Skip to main content

தனிமனிதனின் மாற்றமே சமூகத்தின் மாற்றம்....





 
 
 
 


1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்கா நியூக்கிளியர்
 அணு குண்டு வீசியது...

71 ஆண்டுகள் கழித்தும் அமெரிக்காவால் ஒரு குண்டூசி கூட
ஜப்பானில் விற்பனை செய்ய இயலவில்லை.....!

ஜப்பான் அரசு அமெரிக்க நாட்டு பொருட்களுக்கு எந்த
தடையையும் விதிக்கவில்லை.

நம் நாட்டின் மீது இப்படி ஈவு, இரக்கம் இன்றி நச்சு அணுகுண்டு 
வீசி விட்டதே என "மக்களே எடுத்த தீர்க்க முடிவு".

ஆனால் நாம் சீன போரில் நம் கைலாயத்தையும் இழந்து நமக்கு
 தொடர்ந்து எல்லைப் பிரச்சனைகளை தரும் சீன பொருட்களை 
வாங்குகிறோம்.

ஜப்பானியர் தேசப்பற்று எங்கே?. நம் இந்தியர்களின் தேசப்பற்று 
எங்கே?.

தேசம் காத்த நம் முன்னோர்களின் உடல் பலிகளை மறந்து நாம் 
சீன பொருட்களை வெட்கம் இன்றி வாங்குகிறோம்.

COKE PEPSI தடை பண்ண சொல்லிபோராடுவது வீண்.....
முடிந்தவரை நாம் குடிக்காமல் இருந்தாலே போதும்.

TASMAC ஐ தடை செய்ய போராடுவது வீண், முடிந்தவரை நாம் 
குடிப்பதை நிறுத்திவிட்டாலே போதும்.

விவசாயிகள் பிரச்சினை பற்றி போராடுவது வீண். Super market ல்
 காய்கறி வாங்குவதை விட்டு சந்தையில் காய்கறி வாங்கினாலே 
போதுமானது.

அன்னியநாட்டு பொருட்களை இறக்குமதி செய்யாதே என 
கூறுவதை விட, நம் சொந்த நாட்டு தயாரிப்புகளை
 உபயோகித்தாலே போதுமானது.

அரசியல் வாதி சரியில்லை என்று கொடிபிடிப்பது வீண். நாம் 
எத்தனை பேர் நல்ல குடிமகனாக இருக்கிறோம் என்று 
சிந்தித்தாலே போதும்.

ஆக எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ஒவ்வொரு 
தனிமனிதனின் 

அலட்சியம், 
சோம்பேறித்தனம்,
சுயநலம் 
மட்டுமே காரணம்...

இவை அனைத்தும் மாறினால் மட்டுமே நம் நாடும் வீடும் 
செழிக்கும்...

தனிமனிதனின் மாற்றமே சமூகத்தின் மாற்றம்....


Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem