Skip to main content

ஒரு ஊரில் ஒரு திருடன்

ஒரு ஊரில் ஒரு திருடன்
அவன் திருடாத இடமே இல்லை.ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பித்து வந்தான்.ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்து ததந்தால் பத்தாயிரம்
பொன் என ஆணையிட்டார்.சில நாட்கள் கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து,யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்து விடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடி பார்த்து அழைத்து வாரும் என ஆணையிட்டார்.மந்திரி தேடி செல்லும் போது இந்த திருடன் அவரிடம் வசமாக மாட்டிக் கொண்டான்.

மந்திரியின் சூழ்ச்சியினால் உன் தலைக்கு ராஜா பத்தாயிரம் பொன் என கூறியுள்ளார்.நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது ஆயிரம்பொன் தருகின்றேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கின்றேன் என உறுதி அளித்தான்.

சரி என இந்த திருடனும் சம்மதித்தான்.அந்த திருடனுக்கு ,*திருநீறும் ருத்ராட்ஷமும்* போட்டு ஒரு சன்யாசி போல் வேடம்மிட்டு நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இருப்பது போல் நடி, ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல்,
கடைசியாக அவர் தன் ராஜ்ஜியத்தில் பாதியை உனக்கு தானமாக தருவார். அதை வாங்கி என்னிடம் ஒப்படைத்து விட்டு,நாம் பேசிக்கொண்டாற் போல் இருபதாயிரம் பொற் கழஞ்சுகள் தருகிறேன். என ஒப்பந்தம் செய்துக் கொண்டனர்.

பின் அந்த மந்திரி ராஜாவிடம் சென்று ஒரு சன்யாசி பற்றுகளை விட்டு மரத்தடியில் அமர்ந்து உள்ளார். அவரை தரிசித்து தங்களின் வேண்டுதளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றார்.

ராஜா சென்று மரத்தின் கீழ் உள்ள அந்த சன்யாசி (திருடன்)னின் காலில் விழுந்து வணங்கி, ஐயா தங்களுக்கு தானமாக ஒரு லட்சம் பொற் கழஞ்சுகள் தருகிறேன் அதை எற்றுக்கொள்க.

இந்த சன்யாசி *வேண்டாம்* என்றார்.பின் ஐந்துலட்சம், பத்து லட்சம். இருபது லட்சம், ஐம்பது லட்சம் என உயர்ந்த. நகை, , என தானமாக தந்தார்.இந்த சன்யாசி எதுவும்*வேண்டாம்* என்றார்.பின் ராஜா நீயே சத்தியசீலன் என் ராஜாங்கத்தில் பாதி தங்களுக்கு தானமாக தருகின்றேன் .நீங்கள் அதை பெற்றுக் கொண்டு எனை வாழ்த்த வேண்டும் என்றார்.

(இப்போது தான் மந்திரிக்கு சந்தோஷம் நாம் சொன்னது போலவே நடிக்கின்றான் .என தன் மனதுக்குள்ளே சிரித்து மகிழ்ந்தான்)

ஆனால் அந்த சன்யாசி *வேண்டாம்* என்றார். (மந்திரியின் முகம் மாறிவிட்டது அடபாவி வேண்டாம் என்று விட்டானே,இவனை இப்போது திருடன் எனவும் நாம் சொல்ல முடியாது, என்ன செய்வது என மனதுக் உள்ளே குழம்பத்தில் நிற்க்கிறார்)கடைசியாக அந்த ராஜா தன் மகளையே தங்களுக்கு திருமணம் செய்து தருகின்றேன் என கூறினார்.

அதற்கும் அந்த சன்யாசி ஐயா நானோ பற்று அற்றவன் எனக்கு எதுக்கு இதுஎல்லாம் *வேண்டாம்* என்றார்.நீரேதீர்க்கதரிசி என வீழ்ந்து வணங்கி அந்த ராஜா சென்று விட்டார்.பின் அந்த மந்திரி வந்து அடப்பாவி என் வயத்துல இப்படி மண்அள்ளி போட்டு விட்டாயே இது நியாமா என சண்டை போட,

அதற்கு அந்த சன்யாசி
ஐயா நான் திருடன் தான்.எப்போது நீங்கள்*திருநீறும் ருட்ராஷமும்* என் மீது தரித்தீர்களோ அப்போதே என் மனம் மாறிவிட்டது.மேலும் என் தலைக்கு ஐந்து லட்சம் என விலை வைத்த ராஜாஎன் கோலத்தை பார்த்து என் காலில் விழுந்தார்ல.

அந்த பணிவு எனக்காக அல்ல என் மேல் உள்ள இந்த  *திறுநீறுக்கும் ருத்ராட்ஷத்துக்கும்* தான்,நான் எதை *வேண்டாம் வேண்டாம்* என்று சொன்னேனோ அதைவிட உயர்வான பொருள் தான் எனக்கு கிடைத்தது.மதிப்புள்ள இந்த பெருளை நான் வேண்டாம் என்றால்
*விலைமதிப்பில்லா அந்த இறைவன் எனக்கு கிடைப்பான்*அதுவே எனக்கு போதும் என்றார்.

*இந்த திறுநீறும் ருத்ராஷமும்* நமக்கு கிடைத்த பொக்கிஷம்.

இதை வைத்து வியாபாரம் செய்யாமல் வறுமை வந்தாலும் *வைராக்கியம்*
என வாழ்ந்து வந்தால் நமக்கு நிச்சயம் இறையின் அருள் உண்டு.

அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்

 

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Thamizh Poem

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...