Skip to main content

திருமணம்

Image may contain: one or more people and text
Venkatesan Nava to நம்ம கடலூர் (Namma Cuddalore )


ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து.....
ஒழுக்கம் பார்த்து,
மரியாதை பார்த்து,
படிப்பு பார்த்து,
பண்பு பார்த்து,
குலம் பார்த்து,
குடும்பம் பார்த்து,
எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்.....

நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதில் அம்மாவை விட சந்தோஷம் யாருக்கும் இருக்காது...

திருமணம் முடிந்தும் ஒரு சில நாட்களுக்கு நிறைய சம்பிரதாயங்கள் இருப்பதால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை,

இதற்குள் முதலிரவு முடிந்திருக்கும், கணவன் மனைவிக்கு இடையே ஒருவித நெருக்கம் உருவாகியிருக்கும் ...

சொந்தபந்தங்கள் எல்லாம் ஊருக்கு சென்றபின் காலையில் எழுந்து காபி போடப்போன அம்மாவுக்கு உதவிசெய்ய மருமகளும் கிச்சனில் வந்து நிற்க....

இருபத்தைந்து வருடங்களாக தன் கட்டுப்பாட்டில் இருந்த சமையலறையில் முதன்முறையாக உரிமையோடு இன்னொரு பெண் வந்து நிற்கிறாள்....எல்லா அம்மாக்களுக்கும் ஏற்படுகிற முதல் சிறுபயம்.......

அவனுக்கு காபி strong கா இருந்தாதாம்மா புடிக்கும் !நான் போட்டுதர்றேன் கொண்டுபோய் கொடு!...

மருமகள் காபியை கொண்டுசென்று யதார்த்தமாக கதவை சாத்திக்கொள்ள, அம்மாவுக்கு மட்டும் படபடப்பாகவே இருக்கும்,....

பின் கணவனுக்கு பறிமாறல்,
கை கழுவ தண்ணீர் தருதல்,
அவ்வப்போது ரகசியமான சிணுங்கல் பேச்சு,
எப்போதும் மகனுடனே இருப்பது,
மகனும் அவளுடனே இருப்பது
என அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அம்மாவுக்கு எதையோ இழந்தது போன்ற தடுமாற்றத்தை உண்டாக்கும்....

இவ்வளவு நாள் எழுப்பிவிடுவதில் இருந்து
காப்பி கொடுப்பதுசாப்பாடு பறிமாறுவது,
துணி துவைப்பது, காத்திருப்பது,
கால் அமுக்குவது என எல்லாவற்றுக்கும் தன்னை எதிர்பார்த்த மகனுக்கு இவை எல்லாவற்றையும் செய்ய புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள், அப்படியென்றால் என்னுடைய உரிமை??......

அவன் என் மகன்,
முதல் உரிமை எனக்குதான்,
என்று நினைக்கத்துவங்கிய மனம் மருமகளை போட்டியாக நினைக்க ஆரம்பிக்கிறது, அவனுக்கு நான் முக்கியமா இல்லை நீ முக்கியமா?.....

என்கின்ற போட்டிக்கு பின்னால் இருக்கின்ற உளவியல் ரீதியான பொஸஸிவ்நஸ்ஸை புரிந்துகொள்ளாமல் மருமகளும் தன்னை எந்த வேலையும் செய்யவிடுவதில்லை, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க என்று தன் பங்கு போட்டியையும் உரிமை சண்டையையும் துவங்க அது மெல்ல வளர்ந்து மகனால் எந்தபக்கமும் பேசமுடியாமல் எதாவது ஒரு டென்ஷனில் அம்மாவை திட்டிவிட அந்த நொடிமுதல் அம்மாவின் மனம் உடைந்துபோய் தன் மகன் மனைவிபேச்சை கேட்டு என்னை உதறித்தள்ளிவிட்டான் என்று புலம்பத்தொடங்கிவிடும்......

அதை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாது
இதை எப்படி சரிசெய்வது?....

இதை சரிசெய்யும் சக்தி மருமகளுக்கு மட்டுமே இருக்கிறது,....

திருமணமாகி வந்தவுடன் கணவனுக்கு நெருக்கமாவதற்கு முன் மாமியாருடன் நெருக்கமாகி முதலில் அவர் உங்களுக்கு மகன், அதன் பிறகுதான் என் கணவன், அதனால் முதல் உரிமை உங்களுக்கு தான் என்கின்ற நம்பகத்தன்மையை அவர் மனதில் விதைக்க வேண்டும்......

அப்படி விதைத்தால், அம்மாவின் மனது திருப்தி அடைந்து மருமகளை யாரோ என்று நினைக்காமல் மகள் போல் நினைத்து மகனை விட்டுகொடுத்துவிடுவார்!.....

ஆனால் அப்படி எந்த மருமகளும் செய்வதில்லை, வரும்போதே கணவன் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதிலேயே இவர்களது முழுகவனமும் இருக்கிறது....

இதனால் 25 வருடமாக வளர்த்த அம்மாவின் மனம் தன்னிடமிருந்து மகனை பிரிக்கவந்த எதிரியாக மருமகளை வெறுப்புடன் பார்க்க தொடங்குகிறது...

Possessivenessம்அடிப்படைஅளவுக்கதிகமான அன்புதான்....

அவ்வளவு அன்புகொண்டவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்த மாட்டார்கள்....

பொம்மையை பிடுங்கும்போது குழந்தைக்கு ஏற்படும் அதே வலிதான் ஒவ்வொரு அம்மாவுக்கும்.......

அந்த பொம்மையை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் உணர்த்திவிட்டு கொஞ்சம் காத்திருங்கள்....

அந்த குழந்தையே முழு சந்தோஷத்துடன்
அந்த பொம்மையை உங்களுக்கு கொடுத்துவிடும்....

உங்கள் மகனை பிரித்து செல்ல வரவில்லை
உங்களிடமிருந்து யாரும் பிரித்துவிடகூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்பதை மட்டும் புரியவையுங்கள்....

உங்களுக்கு கணவன் மட்டுமல்ல போனஸாக ஒரு அம்மாவும் கிடைப்பாள்!...

படித்ததில் பிடித்தது!நன்றி வணக்கம் !...

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...