நாட்டு தென்னங்கன்று முழுசா நூறு நாட்கள் கடந்த பிறகே முளைப்பு வருது.. இதுவரைக்கும் ஜோடி 500 ரூபாய் (+பார்சல் கட்டணம் தனி )என்று 480 கன்றுகள் முன்பதிவு ஆகியிருக்கு.. சுமார் இருநூறு கன்றுகள் எங்களுக்கே தேவை.. இது போக இன்னும் இருநூறு கன்றுகளை கொடுக்லாம்.. வரும் ஐப்பசி அல்லது கார்த்திகை அதாவது நவம்பர் மாதத்திலிருந்து அனுப்ப துவங்குவோம்.. முன்பதிவு செய்தவங்க 2அடி ஆழம் 2 அடி அகளம்னு குழி எடுத்து வச்சுக்கோங்க.. கன்று வந்தவுடன் மணல் கிடைத்தால் ஒரு கூடை வீதம் குழியில் கொட்டி தென்னங்கன்றை நடவுசெய்திடுங்க.. அப்போதுதான் வேர் சுலபமா மண்ணில் இறங்கும்.. கன்றுகளை பட்டு போகாமல் தழைக்கும்.. வேறு எதுவும் நடவும் போது போடத்தேவையில்லை.. ஒட்டு ரகத்தை நடவுங்க பத்தே வருஷத்தில் காய்ப்பு ஊதி தள்ளிடும்னு சொல்லி ஏமாந்து ஒரு தென்னங்கன்று 350 ரூபாய்னு வாங்கி நடவு செய்து முட்டுவழி செலவு செய்து எட்டு ஆண்டுக்கு பிறகு தோண்டி எறிந்தெவர்கள் ஏராளம்.. இந்த நாட்டு கன்று பத்து வருஷத்தில் எல்லாம் காய்ப்பு ஊதி தள்ளாதுங்க.. பாலை பிடிக்கவே முழுசா அஞ்சு வருஷம் தேவைபடும்.. அதன் பிறகே மிதமான காய்ப்பு.. ...
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு