காரணம் கலப்படமற்ற பயிர்கள், உணவு தானியங்கள் என்று சொல்லலாம். எனினும் அவர்கள் தண்ணீர் அருந்த, உணவு சமைக்க, உண்ண களிமண்ணால் ஆன பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தனர். இதனால் இயற்கை காய்கறிகள், உணவு தானியங்களின் மூலம் கிடைத்த சத்துகளுடன் களிமண்ணில் உள்ள தாதுக்களும் அவர்களுக்கு கிடைத்தன.
மெல்ல மெல்ல குறைந்தது
பின்னர் களிமண் பாத்திரங்கள் பராமரிக்க முடியாததால் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறிவிட்டனர். எனினும் இன்று வரை அசைவ உணவுகளையும், கூழ் வகைகளையும் களிமண் பாத்திரத்தில் செய்தால் அதன் ருசியும் சத்தும் கூடும் என்பதால் பயன்படுத்தி வந்தனர்.
என்ன நவீன உலகில் பயனித்தாலும் களிமண்ணில் பாட்டி கையால் சாப்பிட்ட சுவையை இன்று வரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அம்மிகளும், உரல்களும் மிக்ஸி, கிரைண்டர்களாக மாறிவிட்டன.
மீண்டும் களிமண் பாத்திரங்கள்
தற்போது ஆங்காங்கே களிமண்ணால் ஆன பாத்திரங்கள் காணப்பட்டாலும் அவற்றை வெகு சிலரே வாங்கிக் கொள்கின்றனர். இதை கருத்தில் கொண்டு நவீன மங்கைகளுக்கு பயன்படுத்தி வரும் பாத்திரங்களில் களிமண் பொருள்களை கொண்டு செய்யப்படுகின்றன.
தற்போது மண்பானை குக்கர், வாட்டர் பாட்டில், பியூரிஃபையர், பான், கடாய் பொருள்கள் ஆகியன ராஜஸ்தான், குஜராத்தில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மண் பானைகளின் மகத்துவம் தெரிந்தவர்கள் இன்றும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
கரண்ட் இல்லாத பிரிட்ஜ்
மின்சாரம் பயன்படுத்தாமல் பிரிட்ஜ், அதுவும் களிமண்ணால் செய்யப்பட்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆம் 20 கிலோ கொண்ட அந்த பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட பொருள்களை வைத்தால் கெட்டு போகாமல், பிரஷ்ஷாக இருக்கும். மண் பானை குக்கர், வாட்டர் பாட்டில், தயிர் கப்கள், தண்ணீர் ஊற்றி வைக்கும் பானைகள் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோக பொருள்கள் உள்ளன. அவை குறைந்தபட்சம் ரூ.250-லிருந்து அதிகபட்சமாக ரூ.5,000 வரை உள்ளன. தண்ணீர் பானைகள் குஜராத்தில் உள்ள ஆற்று களிமண்ணில் இருந்து செய்யப்பட்டவையாகும்.
தற்போது விவசாயப் பயிர்களுக்கு பூச்சிகொல்லிகள் தெளித்து, செயற்கை உரங்கள் இடுவதால் உணவே விஷமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய குழந்தைகளுக்கு கொஞ்சமாவது இயற்கை சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த களிமண் பொருள்களை ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர். மண் பானைகளில் கால்சியம், பாஸ்பரஸ், சல்பர், மெக்னீஸியம் உள்ளிட்ட தாதுக்கள் உள்ளன. மண் பானைகளில் காரத் தன்மை உடையது என்பதால் அவை காரத்தனமை கொண்ட உணவுகளுடன் எளிதில் கலந்து நாம் தயாரிக்கும் உணவுகளின் அமிலக்காரத்தன்மையை முறையாக சமன் செய்கிறது. எனவே இயற்கைக்கு முழுவதுமாக இல்லையெனில் ஓரளவுக்காவது மாறுவோம்.
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்ட நிலையில் சமையலின் ரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண்பாண்டம் பொருட்களை பயன்படுத்துவோம்.
கோடையில் கொளுத்தும் வெயிலில் பத்தடி நடந்தாலே வியர்த்து மூச்சுவாங்குகிறது. அதிலும் தற்போது அக்னி நக்ஷத்திரத்தின் சுட்டெரிக்கும் வெயில் அனல் காற்றோடு தகிக்கிறது.
வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் தாகம் அதிகரிக்கும். தாகத்தை தணிக்க குடிநீர், குளிர்பானம், இளநீர் என பல இருந்தாலும் சுத்தமான குடிநீருக்கு நிகரேதுமில்லை. அதிலும் மண் பானை தண்ணீருக்கு நிகரே கிடையாது.
பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். அந்தக் காலத்தில் வழிப்போக்கர்களுக்குக்கூட தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து மண்பானைகளில் குளிர்ந்த தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது.
இன்று நகரங்களில்கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்... மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன்.
மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகறிக்கும் கருவி மண் பானை ஆகும்.
10 லிட்டர் தண்ணீர் மண்பானையில்
3 தேத்தான் கொட்டை,
1 துண்டு நண்ணாரி வேர்,
சிறிது வெட்டி வேர்,
6 மிளகு,
½ spoon சீரகம்,
அனைத்தையும் சிறிய வெள்ளை துணியில் மூட்டையாக கட்டி மண்பானை தண்ணீரில் இரவு முழுவதும் போட்டு வைக்கவும்.
இதன் பெயர் சத்து நீர் முடுச்சு.
காலையில் மூட்டையை பிரித்து சூரிய ஒளியில் வைக்கவும். இந்த சத்து நீர் முடுச்சை மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த நீரை பயன்படுத்தும் போது உயிராற்றல் அதிகரிக்கும்.
சாதாரனமாக மண்பானையில் பொங்கும் சோறு நல்லா ருசியாகவும் சத்து வெளியேறாமல் அப்படியே கிடைப்பதோடு எளிதில் செரிமானம் ஆகும் அந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அதில் மோர் தயிர் சிறிது உப்பு சேர்த்து அந்த பானத்தை அருந்தும் போது உடலுக்கு நல்ல வலுவை தருகிறது. இன்றும் பல உழவர்களின் அமுத பானமாக அந்த நீராகாரத்தை தான் பருகுகிறார்கள். அதுவே பாரம்பரிய அரிசியில் சமைத்த சோறாக இருந்தால் மூன்று நாள் கூட வைத்து அதை பருகலாம். இன்னும் ருசியாக உடலுக்கு குளிர்ச்சியும் ஆற்றலையும் தரும். வெப்ப காலங்களில் இதுவே சிறந்ம காலை உணவாகும்.
பஞ்சபூத தத்துவத்தில் மண்பானை குடிநீர் நில மற்றும் நீர் தத்துவத்தை குறிக்கிறது. மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள். இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.
மண், நீரின் கூறுகள்
மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை. நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர்.
பானை அற்புதமான வடிவம் அந்த வடிவத்தை பல தோல்விகளுக்குபின் நம் முன்னோர்கள் கண்டுபிடித்திருப்பார்கள்.
அந்த பொக்கிஷத்தை தவிர்த்து நோய்களுக்கு ஆர்பட்டுவிட்டோம். இன்றும் பல கிரமங்களில் அதை 'மண்சட்டி' என்று அழைக்காமல் 'பொன்சட்டி' என்பர். மரபுக்கு திரும்புவோம், ஏனெனில் அதுவே முழுமை அடைந்த வாழ்வியல்.
இயற்கையோடு இணைந்து ஆரோக்கியமாக இன்பமாக வாழ்வோம். மகிழ்வோடு இருப்போம்.
தொகுப்பு:
#மு_சந்தோஃச்_குமார்.
Cell:9965483828
Email id: spacemania3@gmail.com
Website:www.agriculturalist. org

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...