Skip to main content

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!





என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில்,
 உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து 
மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் 
தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும்,  
நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர்
 சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும்
 தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று 
 குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய 
அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று 
கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி,
 அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் 
பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது
 உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான
 
அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு
 நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் 
சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் 
பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் 
 இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"

காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

நண்பகலில் சுக்கு-

இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்)  
சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே 
இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் 
நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய 
பொக்கிஷமாகும்.

"ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்"

"இதை அனைவருக்கும் பகிர்வோம்"

"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

தகவல் சித்த மருத்துவம்


Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...