Skip to main content

Posts

Showing posts from August, 2020

A very interesting story-- The Ant & The Leaf

 A very interesting story One Sunday morning, a wealthy man sat in his balcony enjoying sunshine and his coffee when a little ant caught his eye which was going from one side to the other side of the balcony carrying a big leaf several times more than its size. The man watched it for more than an hour. He saw that the ant faced many obstacles during its journey, paused, took a diversion and then continued towards destination. At one point the tiny creature came across a crack in the floor. It paused for a little while, analyzed and then laid the huge leaf over the crack, walked over the leaf, picked the leaf on the other side then continued its journey. The man was captivated by the cleverness of the ant, one of God’s tiniest creatures. The incident left the man in awe and forced him to contemplate over the miracle of Creation. It showed the Greatness of the Creator. In front of his eyes there was this tiny creature of God, lacking in size yet equipped with a brain to analyze, cont...

ஒரு ஊரில் ஒரு திருடன்

ஒரு ஊரில் ஒரு திருடன் அவன் திருடாத இடமே இல்லை.ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பி த்து வந்தான். ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்து ததந்தால் பத்தாயிரம் பொன் என ஆணையிட்டார்.சில நாட்கள் கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து,யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்து விடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடி பார்த்து அழைத்து வாரும் என ஆணையிட்டார்.மந்திரி தேடி செல்லும் போது இந்த திருடன் அவரிடம் வசமாக மாட்டிக் கொண்டான். மந்திரியின் சூழ்ச்சியினால் உன் தலைக்கு ராஜா பத்தாயிரம் பொன் என கூறியுள்ளார்.நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது ஆயிரம்பொன் தருகின்றேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கின்றேன் என உறுதி அளித்தான். சரி என இந்த திருடனும் சம்மதித்தான்.அந்த திருடனுக்கு ,*திருநீறும் ருத்ராட்ஷமும்* போட்டு ஒரு சன்யாசி போல் வேடம்மிட்டு நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இருப்பது போல் நடி, ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் எ...

Iyyarkai

  குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அ மைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது. பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது. முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும். பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள். பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள். மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள். அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். நிறைய அமைதியாக இருங்கள்,...

ஆலமரம்

             ஆலமரம் எண்ணற்ற குழந்தைகள் தவழ்ந்து பழகியதும் நடந்து பழகியதும் இங்கேதான். - இந்த கிராமத்தின் தெருக்கள் மண் தரைகளாக இருந்தபோது ... பல - பஞ்சாயத்துகள் இங்கேதான் வழக்காடி தீர்க்கப்பட்டுள்ளது... வாய்தா இல்லாமல். பகலில்... ஆண்கள் பலருக்கும் போக்கிடம் இதுவே. புளியங் கொட்டைகளை ஒருபுறம் மட்டுமே தேய்த்து... "தாயக்கரம்" ஆடுவதும்... கற்கள் வைத்து "ஆடுபுலி" ஆட்டம் ஆடுவதுமாய் உள்ளூர் கதைகள் முதல் உலக நடப்புகள் வரை இங்கேதான் பரிமாறப்படும். இரவில்... முதியவர்களுக்கும் "விவரம்"அறிந்த குழந்தைகளுக்கும் இதுவே படுக்கை அறை. ஒரு இரவில்... ஊருக்குள் புகுந்த திருடனை பிடித்து கட்டி வைத்தது இந்த விழுதில் தான். இதன் கீழ்ப்பகுதியை ஆண்கள் மட்டுமே ஆக்கிரமித்து இருந்தாலும்... மேலே பல குடும்பங்களாய்... பறவை இனங்கள். தலைமுறைகள் பல தாண்டியும் இன்னும் எத்தனையோ ஞாபகங்களை தன்னகத்தே தாங்கி நிற்கிறது - இந்த காரை திண்ணை ஆலமரம்... *ஞாபகங்களுடன் - S.நாகராஜன்*

நான் கட்டிய முதல் கைக்கடிகாரம்....Nagarajan Trs /FB

     நான் கட்டிய முதல் கைக்கடிகாரம்.... நான் பார்த்த முதல் விளையாட்டு பொம்மை... மயிலாக/// மானாக/// மோட்டார் வண்டியாக/// தங்கையின் கழுத்தில் ஆபரணமாக/// இமைக்கும் நேரத்தில் அவரின் கைத்திறன் வெளிப்படும். ஆசையோடு "கொசுறு" கேட்டால் "மீசை" வைத்து மகிழ்விப்பார்... அந்த பொம்மையின் கைத்தட்டல் சிறுவர்களை சுண்டி இழுக்கும்... துளையிட்ட மூங்கிலில் இணைத்திட்ட கயிறால் - அவரின் கால் பெருவிரலின் இழுப்புக்கு இசைந்து ஆடிய பொம்மையை... சில நாட்கள்... ஏக்கத்துடன் - நான் வேடிக்கை மட்டுமே பார்த்த - அந்த "பம்பாய் மிட்டாய்" காரரை... ஏனோ எங்கேயும் காண முடியவில்லை... S. நாகராஜன்.
Can you tell me something inspiring? Evening dinner with Father A son took his old father to a restaurant for an evening dinner. Father being very old and weak dropped food on his shirt and trousers while eating. Other diners watched him with disgust, while his son was calm. After he finished eating, his son who was not at all embarrassed quietly took him to washroom Wiped the food particles removed the stains, combed his hair and fit his spectacles firmly.When they came out the entire restaurant was watching them in dead silence, not able to grasp how someone could embarrass themselves publicly like that.The son stelled the bill and started walking out with is father. At that time, an old man amongst the dinners called him “Don't you think you have left something behind?” The son replied, “No sir, I haven't.” The old man retorted, “Yes, you have! You left a lesson for every son and hope for every father.” The restaurant went silent.. Source:Quora

What's the one thing about life everyone should know?

What's the one thing about life everyone should know? A child working with his father in an iron shop suddenly asked his father, Boy : "Father, what's value of a human being?” Dad : "Son, it is very difficult to judge the value of a human being, that is priceless." Boy - Are all equally valuable and important? Dad - yes son. Boy - then why is there any poor and rich in this world? Why is someone less responsible than someone? Hearing the question, Dad remained calm for some time and then asked the boy to bring an iron rod lying in the store room. Dad asked - how much will this rod will cost? Boy - 200 rupees. Dad - If I make a lot of small nails, how much will it cost? Boy - then it will be more expensive then about 1000 rupees. Dad - If I make lots of clock springs with this iron? The child kept calculating for a while and then excitedly said, "Then it will cost a lot." Father then explained to him, " Just like this, the v...

ஏழு ஜென்மத்திற்கும் அதே மாமியார்தான்

ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் சொன்னார் , . பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும் கணவனே , ஏழு ஜென்மத்த ுக்கும் கணவனாக அவர்களுக்கு கிடைப்பான் , ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது . . என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார். . பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள், ஆனால் ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள், அதுதான் சிக்கல் . இருவரையும் திருப்தி செய்ய, என்ன செய்ய வேண்டும் ..?? . இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் , . பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார் , அவர் பெயர் சாணக்கியர், அவரைப் பாருங்கள் , இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் . . சித்திரகுப்தர் , சாணக்கியரை சென்று பார்த்தார் . . சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை . . கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து, அவர்களிடம் பேசினார்கள் . . கணவன்மார்களில் ஒருவர் ,ஒரு யோசனை சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர் அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இர...

*அல்வா*

ஏமாற்றுவதற்கு 🍂 *அல்வா* 🍂 கொடுப்பது என ஏன் சொல்கிறார்கள். ஒரு பையனுக்கு புதுசா கல்யாணம் ஆகுது,கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்கு போனவன் திரும்ப வரும்போது புது மனை விக்கு ஆசையாய் முறுக்கு வாங்கிவந்திருக்கிறான்,அவன் மனைவி ராத்திரி பத்து மணிக்கு உட்கார்ந்து கடக்கு முடக்கு சத்தத்துடன் சாப்பிடுகிறாள்,அடுத்த நாள் காலையில் அவன் அம்மா சொல்றாங்க "பாத்து, வளர்த்து, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிவச்ச ஆத்தாளுக்கு இது வரை எதாவது வாங்கி கொடுத்து இருக்கியா,ஆனா நேத்து வந்தவளுக்கு முறுக்கு" என்று சொல்லி மகனுடன் தனது முதல் சண்டையை ஆரம்பித்திருக்கிறார் அவனது அம்மா. அதுவரை கள்ளம், கபடம் தெரியாத அந்த பையனுக்கு ஒரு யோசனை,முறுக்கு வாங்கி போய் கொடுத்தால் தானே பிரச்சனை,இன்று முதல் மனைவிக்கு அல்வா வாங்கி போய் கொடுப்போம் என்று வாங்கி செல்கிறான், அடுத்த நாள் அம்மா ஒன்றும் கேட்கவில்லை ஏன் என்றால் அவனது மனைவி சாப்பிடும் போது சத்தம் வரவில்லை, அம்மாவை ஏமாற்ற முதன் முதலில் அல்வா பயன்பட்ட காரணத்தால் அடுத்தவர்களை ஏமாற்றுவதற்கு அல்வா கொடுப்பது என்ற பெயரும் வந்தது..!!