Skip to main content

படித்ததை பகிர்கிறேன்

பால்காரர் ஒருவர் தன் பசுவை இழுத்துக் கொண்டு ரோட்டோரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது.
அகலம் குறைந்த அந்த ரோட்டில் சைக்கிள், பைக் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது.
பால்கார்ர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை.
அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார்.
தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை.
அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார்.
நகராமல் நின்ற பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது.
மல்யுத்த போட்டியொன்றில் வெற்றி பெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார்.
ஒரு பசுவை ரோட்டிலிருந்து நகர்த்த மூன்று பேர் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளைப் பார்த்து நகைத்தார்.
மூன்று பேரையும் நகரச் சொல்லி விட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை.
அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான். அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவின் முகத்தருகே காட்டினான். பசு புல்லை சாப்பிட எழுந்தது.
சிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது.
தங்கள் பலங்களை காட்டி பிரச்னைகளை சீர்செய்ய சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் சில எளிய நிகழ்வுகளில் தான் கற்றல் தானாகவே உருவாகிறது என்பதை அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.

அன்பினால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை!

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem