Skip to main content

தபால்காரன்.---குறுங்கதை






From s.raa's website
குறுங்கதை 24
தபால்காரன்.
தனக்குத் தானே தபால் எழுதிக் கொள்ளும் ஒருவர் இருந்தார். எழுபது வயதைக் கடந்துவிட்ட அவர் தனியே வசித்தார். அவரது இருபதிமூன்றாவது வயதில் மனைவி இறந்து போனார். அதன்பிறகு அவர் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவு என்று அவரைத் தேடி வர எவருமில்லை.
அவருக்குச் சொந்தமாக மலைச்சரிவில் கொஞ்சம் நிலம் இருந்தது. அதன் ஒரு பகுதியில் வீடு அமைத்துக் கொண்டு வீட்டின் பின்னால் காய்கறிகள் விளைவித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரது தோட்டத்தில் இரண்டு பிளம்ஸ் மரங்கள் இருந்தன.
எந்த வயதில் அவர் தனக்குத் தானே கடிதம் எழு துவங்கினார் என்று தெரியவில்லை. ஆனால் அன்றாடம் காலை உணவை முடித்தவுடன் அவர் கடிதம் எழுத ஆரம்பிப்பார். ஒவ்வொரு சொல்லாக யோசித்து எழுதுவார். அதுவும் தபால் அட்டையில் தான் கடிதம் எழுதுவார்.
பெரும்பாலும் அந்தக்கடிதத்தில் அவர் சுற்றுப்புறத்தில் கேட்ட பறவையின் குரல் பற்றியோ, பிளம் மரத்திலோடும் அணில் பற்றியோ, சாலையினைக் கடந்து செல்லும் பள்ளிச்சிறுமிகள் பற்றியோ அல்லது அன்று சாப்பிட்ட காலையுணவின் ருசி பற்றியோ தான் எழுதுவார். அரிதாகச் சில நேரம் தன் பால்ய நினைவுகளை விவரிப்பார். சில நாட்களில் எழுதுவதற்கு வார்த்தைகள் தோன்றாத போது தபால் அட்டையில் ஏதாவது படம் வரைந்து அனுப்புவார்.
தனக்குத் தானே பேசிக் கொள்வதைப் போன்றது தான் தனக்குத் தானே எழுதிக் கொள்வதும். எத்தனையோ பேர் டயரி எழுதுகிறார்கள். நான் அதற்குப் பதிலாகக் கடிதம் எழுதிக் கொள்கிறேன் என்று சுயசமாதானம் சொல்லிக் கொள்வார்
ஒருவன் தனக்குத் தானே கடிதம் எழுத துவங்கும் போது தான் தன்னை அறிந்து கொள்ளத் துவங்குகிறான். தன்னைக் கொண்டாடத் துவங்குகிறான். தன் சரி தவறுகளைக் கண்டறிகிறான். சொற்கள் தானே உண்மையான கண்ணாடி.
கடிதத்தைத் தபால் பெட்டியில் போடுவதற்காக மலையடிவாரம் வரை நடந்து போவார். அதற்கு ஒரு மணி நேரமாகும். சிவப்பு தபால் பெட்டியில் கடிதத்தைச் சேர்த்துவிட்டு மலையேறி வீடு வந்து சேர மதியமாகிவிடும். முதல் நாள் அவர் போட்ட கடிதம் மறுநாள் மாலை அவர் வீட்டிற்கு வந்து சேரும். ஆரம்ப நாட்களில் தபால்காரனுக்கு இது என்ன முட்டாள்தனம் என்று தோன்றியது. ஆனால் அவனுக்கும் தலை நரைக்கத் துவங்கியதும் தன்னைத் தவிர ஒரு மனிதனுக்கு வேறு துணையில்லை என்ற பட்டது.
தனக்கு வந்த கடிதத்தை அவர் ஒரு போதும் படிப்பதில்லை. அப்படியே மர பீரோவில் போட்டுவிடுவார்.
தபால் எழுதுவதும் தபாலைப் பெறுவது தரும் மகிழ்ச்சி தானே முக்கியம்.
தபாலைப் பயன்படுத்துகிறவர்கள் குறைந்துவிட்டார்கள் என அந்த மலை நகரிலிருந்த தபால் நிலையம் மூடப்பட்டது. சிவப்பு நிற தபால் பெட்டியை இப்போது திறப்பதேயில்லை. ஆனாலும் அவர் தபால் எழுதுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. தபால் பெட்டியில் போட மாட்டார். அதன்பிறகு தபால்காரன் வருவது நின்று போனது.
அவருக்கு இருந்த ஒரே வருத்தம் ஒரு தபால் வருவதன் சந்தோஷத்தைக் கூட ஏன் உலகம் பறித்துக் கொள்கிறது என்பதே.
அதை யாரிடம் சொல்லிப் புலம்புவது என்று தான் அவருக்குத் தெரியவில்லை.


 http://www.sramakrishnan.com/?p=10098

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem