நான் கட்டிய
முதல் கைக்கடிகாரம்....
நான் பார்த்த
முதல் விளையாட்டு பொம்மை...
மயிலாக///
மானாக///
மோட்டார் வண்டியாக///
தங்கையின் கழுத்தில்
ஆபரணமாக///
இமைக்கும் நேரத்தில்
அவரின் கைத்திறன் வெளிப்படும்.
ஆசையோடு
"கொசுறு" கேட்டால்
"மீசை" வைத்து
மகிழ்விப்பார்...
அந்த பொம்மையின் கைத்தட்டல் சிறுவர்களை சுண்டி இழுக்கும்...
துளையிட்ட மூங்கிலில்
இணைத்திட்ட கயிறால் - அவரின்
கால் பெருவிரலின்
இழுப்புக்கு
இசைந்து ஆடிய
பொம்மையை...
சில நாட்கள்...
ஏக்கத்துடன் - நான்
வேடிக்கை மட்டுமே பார்த்த - அந்த
"பம்பாய் மிட்டாய்" காரரை...
ஏனோ எங்கேயும்
காண முடியவில்லை...
S. நாகராஜன்.
Comments
Post a Comment