பழமொழிகள் ..... பத்துக்கு புதுமொழிகள் ..... பத்து பழசு : பல் போனா சொல் போச்சு புதுசு : செல் போனா சொல் போச்சு பழசு : காற்றுள்ள போதே தூற்றிக்கொள் !! புதுசு : பேலன்ஸ் இருக்கும் போதே பேசிக்கொள் .. பழசு : இளங்கன்று பயமறியாது ..!! புதுசு : புது பேட்டரி சார்ஜ் இறங்காது .. பழசு : அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ..!! புதுசு : செல்லின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும் பழசு : நாய் வாலை நிமிர்த்த முடியாது ..!! புதுசு : நெட்வொர்க்கை திருத்த முடியாது .. பழசு : குடிகாரன் பேச்சு , விடிஞ்சா போச்சு ..! புதுசு : கஸ்டமர்கேர் பேச்சு , கட் பண்ணினா போச்சு .. பழசு : வெட்டு ஒண்ணு ... துண்டு ரெண்டு ..!! புதுசு : போனு ஒண்ணு .. சிம்மு ரெண்டு . பழசு : ஆழம் தெரியாமல் காலை விடாதே ..!! புதுசு : 4 ஜி இல்லாமல் போனை வாங்காதே .. பழசு : தேனெடுத்தவன் கையை நக்காமல் இருக்க மாட்டான் ..!! புதுசு : நெட் எடுத்தவன் பொழுதை போக்காமல் இருக்க மாட்டான் .. பழசு : பேராசை பிறந்தா பெருநஷ்டம் ..!! புதுசு : பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம் .. நன்றி Sridhar Nambi ...
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு