Skip to main content

Posts

ஜெனரேஷன் கேப்

ஜெனரேஷன் கேப்                      **** " மாமி... நமஸ்காரம்... நான் சோழவந்தான் வெங்கடேசன்" " யார்..சுப்பைய்யர் புள்ளையா.. உங்கள பாத்து எல்லாம் வருஷக் கணக்காச்சு.. வந்துணடு் போயிண்டு இருந்தாதானே ஞாபகம் இருக்கும்" மாமி சொன்னது சுருக் என்று இருந்தது. " எங்க மாமி வர முடியரது... கிராமத்தில் வைதீகம் இருக்கே.... மச்சினன் பொண்ணு கல்யாணம்.. அதான் வந்தேன்... ராத்திரி பாண்டியனில் கிளம்பணும்.... நாளைக்கு பீமரத சாந்தி ஒண்ணு இருக்கு" "அப்புறம், மாமி இவங்க என்னோட பசங்க.. பெரியவன்  கணேஷ்... சின்னவன்  பாலாஜி... டேய் மாமிக்கு நமஸ்காரம் பண்ணுங்கோடா" மாமி, " ஷேமமா இருங்கோ... எங்க இருக்கேள்... என்ன செய்யறேள்.... அவர்களும், " நாங்க அடையாறில் இருக்கோம் மாமி... டைடல் பார்க்கில் வேலை...கேண்டின் சாப்பாடு... காஸ் அடுப்பு இருக்கு...காபி மட்டும் போட்டுக்குவோம்" மாமி," அப்பா மாதிரி இல்லாம அடிக்கடி வாங்கோ... நானெல்லாம் உங்களுக்கு பாட்டி முறை..  பெசண்ட் நகரில் தான் இருக்கோம். மாமா ரயில்வே ரிடயர்டு.... எனக...

I Sometimes Wish

Sugantha Narayanan

பனை மரம்

https://www.seekandfind.in/panai-maram-payangal/ பனை மரம் பனையே முது பெரும் பனையே உன்னை நீர் ஊற்றி வளர்க்கவில்லை நிலத்திற்கு பசளை இட்டதில்லை நிரை நிரையாய் வளர்வதற்கு உன் விதையை ஊன்றி விட்டனர் மக்கள் அதுவும் தங்கள் வயலின் எல்லையைக் காப்பதற்கு மக்கள் எதிலும் சுயநலம் ஆனால் சுயநலமே இல்லாத பனைமரம் நீ உன்னால் நாங்கள் அடையும் பயன் எண்ணற்றவை பனை என்றால் பனை காடு என்றால் இழிவாகவும் எளிமையாகவும் நினைப்பதுண்டு ஏன்/ எல்லாம் உன்னிடம் இருந்தும் உன்னிடம் கிளைகள் இல்லையே உன்னிழலில் தங்க இடம் இல்லையே , நெடு நெடுவென்று வளர்ந்து உச்சியிலே ஒரு முடியைப் போல் அழகான குருத்தோலை காவோலை குண்டு குண்டு பழங்கள் எல்லாமே அத்தனையும் மக்கள் தேவைக்கு ஏற்றாப் போல் தலையாலே சுமக்கின்றாய் அண்ணார்ந்து பார்த்தால் ஆச்சரியம்தான் எவ்வளவு உயரம் கன்னங் கரேலென்று எதற்கும் அச்சமின்றி வளர்ந்து நிற்கின்றாய் உன்னால் மக்கள் அடையும் பயன்கள் நிறைய கற்பகம் எனும் அழகிய பெயர் உனக்கு மிகவும் பொருத்தமே எத்தனை புயல் அடித்தும் பனை வீழ்ந்ததாக சரித்திரமே இல்லை அத்துணை உறுதி உன்னிடம் நீ நிலைத்...

வார்த்தை சுத்தம் உள்ள மனிதர்களை எங்கேயாவது பார்த்தீர்களா?

வார்த்தை சுத்தம் உள்ள மனிதர்களை எங்கேயாவது பார்த்தீர்களா? Selvaraja S · SELVAMALIGAI ;SINGARAJA STORES -இல் பணியாற்றுகிறார் (1957–தற்போது வரை) ஆஹா! அருமையான கேள்வி !! வார்த்தை சுத்தமுள்ள மனிதர்தானே! ஒருவரல்ல பலரை :- பார்த்ததில்லை ,படித்ததுண்டு,அந்த உணர்வில் கலந்து உணர்ச்சியில் சிலிர்த்ததுண்டு.. காளையார் கோவில் ரதம் -கோவி மணிசேகரன் காளையார் கோவிலுக்கு ரதம் ஒன்று வேண்டும் .நமது வாளையும் வேல்கம்பையும் பிரிட்டிஷாரின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் நெருங்குவதற்கு முன் சிவகங்கைச் சீமையின் பெருமையை சரித்திரத்தில் கலைத்தூணாக காலம் உள்ளளவும் அது நிற்கச்செய்ய ,எண்ணியது திண்ணமுடன் செய்து முடித்திட யார் பொருத்தமானவர் ? ஆய்ந்து, அறிந்து அழைத்து வாருங்கள் .ஆணையிட்டார்பெரியமருது . குப்பமுத்து ஆசாரி அழைத்துவரப்பட்டார் . "மன்னா மன்னிக்கவும் .தொன்மை கலைகள் எல்லாம் பிரிட்டிஷாரிடம் அழிபட்டுப் போகின்றன ,காத்திடுதல் சிரமம் "என்றார் ஆசாரி. தக்க ஏற்பாடுகள் செய்வோம் .தயக்கம் வேண்டாம் என்றார் மன்னர். வனங்களில் இருந்து மரங்கள் கொண்டுவரப்பட்டன. துணைக்கு ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் ...

Work from Home

நொய்க் கஞ்சியே சொர்க்கம்

கவிதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை... சொர்க்கம் ----------------- மீந்து போன அடைமாவில் மிருதுவான குனுக்கு சொர்க்கம் ஒருவாரமான தோசைமாவில் ஊத்தப்பமே சொர்க்கம் மார்கழி மாத குளிரில் மணக்கும் வெண்பொங்கல் சொர்க்கம் கார மிளகு தாளித்த - பொங்கலுடன் கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம் பரங்கிக்காய் சாம்பாருக்கு - பீன்ஸ் பருப்புசிலி சொர்க்கம் கதம்ப சாம்பாருக்கு - பொடியிடிச்ச கத்திரிக்காய் கறி சொர்க்கம் குடைமிளகாய் சாம்பாருக்கு கோஸ் பட்டாணி கறி சொர்க்கம் உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும் உருளைக் காரகறியே சொர்க்கம் வெந்திய குழம்பிற்கு வெண்டைக்காய் கறி சொர்க்கம் சுண்டைக்காய் வெத்த குழம்பிற்கு சுட்ட அப்பளமே சொர்க்கம் பத்திய மிளகு குழம்பிற்கு பருப்பு தொகையலே சொர்க்கம் மத்தியான தயிர் சாதத்திற்கு மாவடு இருந்தால் சொர்க்கம் பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு பருப்பு சாதமே சொர்க்கம் அடைக்கு வெல்லத்தோடு அவியல் இருந்தா சொர்க்கம்; பசியில் துடிப்பவனுக்கு பழைய சோறே சொர்க்கம் நோயில் வீழ்ந்தவனுக்கு நொய்க் கஞ்சியே சொர்க்கம்!!! Venkat Kannan

Enjoying Life