Skip to main content

Posts

Showing posts from July, 2021

பெண் குழந்தை

  பெண் குழந்தைப் பிறந்த உடன் அந்தக் குழந்தையைக் கைகளில் வாங்கக் கூட முடியாமல் கண்ணில் நிறைந்த ஆனந்தக் கண்ணீரோடு அந்தக் குழந்தையைப் பார்த்தவனுக்கு தான் தெரியும் பெண் குழந்தை அருமையைப் பற்றி... காலையில் அலாரம் வச்சு பள்ளிக் கூடத்துக்கு செல்ல எழுப்பி விட கிட்ட வந்து வாஞ்சையோடு தலையைத் தடவிக் கொடுப்பவனுக்கு தான் தெரியும் பெண் குழந்தையின் அருமையைப் பற்றி.. இன்னும் ஒரு தோசை வச்சிக்க இல்லைனா லஞ்ச் வரதுக்குள்ள பசிக்கும்மா ன்னு தட்டுல ஒரு தோசையை வைத்தவனுக்கு தான் தெரியும் பெண் குழந்தையின் அருமையைப் பற்றி... எந்த அலுவல் வேலையாக இருந்தாலும் கரெக்ட் டைம்க்கு பொண்ணு வீட்டுக்கு வந்துட்டாளானு அக்கறையோடு போன் பண்ணுபவனுக்கு தான் தெரியும் பெண் குழந்தை அருமையைப் பற்றி... ராத்திரி தூங்கும் போது ஒரு சின்ன இருமல் சத்தம் வந்தாலும் ஓடிச் சென்று சிரப் கொடுப்பவனுக்கு தான் தெரியும் பெண் குழந்தை அருமையைப் பற்றி... ஸ்கூல் டூர் போறாங்க நானும் போகாட்டாப்பானு போனதும் அந்த இரண்டு நாளும் அதே நினைப்பா இருப்பவனுக்கு தான் தெரியும் பெண் குழந்தையின் அருமையைப் பற்றி... பொண்ணு பெரிய மனுஷி ஆயிட்டானு கேள்விப்பட்டதும் தன்னால...

வாழ்க்கைப் பாடம்...

        வாழ்க்கைப் பாடம்... ஒரு நாள் ஒரு சின்னப் பையன் தன் அம்மாவுடன் கடைக்குப் போனான். அந்தக் கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்றுச் சொல்லி விட்டு பாட்டிலில் இருந்து சாக்லெட்டைக் காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார். ஆனால் அந்தப் பையன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை. கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை. அதைப் பார்த்த அவன் அம்மா சாக்லெட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார். அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை. பிறகு அந்தக் கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார். அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் சாக்லெட்டை வாங்கிக் கொண்டான். வீட்டிற்குப் போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் கடைக்காரர் கொடுத்தவுடன் உடனே வாங்கிக் கொண்டாயே என்றுக் கேட்டார். அதற்கு அந்தப் பையன் அம்மாவிடம் சொன்னான் அம்மா என் கையைப் பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது. நானே பாட்டிலில் இருந்து சாக்லெட்டை எடுத்துக் இருந்தால் எனக்குக் கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும் ஆனால் இப்போ என் கையைப் பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்...

Anniversary

                      https://qr.ae/pGPaQu

மலர் விற்ற காசு மணக்குமா?

         மலர் விற்ற காசு மணக்குமா? ஒரு அக்பர் பீர்பால் கதை உள்ளது. ஒரு எண்ணை வியாபாரி, எண்ணை விற்பதற்காக ஒரு கசாப்பு கடைக்காரன் கடைக்கு செல்வான். அங்கு அவனது பணப்பையை கசாப்பு கடைக்காரன் எடுத்து விட்டதாக, புகார் கூறுவான். கசாப்பு கடைக்காரனோ, எண்ணை வியாபாரி தனது பணப்பையை திருடியதாக புகார் கூறுவான். இந்த வழக்கு அக்பர் அவைக்கு வரவே, பீர்பால் இந்த வழக்கில், ஒரு சாட்சி உள்ளதாக கூறுவார். அக்பர் எவ்வாறு என்று வினவ, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் பணப்பையின் நாணயங்களை கொட்டுவார். காசுகளில் எண்ணை இருந்த்தால், அந்த தண்ணீரில் எண்ணை மிதக்கும். அப்போது, அந்த பணப்பை, எண்ணை வியாபாரியின் பணப்பை என்று கூறி, தீர்ப்பு வழங்குவார். எண்ணை விற்ற காசு ஆகையால், அதில் எண்ணைக் கறை இருந்தது.   அதனைப் போலவே, ஒரு மலர் வியாபாரி, மலர்களை அளந்து விற்று, காசுகளை வாங்கும் போது, அந்தக் காசு மணக்க வாய்ப்புள்ளது. ஆனால், மலர்களை விற்பது ஒரு இடம். கல்லா இன்னொரு இடமாக இருந்தால், இவ்வாறு காசு மணக்காமல் இருக்கலாம் ;-) காசு மணந்தாலும், மணக்காவிட்டாலும், மதிப்பு மாறாது. நமது கவல...