ஒருநாள்
கன்னிமேரி குழந்தை ஏசுவை
அழைத்துக் கொண்டு பூலோகம்
வருகிறாள்.
ஒரு
மடாலத்திற்கு செல்லுகிறாள்.
மாதாவைக்
கண்டவுடன் அவளுக்கு மரியாதை
செலுத்த அங்குள்ள துறவிகள்
ஒரு நீண்ட வரிசையில் வருகிறார்கள்.
மாதாவின்
மனதைக் கவர ஒவ்வொருவரும்
தங்கள் அறிவுத்திறனை
காட்டுகிறார்கள்.
ஒருவர்
ஒரு அருமையான கவிதையை
வாசிக்கிறார்;
இன்னொருவர்
பைபிள் கதை நிகழ்ச்சிகளைக்
கொண்டு தானே வரைந்த சித்திரங்களைக்
காட்டுகிறார்;
இன்னொரு
துறவி புனிதர் ஆக்கப்பட்ட
எல்லாருடைய பெயர்களையும்
சொல்லிக் காட்டுகிறார்.
கடைசியாக
ஒரு எளிய மனிதர் வருகிறார்.
அவர்
எந்தப் புத்தகத்தையும்
படித்ததில்லை.
அவரது
பெற்றோர்கள் ஊர் விட்டு ஊர்
செல்லும் ஓர் சர்க்கஸ்-
இல்
வேலை செய்பவர்கள்.
அவர்களிடமிருந்து
இவர் கற்றதெல்லாம் ஒரே ஒரு
வித்தைதான்.
பந்துகளை
வீசி எறிந்து அவை கீழே விழாமல்
மாற்றி மாற்றி கையால்
தட்டுவதுதான்.
எல்லோருக்கும் ஒரு வித பதற்றம் தொற்றிக் கொள்ளுகிறது. இவன் ஏதாவது ஏடாகூடமாகச் செய்யத் தெரியாமல் செய்து நமது மடாலயத்தின் கௌரவத்தை குறைத்துவிட்டால் என்ன செய்வது? எல்லோரும் தன்னை ஒருவித அதிருப்தியுடன் பார்ப்பதை கவனித்துக்கொண்டே அந்தத் துறவி தனது பையிலிருந்து சில ஆரஞ்சுப் பழங்களை எடுத்து அவற்றை மேலே எறிந்து அவை கீழே விழாமல் தனது கைகளால் மாற்றி மாற்றி தட்ட ஆரம்பித்தார்.
மேரி மாதாவின் மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை ஏசு இவர் செய்வதைப் பார்த்து புன்னகையுடன் தன் கைகளைத் தட்ட ஆரம்பித்தார். அதைப்பார்த்த கன்னிமேரி அவரைக் கூப்பிட்டு, ‘குழந்தையை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி அவரிடம் கொடுத்தாள்.
Comments
Post a Comment