Skip to main content

இன்ன பிற - சுஜாதா



சுஜாதா [Sujatha Rangarajan] (Author of ஸ்ரீரங்கத்து தேவதைகள் ...
இன்ன பிற - சுஜாதா -
மண்புழுக்கள் காமவெறி பிடித்தவைகள் என்று எங்கோ படித்த ஞாபகம்…அப்படியா? – ஆர். ஸ்வர்ண சுபா, திருநெல்வேலி-11
சுஜாதா : அப்படி இல்லை. மண்புழுவுக்கு ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் ஒரே உடலில் இருக்கிறது. அதனால் எப்போது செக்ஸ் வேண்டுமானாலும் அண்டை அசலில் பிற புழுக்களைத் தேடிச்செல்ல வேண்டாம். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று தனக்கே சொல்லிக்கொண்டால் போதும். என்ன சௌகரியம் பாருங்கள்!
‘மண்புழுக்கள் தமக்குத்தாமே கர்ப்பமாக்கி கொள்ளக்கூடியவை என்று நீங்கள் சொன்னது தவறல்லவா? – செந்தில் சுப்ரமணியம், செயிண்ட் லூயிஸ், மிசோரி, அமெரிக்கா :
சுஜாதா : மண்புழுக்கள் ஹெர்மாஃப்ரொடைட் (hermaphrodite) வகையைச் சேர்ந்தவை என்பதை சற்று வேடிக்கையாகக் குறிப்பிடத்தான் அப்படிச் சொன்னேன். உண்மையிலேயே மண்.புழுவில் ஆண் உறுப்பும் பெண்ணுறுப்பும் ஒரே சரீரத்தில் இருந்தாலும் சுய கர்ப்பம் சாத்தியமில்லை. இரண்டு புழுக்கள் ஜோடி சேரவேண்டியது அவசியம். இதற்கு இரண்டு புழுக்களும் மண்ணைத் தோண்டுவதை விட்டு மேலே வரவேண்டும். ஒன்று ஆணாகவும் மற்றது பெண்ணாகவும் பார்ட் எடுத்துக்கொண்டு அருகருகே தலைமாடு கால்மாடாக மாற்றிப் படுத்துக்கொள்ள வேண்டும். சளிபோல ஒரு திரவம் கசிய ஒரு மணி நேரம் ஒட்டிக்கொண்டு சுகிக்கும். பூகம்பமே வந்தாலும் கவலையில்லை. அப்படியே இருக்கும். புழுநம்பர் 1 புழுநம்பர் 2-க்குள் விந்து தானம் செய்ய… பின்னர் முட்டை சப்ளை செய்யும். ஒரு சிறிய கூட்டுக்குள் முட்டையும் விந்துவும் பத்திரப்படுத்தப்படும். அதன்பின்தான் கர்ப்பம். Wov!


******************************************************
மரங்களுக்கு குழப்பமே கிடையாது!
‘பெங்களூரில் ஜாகராண்டா மரங்கள் ஒரே தினத்தில் சொல்லிவைத்தாற்போல் பூப்பதை நான் பார்த்திருக்கிறேன். மரங்களுக்குள், தாவரங்களுக்குள் ரகசிய பாஷை இருப்பதாகவே சிலர் நம்புகிறார்கள். இதைப்பற்றி சிலர் ஆராய்ச்சியும் செய்திருக்கிறார்கள். ஆப்ரிக்காவில் ‘குடு’ என்று ஒரு மிருகம் இருக்கிறது. மான் வகையைச் சேர்ந்தது இது. மரங்களிலும், புதர்களிலிலும் உள்ள இலை தழைகளை ஒடித்துச் சாப்பிடும். ஆனால் ஒரு மரத்தில் இரண்டு நிமிஷத்துக்கு மேல் சாப்பிடாது. அடுத்த மரத்துக்குச் சென்றுவிடும், என்னதான் முதல் மரத்தில் இலைகள் அடர்த்தியாக இருந்தாலும். இது ஏன் என்று ஆராய்ந்து பார்த்தபோது மரம் தன் சொந்தப் பாதுகாப்புக்காக ஒரு இலைக்கு மேல் உடைக்கப்பட்டு பறிக்கப்பட்டால் தன் இலைகளில் ‘டானின்’ (Tanin) என்கிற வஸ்துவை அதிகப்படுத்தி மிருகங்கள் சாப்பிட முடியாமல் செய்துவிடுகிறதாம். எப்படிப்பட்ட ஆச்சரியம் இது!. இதைவிட ஆச்சரியம் ஒரு மரத்தைத் துன்புறுத்தினால் அதன் அருகே உள்ள மரங்களின் ‘டானின்’ அளவு அதிகமாவதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தன் சகோதர மரத்தின் துயரத்தை அது எப்படி அறிகிறது? வேர்கள் மூலமாகவோ அல்லது காற்றில் ஏதாவது அனுப்புகிறதா என்று வியப்படைகிறார்கள்.’ –
*****************************************************
டெல்லி சாந்தினி சௌக்கில் – மத்திய சர்க்காரில் பணிபுரியும் ஒரு எழுத்தர் (கிளார்க்) , அலுவலகத்திலிருந்து திரும்ப வந்து கொண்டிருந்தார்.
இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தார்.
‘கடவுளைக் காண முடியுமா?’ என்று ஒருவன் கேட்க,
‘ஓ முடியுமே, உன் கோட்டைக் கழற்றிவிட்டு பத்தடி முன்னால் சென்று மேலே பார், கடவுள் தெரிவார்’ என்றான்.
அவனும் அவ்வாறே செய்து திரும்ப வந்தான். பிரகாசமான முகத்துடன் ‘தாங்க்ஸ். நீங்கள் என் கண்ணைத் திறந்து விட்டீர்கள்; கடவுளை நன்றாகப் பார்க்க முடிந்தது’ என்றானாம்.
இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கிளார்க் அவனை அணுகி எனக்கும் கடவுளைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது என்று தன்னிச்சையாகக் கோட்டை கழற்றி கொடுத்துவிட்டு பத்தடி முன் சென்று வானத்தைப் பார்த்தார்.
காக்காய் கூடு கட்டிய டெலிவிஷன் ஆண்டென்னாக்களைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை. திரும்பிப் பார்த்தால் இருவரையும் காணோம். கோட்டையும் காணோம். கோட்டில் அந்த மாதச் சம்பளம்…???

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem