Skip to main content

வாழ்க்கைப் பாடம்...

 

 

 

 

வாழ்க்கைப் பாடம்...
ஒரு நாள் ஒரு சின்னப் பையன் தன் அம்மாவுடன் கடைக்குப் போனான். அந்தக் கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்றுச் சொல்லி விட்டு பாட்டிலில் இருந்து சாக்லெட்டைக் காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.
ஆனால் அந்தப் பையன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை. கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை. அதைப் பார்த்த அவன் அம்மா சாக்லெட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார். அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.
பிறகு அந்தக் கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார். அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் சாக்லெட்டை வாங்கிக் கொண்டான்.
வீட்டிற்குப் போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் கடைக்காரர் கொடுத்தவுடன் உடனே வாங்கிக் கொண்டாயே என்றுக் கேட்டார்.
அதற்கு அந்தப் பையன் அம்மாவிடம் சொன்னான் அம்மா என் கையைப் பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது. நானே பாட்டிலில் இருந்து சாக்லெட்டை எடுத்துக் இருந்தால் எனக்குக் கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும் ஆனால் இப்போ என் கையைப் பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லெட் கிடைச்சிருக்குப் பாருங்கள் என்றான்...
இந்தக் கதையின் நீதி :-
எதையுமே நாமாக நாடிப் போனால் நமக்கு குறைவாகத் தான் கிடைக்கும் அதுவாகத் தேடி வந்தால் அதிகமாக கிடைக்கும் இது தான் உண்மை √

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem