Skip to main content

Posts

கவிதை

ரம்மியமான ரசனை வேண்டும் அழகியல் அலசல் வேண்டும் இனிமையான இயல்பு வேண்டும் ஆரோக்கியமான ஆற்றல் வேண்டும் உயர்வான உழைப்பு வேண்டும் ஏற்றமுடைய ஏகாந்தம் வேண்டும் எழில்மிகு எழுச்சி வேண்டும் ஈர்க்கும் ஈகை வேண்டும் மரியாதையான மனது வேண்டும் மெய்சிலிர்க்கும் மெல்லிதயம் வேண்டும் பளிச்சிடும் பதில்தெரிய வேண்டும் ஊக்கம்தரும் ஊழ்வினை வேண்டும் தாய்மையான தானம் வேண்டும் தீஞ்சுவை தீர்க்கரிவு வேண்டும் பெண்மனமறிந்த பெருமை வேண்டும் பேசும் பேச்சுசுவை வேண்டும் சொல்லாமொழிகள் சொல்ல வேண்டும் மதியே மருந்தாக வேண்டும் யோகமும் யோசிக்க வேண்டும் நகைச்சுவையும் நகையாக வேண்டும் சொற்றொடர்களில் சொக்குமழகு வேண்டும் ஆயிரத்திலொருவராக ஆட்கொள்ள வேண்டும் என்றும் என்றென்றும் பல ரசிகர் ரசிகைகளுள் ஒருத்தி 💐🙏 ஸ்ரீநித்யா

என்னங்க மூட்டை

மனைவி - என்னங்க மூட்டை!!!!!!!!!! கணவன் - ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன் ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார் கணவன் - ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு மனைவி - ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க கணவன் - இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன் மனைவி - அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே கணவன் - வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன் மனைவி - அய்யோ வாங்கி கொடுத்தாலும்………………, நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. ஆயிரம் ரூபாயை வாவாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க …………………………………………………………….எப்படி போவீங்க பஸ் இல்...

‘ஹயக்ரீவ மட்டி ’

சாப்பிட்டு வியாழன்-ஹயக்ரீவமட்டி   ஹயக்ரீவ மட்டி* *Hayagriva Maddi* ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தை ஒட்டி தனியார் ஒருவருக்குச் சொந்தமான பரந்த நிலப்பரப்பு இருந்தது. அதன் உரிமையாளர் கடலையை விதைத்திருந்தார். அது செழிப்பாக வளர்ந்திருந்தது, ஒரு நாள் காலையில், உரிமையாளர் நிலத்தைப் பார்வையிட வந்தபோது, ஒரு பகுதியில் வளர்ந்திருந்த பயிர்கள் சிதைவடைந்து அலங்கோலமாக இருந்தன. கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர், மறு நாள் காலையிலும் போய்ப் பார்த்தார். அன்றும் மேலும் சில பகுதிகள் சேதம் அடைந்திருந்தன. ‘எப்படியும் இன்று இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று நினைத்த உரிமையாளர், அன்று இரவு நேரத்தில் அங்கேயே ஒரு பக்கத்தில் மறைவாகக் காத்திருந்தார். சற்று நேரத்தில்... ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தில் இருந்து, கண்ணைக் கவரும் வெள்ளை நிற குதிரை ஒன்று வெளிவந்தது. அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப்படுத்தியது. இதைக் கவனித்த நிலத்தின் உரிமையாளர் குதிரையை விரட்டினார். அந்தக் குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஓடி ஸ்ரீ மடத்துக்குள் புகுந்தது. வீடு திரும்பிய உரிமையாளர் மறு நாள...

எழுத்தாளர் சுஜாதா மஹாபெரியவரைப் பற்றிக் கூறியது

எழுத்தாளர் சுஜாதா காஞ்சி பெரியவரைப் பற்றி கூறியது... பெண்ணுக்கு குங்குமம், ஆணுக்கு விபூதி, திருமண் என்கிற அடையாளங்களை ஒரு பழக்கமாகவும் வழக்கமாகவும் ஆக்கி அளித்திருக்கிற அந்த ஆன்மிக நெறிப்பாட்டின் பின்னாலே, ஒரு பெரும் பொருள் இருக்கிறது. இதற்கான விடையை நான் எவ்வளவோ பேரிடம் கேட்டிருக்கிறேன். யாரும் நெற்றியில் தரிக்கும் விபூதிக்கோ, இல்லை திருமண்ணுக்கோ என் நெஞ்சம் நிரம்பும் வண்ணம் ஒரு பதிலைச் சொன்னதில்லை. கண்ணதாசன் மட்டும் தன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஓரளவு சொன்னார். ஒவ்வொரு முறை விபூதியை தரிக்கும் போதும், ஒவ்வொரு இந்துவும், இந்த உடம்பும் ஒருநாள் ‘இந்த விபூதிச் சாம்பல் போல் ஆகப் போகிறது’ என்பதை உணர்ந்து கொள்கிறான். திருமண்ணோ இந்த உடம்பை மண் தின்னப்போகிறது என்று சொல்லாமல் சொல்கிறது. எனவே, ‘நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கை வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அர்த்தமுள்ள செயல்பாடுகளுக்கு ஒதுக்கி அடக்கத்துடனும் ஆரவாரம் இல்லாமலும் வாழ வேண்டும்’ என்று விபூதி, திருமண்ணுக்கு அவர் சொன்ன பொருள் ஏற்புடையதாக இருந்தது. பெரியவரோ, இம்மட்டில் வெகு ஆழமான விளக்கத்தை அளித்திருக்கிறார். அதை நான் அ...

கல்வித் தந்தை காமராஜரின் தாயை ஏன் கருவாட்டுக்காரி என கருணாநிதி வசைபாடினார்?

கல்வித் தந்தை காமராஜரின் தாயை ஏன் கருவாட்டுக்காரி என கருணாநிதி வசைபாடினார்? நல்ல கேள்வி, விருதுபட்டியில், கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான், இந்த காமராஜன்’ என்று, ஒன்பது ஆண்டு, பொற்கால ஆட்சி தந்த காமராஜரை அவமானபடுத்தி ஒருமையில் அர்ச்சித்தார், அரசியல் நாகரிகமற்ற கருணாநிதி. *”துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை, அவர் தாய் துறந்து விட்டதை போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காக, துறந்து விட்டு நிற்கிறேன்’ என்று, மூத்த எழுத்தாளர் சாவியிடம், கண்கலங்கி கதறி அழுதிருக்கிறார், காமராஜரின் தாய் சிவகாமி. அந்த புண்ணியவதியைத் தான், “கருவாட்டுக்காரி’ என்று, கரித்துக் கொட்டினார், கருணாநிதி. தன் வாழ்வை, 4,000 நாட்களுக்கு மேல், கொடுஞ்சிறையில் கழித்ததாலும், குடும்பம், குழந்தை, குட்டிகள் என்றிருந்தால், பரிசுத்தமாக மக்கள் பணியாற்ற முடியாது என்றும், தன் தாய் எவ்வளவோ வேண்டியும், “திருமணம் வேண்டாம்’ என்று, மக்கள் தலைவராக திகழ்ந்தார், காமராஜர். அதற்கு, “காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை’ என, “நாகரிகத்தோடு’ நல்கினார் கருணாநிதி. *”காமராஜர் என்ன மெத...

பெண் ஒரு விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்..

இந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் நிறைய எதிர்மறை அல்லது தவறான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளலாம், ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மையை அறிந்த பிறகு உங்கள் கண்களில் கண்ணீர் வரக்கூடும். ஒரு ஐரோப்பிய நாட்டில் , பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை சிறையில் வைக்கப்படுவார், மற்றும் அவர் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கபடமாட்டார். புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயான அவரது மகள், இறக்கும் வரை தினமும் தனது தந்தையை சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மன்றாடினார். அவள் அனுமதிக்கப்பட்டாள். அவள் சாப்பிடக்கூடிய எந்தவொரு பொருளையும் கொண்டு வர முடியாதபடி காவலர்களால் சோதனை செய்யப்பட்டாள். தன் தந்தையின் நிலையை தினசரி அப்படி பார்க்க மனம் இல்லாமல் வருந்தினாள். ஒரு அக்கறையுள்ள தாய் பசியுள்ள தன் மகனை எப்படி பார்பாலோ அப்படி பார்த்தால் அவள் அப்பாவின் கண்களில். எனவே, அவரை உயிருடன் ஆக்குவதற்காக, தினசரி அடிப்படையில் அவருக்கு தாய்ப்பாலை உணவளிக்கச் செய்தாள். பல நாட்களுக்குப் ப...

வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே'"

"வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே '" இன்று ஒரு குட்டி கதை பார்ப்போம். இது உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு மனிதனின் கதை முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார். தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள். அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள். அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”. தனது வாழ்க்கை அனுபத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார். டொயோட்டா  நிறுவனத்திற்கு  பிஸ்டன்  (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு. யாருக்காகவும் அவன்காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார். இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓர...