Skip to main content

"எலுமிச்சை சாதம்"

 
 நம்ம குப்புசாமிக்கு அப்போ திருமணம் ஆன புதுசு..
நிறைய கனவுகளோடு இருந்த குப்புசாமி, திருமணத்திற்கு பெரிசா எந்த கோரிக்கையும் வைக்கல...
அவர் கேட்டது ஒரே ஒரு கோரிக்கைதான். மனைவியா வரப்போறவளுக்கு நல்லா சமைக்க தெரியணும்னு.
மாமனார், மாமியார், மைத்துனர் ஆகப் போகிறவர்கள், தரகர், மணப்பெண்ணோட அக்கா, அவங்க பக்கத்துக்கு வீட்டு பெண்கள் எல்லோருமா சேர்ந்து "பிரமாதமா சமைப்பாள்..!" சொல்ல, தனது மற்ற எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாத போதும் அவற்றை ஒதுக்கிவிட்டு, ஆர்வத்துடன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் குப்புசாமி.
தடபுடலாக திருமணம் நடந்தது. அதன் பின் விருந்து அது இதுன்னு ஒரு வாரம் ஓடிப்போச்சு. புதுமண தம்பதிகள் தங்கள் இல்லற வாழ்வை தொடங்கினார்கள். விடியற்காலையிலேயே குதூகலமாக உழவர் சந்தைக்கு போன குப்புசாமி அங்கிருந்து எல்லா வகையிலும் காய்கறிகள் வாங்கி வந்தார்.
ஆவலுடன் காலை உணவு எடுத்துக்கொள்ள அமர்ந்த குப்புசாமிக்கு பெரிய தலை வாழை இலை போட குப்புசாமி காலையிலேயே பெரிய விருந்து தயாராகிவிட்டது என மகிழ்ந்தார். சீர்வரிசையோடு வந்த சில பலகாரங்களோடு இலையில் எலுமிச்சை சாதத்தை பரிமாறிவிட்டு சென்றார் புது மனைவி. ரொம்பவே ஏமாந்த குப்புசாமி, இன்னும் அடுக்களை செட் ஆகல போல.. மதியம் விருந்து கிடைக்கும்னு நினைச்சிகிட்டே சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டார். ஆனால் இதே நிலைமை மதியம் மட்டுமல்ல இரவும் தொடர்ந்தது. அடுத்த நாளும்.. அடுத்த வாரமும்..
வாங்கி வந்த காய்கறிகள் போல குப்புசாமியின் நாக்கு துவண்டது. அழுகிபோன காய்கறிகள் போல மனம் புழுங்க ஆரம்பித்தது. தாங்கமுடியாமல் மனைவியை இதெல்லாம் ஏன் என கேட்க "தனக்கு இது மட்டும்தான் சமைக்க தெரியும் என சொல்ல தலையில் இடி விழுந்தது. கோபத்தில் நரம்புகள் துடித்தது. மனைவியை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டுக்கு போனார். நடந்ததை அங்கெ சொல்லும் முன்னரே மாமியார் சட்டென இலை போட்டு சாப்பிட சொன்னார்கள். ஒரு வாரம் செத்த நாக்கோடு இருந்த குப்புசாமி, முதலில் நல்ல சோறை தின்போம் பிறகு பேசிக்கொள்ளலாம் என சாப்பிட அமர்ந்தார்..
அந்தோ பரிதாபம்.. திடுதிப்புனு வந்திட்டீங்களா மாப்பிள்ளை..! வீட்டில் காய்கறி எதுவுமில்ல. அதனால் அவசரத்துக்கு எலுமிச்சை சாதம் செஞ்சிட்டேன்" என சொல்லி எலுமிச்சை சாதம் வைக்க குப்புசாமி வெகுண்டு எழுந்தார். பிரச்சினை எதையும் பேசாமல் மனைவியை அங்கேயே விட்டு விட்டு இரவு வீடு வந்து சேர்ந்தார். "நீ வரேன்னு சொல்லவேயில்லை.. நாங்க எதுவும் சமைக்கல.. நாங்க எல்லோரும் இன்னைக்கு கோவில் பிரசாதம்தான் சாப்பிட்டோம்னு சொல்லிகிட்டே அவங்க அம்மா, எலுமிச்சை சாதத்தை பரிமாற.., குப்புசாமி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார்.
ஏன்டா புதுப்பொண்டாட்டியை அவங்க வீட்டில் விட்டுட்டு வந்து ஒருநாள் கூட ஆகல.. அதுக்குள்ள பொண்டாட்டி நினைப்பு வந்துட்டா.." என அவங்க அம்மா கேட்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனினும் ஒரு முடிவுக்கு வந்தவராக அங்கிருந்து புறப்பட்டு மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை கையோடு அழைத்துக்கொண்டு நகரின் முக்கியான பெரிய உணவு விடுதிக்கு சென்றார். இனி ஓட்டல் சாப்பாடுதான் என முடிவெடுத்துவிட்டார்..!
இதுநாள் வரை இதுபோன்ற உணவு விடுதிகளுக்கு சென்றதில்லை. என்ன தேர்ந்தெடுத்து சாப்பிடுவது என சிந்திக்க அவகாசம் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் "டுடே ஸ்பெஷல் ப்ளீஸ்..!" என்றார். அவருக்கு பரிமாறப்பட்டது "எலுமிச்சை சாதம்". நொந்துபோன குப்புசாமி என்ன செய்வது என தெரியாமல் அருகே உள்ள மேசையை கவனித்தார்.. அங்குள்ளவர் "ரிபிட்" என சொல்ல அருமையான உணவு பரிமாறப்பட்டது. அது ஏதோ நல்ல உணவாக இருக்கலாம், அது என்னவாக இருந்தாலும் தான் அதையே தானும் உண்ணலாம் என ஆசைப்பட்டு பேரரிடம் தானும் "ரிபீட்" என்றார். அவருக்கு மீண்டும் எலுமிச்சை சாதம் என்னும் ரிவிட் வந்தது.
நொந்து போன குப்புசாமி எப்படியும் நல்ல சாப்பாடு சாப்பிட்டே தீருவது என்கிற தீர்க்கமான முடிவுடன் மெனுவை தீவிரமாக படிக்க ஆரம்பித்தார். அந்த அரை இருளில் எதையும் சரிவர படிக்க முடியாமல் போக மெனு கார்டில் ஏதோ ஒன்றை குத்து மதிப்பாக பேரரிடம் காட்டினார்.
பேரர்: ஆர் யூ ஷ்யூர்..?
குப்புசாமி: யா.. ஷ்யூர்..!
மீண்டும் அதே "எலுமிச்சை சாதம்..!"

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem