பெண் குழந்தைப் பிறந்த உடன்
அந்தக் குழந்தையைக் கைகளில்
வாங்கக் கூட முடியாமல்
கண்ணில் நிறைந்த
ஆனந்தக் கண்ணீரோடு அந்தக் குழந்தையைப் பார்த்தவனுக்கு தான் தெரியும் பெண் குழந்தை அருமையைப் பற்றி...
காலையில் அலாரம் வச்சு
பள்ளிக் கூடத்துக்கு செல்ல
எழுப்பி விட கிட்ட வந்து
வாஞ்சையோடு தலையைத்
தடவிக் கொடுப்பவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தையின் அருமையைப் பற்றி..
இன்னும் ஒரு தோசை வச்சிக்க
இல்லைனா லஞ்ச் வரதுக்குள்ள
பசிக்கும்மா ன்னு தட்டுல ஒரு
தோசையை வைத்தவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தையின் அருமையைப் பற்றி...
எந்த அலுவல் வேலையாக
இருந்தாலும் கரெக்ட் டைம்க்கு
பொண்ணு வீட்டுக்கு வந்துட்டாளானு
அக்கறையோடு போன் பண்ணுபவனுக்கு
தான் தெரியும்
பெண் குழந்தை அருமையைப் பற்றி...
ராத்திரி தூங்கும் போது
ஒரு சின்ன இருமல் சத்தம்
வந்தாலும் ஓடிச் சென்று
சிரப் கொடுப்பவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமையைப் பற்றி...
ஸ்கூல் டூர் போறாங்க
நானும் போகாட்டாப்பானு
போனதும் அந்த இரண்டு நாளும்
அதே நினைப்பா இருப்பவனுக்கு
தான் தெரியும்
பெண் குழந்தையின் அருமையைப் பற்றி...
பொண்ணு பெரிய மனுஷி ஆயிட்டானு
கேள்விப்பட்டதும் தன்னாலே
கண்ல இருந்து வந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைச்சவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தையின் அருமையைப் பற்றி...
திருமண ஆன அன்று அத்தனை
பேரும் கடமை முடிந்துவிட்டது என
இருக்கையில் பார்த்துக்கும்மா
நான் இருக்கேன் னு கரம் பற்றி
ஆறுதல் சொன்னவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தையின் அருமையைப் பற்றி....
பிரிக்க முடியாத பந்தம்
தந்தை மகள் உறவு...
அத்தனை உறவுகளை விட
ஒரு படி மேல் அந்த உறவுக்கு..
அப்பா என்று குரல் வந்தவுடன்
அன்பாய் மகளைப் பார்க்கும் அந்த
ஒற்றைப் பார்வை இருக்கே
சொர்க்கம் சார் பொண்ணுங்களுக்கு √
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
Comments
Post a Comment