ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் சொன்னார் ,
.
பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும் கணவனே , ஏழு ஜென்மத்துக்கும் கணவனாக அவர்களுக்கு கிடைப்பான் , ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது .
.
என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார்.
.
பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள், ஆனால் ஆண்கள் வேறு பெண்தான்
வேண்டும் என்கிறார்கள், அதுதான் சிக்கல் . இருவரையும் திருப்தி செய்ய,
என்ன செய்ய வேண்டும் ..??
.
இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் ,
.
பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார் ,
அவர் பெயர் சாணக்கியர், அவரைப்
பாருங்கள் , இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் .
.
சித்திரகுப்தர் , சாணக்கியரை சென்று பார்த்தார் .
.
சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை .
.
கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து, அவர்களிடம் பேசினார்கள் .
.
கணவன்மார்களில் ஒருவர் ,ஒரு யோசனை சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர் அவரை
கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும்
இருக்க முடியாது என்று கூறிவிட்டு இதை அந்த பெண்களிடமே கேட்டு விடுங்கள்
என்று சொன்னார் .
.
இந்த தீர்வை , சித்திரகுப்தன் அந்த பெண்களிடம்
கூறினார் . அதற்கு அந்த பெண்கள் சித்திரகுப்தனை கையெடுத்து
கும்பிட்டுவிட்டு எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று
சொல்லிவிட்டார்கள் .
.
அப்படி என்னதான் தீர்வு .." அது " ..??
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் , பிரம்மா நீங்கள் கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் , ஆனால் ஒரு நிபந்தனை , ஏழு ஜென்மத்திற்கும் அதே மாமியார்தான் இருப்பார் , அதற்கு உங்களுக்கு சம்மதமா என்றார்.
Comments
Post a Comment