கழுகு என்றும் பாம்பை தரையில் எதிர்த்துப் போரிடுவதில்லை. பாம்பை ஒரு நொடியில் பிடித்து வானில் உயரே பறந்துவிடும்.
எவ்வளவவு விஷம் உள்ள பாம்பாக இருந்தாலும் வானில் பாம்பு அதன் சக்தியை இழந்துவிடும். காற்றில் பாம்பிற்கு சமநிலையும் இல்லை.
தரையில் ராஜாவான பாம்பு வானில் தன் பலத்தை இழந்து ஒரு நோஞ்சான் போல ஆகிவிடும்.
பாம்பு வானில் கழுகை கொத்த முயற்சிக்கும். அந்த சமயம் கழுகு அதை வானில் விட்டு விட்டு பிடித்து மேலும் வலியை பாம்பிற்கு கொடுக்கும்.
உங்கள் எதிரியை என்றும் நீங்கள் அவருக்கு பழக்கமான, சாதகமான களத்தில் வெல்வது கடினம்.
கழுகை போல சாதுரியமாக உங்களுக்கு பழக்கமான, சாதகமான களத்திற்கு எதிரியை இட்டு சென்று அந்த களத்தில் உங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து அவரை வெல்லலாம்
தொழில், விளையாட்டு, விளம்பரம், மேலாண்மை, சந்தைப்படுத்தல், இராணுவம், தயாரிப்பு, விற்பனை, அரசியல் என்று பல துறைகளில் இந்த யுத்தியை செயல்படுத்தலாம்.
#keto168 #manojtalks #motivation #uplift
Comments
Post a Comment