ஒரு அக்பர் பீர்பால் கதை உள்ளது.
ஒரு எண்ணை வியாபாரி, எண்ணை விற்பதற்காக ஒரு கசாப்பு கடைக்காரன் கடைக்கு செல்வான். அங்கு அவனது பணப்பையை கசாப்பு கடைக்காரன் எடுத்து விட்டதாக, புகார் கூறுவான். கசாப்பு கடைக்காரனோ, எண்ணை வியாபாரி தனது பணப்பையை திருடியதாக புகார் கூறுவான்.
இந்த வழக்கு அக்பர் அவைக்கு வரவே, பீர்பால் இந்த வழக்கில், ஒரு சாட்சி உள்ளதாக கூறுவார். அக்பர் எவ்வாறு என்று வினவ, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் பணப்பையின் நாணயங்களை கொட்டுவார். காசுகளில் எண்ணை இருந்த்தால், அந்த தண்ணீரில் எண்ணை மிதக்கும். அப்போது, அந்த பணப்பை, எண்ணை வியாபாரியின் பணப்பை என்று கூறி, தீர்ப்பு வழங்குவார்.
எண்ணை விற்ற காசு ஆகையால், அதில் எண்ணைக் கறை இருந்தது.
அதனைப் போலவே, ஒரு மலர் வியாபாரி, மலர்களை அளந்து விற்று, காசுகளை வாங்கும் போது, அந்தக் காசு மணக்க வாய்ப்புள்ளது. ஆனால், மலர்களை விற்பது ஒரு இடம். கல்லா இன்னொரு இடமாக இருந்தால், இவ்வாறு காசு மணக்காமல் இருக்கலாம் ;-)
காசு மணந்தாலும், மணக்காவிட்டாலும், மதிப்பு மாறாது. நமது கவலையெல்லாம், அதன் மதிப்புதான்.
https://qr.ae/pGPIvp
Comments
Post a Comment