Skip to main content

Fidel Castro

Image may contain: 2 people, people standing and outdoor
எல்லாம் தெரிந்துகொள்வோம். எந்தக் கடவுளும் நம்மைத் தடுக்காது. முடிவு உங்கள் கையில். என்ன..?.

#கியூபாவில் பெரும் இயற்கைப் பேரிடர் வந்து மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்!

"உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவைத் தடுத்து நிறுத்துங்கள்! மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள்", எனப் பிடல் காஸ்ட்ரோ கெஞ்சினார்!

அமெரிக்காவுக்குப் பயந்து எந்த நாடுகளும் உதவி செய்யவில்லை.

பெரும் இழப்பிற்குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப் பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன!

அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர், அய்ரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில், கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையைப் பிடல் உருவாக்கினார்.

உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது. அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாய் மருத்துவச் சுற்றுலா செல்ல தொடங்கினார்கள்.

இவ்வளவு மருத்துவப் புரட்சியைச் செய்த பிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்பு செய்தார்!

உலக நாடுகளே!உங்கள் நாட்டில் பிரச்சினை என்றால் நாங்கள் மருந்து, மாத்திரைகள் அனுப்புகிறோம்; எங்கள் மருத்துவர்களும் இலவசமாக வந்து பணிபுரிவார்கள்", என்று அறிவித்தார்.

அவ்வகையில் 95 நாடுகளுக்கு இதுவரை 2 இலட்சம் மருத்துவர்களைக் கியூபா அனுப்பியுள்ளது.

இன்றைக்கு 'கொரோனா' வந்த மனிதரை எப்படித் தனிமைப்படுத்தி வைக்கிறார்களோ, அப்படி 60 ஆண்டுகளாக இந்தக் கியூபாவை அமெரிக்கா தனிமைப் படுத்தி வைத்தி இருக்கிறது!

அவ்வளவு மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்தக் கியூபா!

இதோ! பிரிட்டன் போன்ற நாடுகள் எவ்வளவோ கெடுதல் செய்தாலும், அந்த மக்களையும் காப்பாற்ற கியூபா தான் முன் வந்துள்ளது!

எல்லா நாடும், தனது நாட்டு எல்லையை மூடி சொந்த நாட்டு மக்களைக் கூட உள்ள விடமாட்டேன்னு சொல்லுறான்...ஆனால், கொரோனா பாதித்த சுமார் 600 பிரிட்டீஷ் பயணிகளை ஏற்றி வந்த கப்பலை, அனைத்து நாடுகளும் திருப்பி அனுப்பிய போது....
கியூபா தனது துறைமுகத்தில் அனுமதித்து...தஞ்சம் கொடுத்துள்ளது...மருத்துவம் வழங்கி அவர்களை குணப்படுத்த முன்வந்துள்ளது...

கியூபா என்னும் சின்னஞ்சிறு நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் உட்பட ராஜீய ரீதியான தடைகள் அனைத்தையும் ஏவி, மற்ற நாடுகளையும் அதற்காக நிற்பந்தித்து வரும்...உலகின் பொருளாதாரப் புலிகள் எல்லாம்... தெறிச்சு ஓடும் போது...இந்த நோயைக் கண்டு பதறாமல் நின்று எதிர்கொள்ளும் கியூபா தான் இன்றைய உலகின் ஹீரோ...!

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem