Skip to main content

கோடை விடுமுறை டிப்ஸ்









போர் அடிக்குது என்று சொல்லும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம் – கோடை விடுமுறை டிப்ஸ்
கோடை விடுமுறையில் மீண்டும் இந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ், அபாகஸ், கையெழுத்து, கணிதம், கம்ப்யூட்டர் என பல பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புவதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மூளைப் பகுதியில் உள்ள ஹிப்போ கேம்பஸ் பகுதியில் காணப்படும் நரம்பு செல்கள் அழிந்து, நினைவாற்றல், கற்றல் திறன்களை பாதிக்கின்றன. மாறாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்:
அவர்களிடம் அதிகமாகப் பேசுங்கள், இதனால் அவர்கள் நண்பர்கள் சொல்வதைக் கேட்பதை விட நீங்கள் சொல்வதை நம்புவார்கள்.
கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, ஜூ, பறவைகளுக்கு உணவளிக்க, மீன்களுக்கு உணவளிக்க, குழந்தைகள் காப்பகம், மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவு, முதியோர் இல்லம், அரசாங்க அலுவலகங்கள் என வித்தியாசமான இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
சிறிய தோட்டம் போட்டு, பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வையுங்கள். பறவைகளின் வாழ்க்கையை அமைதியாக நோட்டமிட வையுங்கள்.
அன்பு, கருணை, பிரியம் போன்றவற்றை பணத்தால் வாங்க முடியாது அதைக் கொடுத்தால் தான் நமக்கு அவை திரும்பக் கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.
கம்ப்யூட்டர் மற்றும் தொலைக் காட்சி முன்பு இருப்பதை விட நண்பர்களுடன் இணைந்து விளையாடுவதை ஊக்குவியுங்கள்.
வீட்டில் சிறிய பொறுப்புகளைக் கொடுத்து முடிக்கச் செய்யுங்கள்.
எளிதான ஆரோக்கியமான சமையல் செய்ய சொல்லிக் கொடுங்கள்.
உறவினர் வீட்டிற்கு செல்லும் போது, அவர்கள் கையால் செய்த சிறிய பரிசை கொடுக்கச் சொல்லுங்கள்.
உடற்பயிற்சியை அவர்களுடன் இணைந்து செய்து கொண்டாடுங்கள்.
சிறிது பணத்தைக் கொடுத்து, மினி பட்ஜெட் போட்டு செலவளிக்கவும், சேமிக்கவும் கற்றுக் கொடுங்கள்.
கூட்டாக விளையாடும் விளையாட்டு பயிற்சிக்கு அனுப்பி, கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள்.
புத்தகம் வாசிக்கப் பழக்குங்கள்.
சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், வளமாவும் வைத்துக் கொள்ள நண்பர்களுடன் இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்.




Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem