Skip to main content

(இன்றைய தலைமுறைக்கு உழக்கு   என்றாலும் புரியாது ஆழாக்கு என்றாலும் தெரியாது.)

இன்றைய இளைய தலை முறையினர் அறிந்து கொள்ளும் பொருட்டு, இன்று வழக்கத்தில் இல்லாத பழைய அளவு முறைகளை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

அன்றைய பரப்பளவு
 144..சதுர அங்குலம்..= 1 சதுர அடி
9......
சதுர அடி............= 1 சதுர கஜம்
484..
சதுர கஜம்.........= 1 சதுர சங்கிலி
10...
சதுர சங்கிலி......= 1 ஏக்கர்

436.....
சதுர அடி.........= 1 செண்ட்
100.....
செண்ட்............= 1 ஏக்கர்
4,840..
சதுர கஜம்.......= 1 ஏக்கர்
640.....
ஏக்கர்................= 1 சதுர மைல்

0.33..
செண்ட் (144 சதுர அடி) = 1 குழி
100...
குழி...................................= 1 மா ( 33.06 செண்ட் )
4.......
மா....................................= 1காணி
20.....
மா ( 5 காணி )................= 1வேலி ( 6.61 ஏக்கர் )

56....
செண்ட்........= 1....குருக்கம்
100..
குருக்கம்......= 56 ஏக்கர்

5.50
செண்ட்.......= 1.....மனை ( GROUND )
24....
மனை..........= 1.....காணி
1......
காணி..........= 1.32 ஏக்கர்

இன்றைய பரப்பளவு . . . . . . . .


100
சதுர மீட்டர் . .= 1 ஏர் ( 2.4701 செண்ட் )
100
ஏர்ஸ் . . . . . . . = 1 ஹெக்டேர் ( 2.47 ஏக்கர் .
 
 அன்றைய நாணயங்கள் . . . . . . . . . . .


5
காசு . . . . . . . . = 1 பைசா
3
பைசா . . . . . . .= ¼ அணா ( காலணா )
2
காலணா . . . . = ½ அணா ( அரையணா )
2
அரையணா . .= 1 அணா
4
காலணா . . . . = 1 அணா
12
பைசா . . . . . .= 1 அணா
4
அணா . . . . . . .= ¼ ரூபாய் ( கால் ரூபாய் ) ( 2 இரண்டணாக்கள் )
8
அணா . . . . . . .= ½ ரூபாய் ( அரை ரூபாய் )

16
அணா . . . . . . . . . . . . . . = 1 ரூபாய்
192
பைசா . . . . . . . . . . . . . = 1 ரூபாய்
64
காலணா . . . . . . . . . . . .= 1 ரூபாய்
32
அரையணா . . . . . . . . . = 1 ரூபாய்
8
அரைக்கால் ரூபாய் . . = 1 ரூபாய்
4
கால் ரூபாய் . . . . . . . . .= 1 ரூபாய்
2
அரை ரூபாய் . . . . . . . .= 1 ரூபாய்

3
ரூபாய் . . . . . . . .= ¼ சவரன் ( கால் சவரன் )
5
கால் சவரன் . . = 1 சவரன்
15
ரூபாய் . . . . . . . = 1 பவுன் ( சவரன் )
3 ½
ரூபாய் . . . . . .=1 வராகன்

2
பைசா . . . . . . . . = 1 துட்டு
8
துட்டு . . . . . . . . .= 1 பணம்

பைசா, காலணா, அரையணா ஆகிய நாணயங்கள் செம்பு உலோகத்திலும்; 1 அணா, 2 அணா, 4 அணா ஆகிய நாணயங்கள் நிக்கல் உலோகத்திலும்8 அணா, 1 ரூபாய் ஆகிய நணயங்கள் வெள்ளி உலோகத்திலும்உருவாக்கப்பட்டிருந்தன.

காலம், நேரம், சமயம், பொழுது, பருவம், தருணம், கணம் – முதலிய சொற்கள் காலத்தைக் குறிக்கும் சொற்களாகும். காலம் என்பது பெரும் பொழுது, சிறு பொழுது – என இருவகைகளாக பகுக்கப்பட்டுள்ளன.

