காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம
கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண் பாடிடும் சந்தம் உந்நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ நதியோ கடலழகோ
மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்டு பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி
இது தொடரும் வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே
தொடர்ந்திடும்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்
இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
https://www.youtube.com/watch?v=CALCiGylhWI
https://www.youtube.com/watch?v=CALCiGylhWI
Comments
Post a Comment