Skip to main content

வார்த்தை சுத்தம் உள்ள மனிதர்களை எங்கேயாவது பார்த்தீர்களா?





ஆஹா! அருமையான கேள்வி !!

வார்த்தை சுத்தமுள்ள மனிதர்தானே!

ஒருவரல்ல பலரை :- பார்த்ததில்லை ,படித்ததுண்டு,அந்த உணர்வில் கலந்து உணர்ச்சியில் சிலிர்த்ததுண்டு..காளையார் கோவில் ரதம் -கோவி மணிசேகரன்

காளையார் கோவிலுக்கு ரதம் ஒன்று வேண்டும் .நமது வாளையும் வேல்கம்பையும் பிரிட்டிஷாரின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் நெருங்குவதற்கு முன் சிவகங்கைச் சீமையின் பெருமையை சரித்திரத்தில் கலைத்தூணாக காலம் உள்ளளவும் அது நிற்கச்செய்ய ,எண்ணியது திண்ணமுடன் செய்து முடித்திட யார் பொருத்தமானவர் ? ஆய்ந்து, அறிந்து அழைத்து வாருங்கள் .ஆணையிட்டார்பெரியமருது .

குப்பமுத்து ஆசாரி அழைத்துவரப்பட்டார் .

"மன்னா மன்னிக்கவும் .தொன்மை கலைகள் எல்லாம் பிரிட்டிஷாரிடம் அழிபட்டுப் போகின்றன ,காத்திடுதல் சிரமம் "என்றார் ஆசாரி.

தக்க ஏற்பாடுகள் செய்வோம் .தயக்கம் வேண்டாம் என்றார் மன்னர்.

வனங்களில் இருந்து மரங்கள் கொண்டுவரப்பட்டன. துணைக்கு ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் வேலையை தொடங்கினார் ஆசாரி. முதலில் விநாயகர் வரைந்தார் .உளியை பிடித்தார் செதுக்க ஆரம்பித்தார் .உளி புரண்டு துதிக்கை உடைந்தது .கொஞ்சம் குழப்பமடைந்து நாடி பார்த்தார்; அமைதியானார் .

அழகான ரதம் .அற்புதமான வேலைப்பாடுகள் .ரதத்தின் அழகு காண்பவரை எல்லாம் வசீகரித்தது குப்பமுத்து ஆசாரியினைபுகழாதவர் எவருமில்லை .வேலை முடிந்து

வெள்ளோட்டம் விடும் நாள் வந்தது .

பட்டாடை அணிந்து ,மணிமுடி தரித்து ,நகர்வலம் வர பெரிய மருதுவும் சின்ன மருதுவும் ரதத்தின் மீது அமர்ந்தனர் .

இறைவனை வாழ்த்தி, மன்னனை வாழ்த்தி வேதம் முழங்க ,மத்தளம் கொட்ட ,மங்கலமொழி சொல்ல மக்கள் மகிழ்ச்சியோடு ரதம் இழுத்தனர் .ரதம் துளியளவு கூட நகரவில்லை .ஆசாரியை அழைத்தார் பெரியமருது ,காரணம் கேட்டார் .ரதம் தட்ஷனை கேட்கிறது என்றார் ஆசாரி .கீழே இறங்கினார் மன்னர் .நினைத்ததை தருகிறேன் தயங்காமல் சொல்லுக என்றார் .

ஆசாரி கேட்டதும் அதிர்ச்சியில் சின்னமருதுவும் மக்களும் ஆடிப் போனார்கள் .

ஆம் !ஆசாரி அரியணையைக் கேட்டார் !ரதம் ,நிலைக்கு வரும்வரை நான் மன்னனாகவும் வேண்டுமென்றார் .

உடைவாளை கையிலெடுக்க புகுந்தார் சின்னமருது .ஆசாரியின் பேராசையை கண்டு ரத்தம் கொதித்தது மக்களுக்கு.

"கொடுத்த வாக்கை மீற மாட்டேன் "ரதம் நிலைக்கு வரும்வரை நீங்களே !சிவகங்கைச் சீமையின் மன்னன் .மன்னனின் வாக்கை மக்கள் மதிக்க வேண்டும் என்று அமைதிப்படுத்தினார் பெரியமருது ..மணிமுடியை ஆசாரியின் தலையில் சூடினார்.குப்ப முத்து ஆசாரி :குப்பமுத்து பாண்டியனார் ஆனார்.

ஜெய கோஷங்கள் முழங்க ,மன்னர் குப்பமுத்து பாண்டியனார் ரதத்தில் ஏறி அமர்ந்தார் .ஏறுமுன் ரகத்தை சிறிது தட்டினார். ரதம் இப்பொழுது நகர ஆரம்பித்தது .

ஆட்டம் ,பாட்டம் ,வேடிக்கையுடன் ரதம் நகர உலா வந்தது .நிலைக்கு வரும்போது ,ரதம் வேகமாக உருண்டு குப்பமுத்து பாண்டியனார் நிலைதடுமாறி கீழே ரதத்தின் சக்கரத்தின் இடையில் விழுந்தார்.

விழுந்தது மன்னர் அல்லவா !பதறினர் அனைவரும் !ரத்தவெள்ளத்தில் குப்பமுத்து பாண்டியனார் .ஓடிவந்தனர் மருது சகோதரர்கள் .உயிரை காப்பாற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார் .

அமைதியாய் இருந்தார் குப்பமுத்து பாண்டியனார். எழுதப்பட்ட ஓலையை இடையில் இருந்து எடுத்து மருதுவிடம் கொடுத்தார் .

மன்னா மன்னிக்க !

"முதல் நாள் வேலையில் ,விநாயகர் துதிக்கை உடைய ,நாடி பார்த்தேன் ."வெள்ளோட்ட தேதியன்று தேர் நிலை வரும்போது மன்னன் மடிவான் திண்ணம் .என்றிருந்தது .மன்னரரைக் காக்க ,மன்னனாய் வேடம் கொண்டேன் .மன்னித்து விடுங்கள் "என்று எழுதியிருந்தது .

மன்னர் அழுதார் ,மக்கள் அழுதனர் ,,குப்ப முத்து ஆசாரியின் செயல் கண்டு வானமே அழுதது .

உங்களுக்கு ஒரு கேள்வி :

நடந்த சம்பவத்தில் வாக்கு சுத்தமானவர்கள் யார் ?

குப்பமுத்து ஆசாரிக்கு கொடுத்த வாக்கை மீறாமல் மகுடம் சூட்டிய மன்னனா ?

ஆசாரி ஒருவரை ,மன்னர் சொன்னதால் ,மன்னராக ஏற்றுக்கொண்ட குடி மக்களா ?

மரணம் அடைவோம் என்று தெரிந்தும் மன்னர் கொடுத்த வேலையை நிறுத்தாது பணி முடித்து கொடுத்த குப்ப முத்து ஆசாரியா?

வார்த்தை சுத்தமானவர்கள் ,வாழ்ந்துதான் இருந்திருக்கிறார்கள் !நமக்குத் தெரியாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ,

நன்றி !வாசித்தவர்களுக்கும்,கேள்வி கேட்டவருக்கும் .

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

+6   அய்யனார் தங்கவேலு ஆலகிராமம் October 20, 2017 இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல ் விக்கிறான். உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான். மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் . நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான். இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான். Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம். நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செ...