பெரும் பொழுது - (கால அளவு)

7
நாட்கள் . . = 1 வாரம்
2
வாரங்கள் = 1 பக்ஷம்
15
நாட்கள் . = 1 பக்ஷம்
30
நாட்கள் . = 1 மாதம்
4
வாரங்கள் = 1 மாதம்
2
பக்ஷங்கள் = 1 மாதம்
2
மாதங்கள் = 1 ருது ( பருவம் )
6
மாதங்கள் = 1 அயனம்
3
ருதுக்கள் . = 1 அயனம்
12
மாதங்கள் = 1 ஆண்டு
6
ருதுக்கள் . .= 1 ஆண்டு
2
அயனங்கள் = 1 ஆண்டு

45
நாட்கள் = 1 மண்டலம்

(
வளர் பிறை ) பூர்வ பக்ஷம், ( தேய் பிறை ) அமர பக்ஷம் – என இரு பக்ஷங்களைக் கொண்டது 1 மாதமாகும்.

(
சூரியன் வட திசையில் சஞ்சரிக்கும் ) உத்ராயனம், ( சூரியன் தென் திசையில் சஞ்சரிக்கும் ) தக்ஷினாயனம் – என ஆண்டுக்கு இரு அயனங்கள் ஆகும்.

பருவங்கள்

1.
இளவேனில் காலம் - - சித்திரை,வைகாசி
2.
முதுவேனில் காலம் - ஆனி,ஆடி
3.
கார் காலம் - - - - - - - - - ஆவணி,புரட்டாசி
4.
குளிர் காலம் - - - - - - - -ஐப்பசி,கார்த்திகை
5.
முன்பனிக் காலம் - - - - மார்கழி,தை
6.
பின்பனிக் காலம் - - - -மாசி,பங்குனி
சிறு பொழுது  (கால அளவு)

60
வினாடிகைகள் = 1 நாழிகை
நாழிகைகள் . . .= 1முகூர்த்தம்
நாழிகைகள் . . .= 1 ஜாமம்
2
முகூர்த்தங்கள் . = 1 ஜாமம்
60
நாழிகைகள் . . . = 1 நாள்
8
ஜாமங்கள் . . . . . .= 1 நாள்

24
நிமிடங்கள் . . . .= 1 நாழிகை
2 1/2
நாழிகைகள் .= 1 மணி
1
முகூர்த்தம் . . . . = 1½ மணிகள்
1
ஜாமம் . . . . . . . . .= 3 மணிகள்

10
நாழிகைகள் = 1 காலம்
4
மணிகள் . . . . = 1 காலம்
6
காலங்கள் . . .= 1 நாள்

1.
காலை(முற்பகல்) - - - - - - (1-10 ) - - (6.01-10.00)
2.
மதியம் (நண்பகல்) - - - - - -(11-20) - -(10.01-2.00)
3.
ஏற்பாடு (பிற்பகல்) - - - - - -(21-30) - - (2.01-6.00)
4.
மாலை (முன்னிரவு) - - - - (31-40) - - (6.01-10.00)
5.
யாமம் (நள்ளிரவு) - - - - - -(41-50) - - (10.01-2.00)
6.
வைகரை (அதிகாலை) - - (51-60) - - (2.01-6.00).

முகத்தல் அளவுகள்

1
ஆழாக்கு = 1/8 (அரைக்கால்) படி
2
ஆழாக்கு = 1/4 படி
4
ஆழாக்கு = 1/2 படி
8
ஆழாக்கு = 1 படி


2
ஆழாக்கு = 1 நாழி (1/4 படி)
2
நாழி (4 ஆழாக்கு) = 1/2 படி
4
நாழி (8 ஆழாக்கு) = 1 படி


8
படி . . . . . . . = 1 மரக்கால் (குறுணி)
12
மரக்கால் (96 படி) = 1 கலம்
2
கலம் (192 படி) . . = 1 மூட்டை
10
மூட்டை . . . . = 1 வண்டி


20
ஆழாக்கு = 1 காலன்


21
மரக்கால் . . . . . . . . = 1 கோட்டை
5
மரக்கால் (40 படி) . . . = 1 பரை
80
பரை (400 மரக்கால்) = 1 கரிசை


8
படி . . . . . . . . . . . . . . = 1 குறுணி (1 மரக்கால்)
2
குறுணி (2 மரக்கால்) = 1பதக்கு
3 குறுணி (3 மரக்கால்) = முக்குறுனி *அன்புடன் திருமலை*.

பகிர்ந்தவர் : வில்பிரட்
Posted










Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...