"மனம் இருந்தால் மார்கம் உண்டு."
இன்றைக்கு 100க்கு 90 பேர் தங்களுக்கு பிடிக்காத வேலையே செய்கிறார்கள்.."நாம படிச்சது ஒன்று செய்கின்ற வேலை ஒன்று" என்று தான் நாட்களும் கடந்து சென்று கொண்டு இருக்கிறது...அதற்காக என்ன செய்வது "நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் அந்த வேலைக்கு உங்களை பிடித்துவிட்டது" என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது நமது கடமை.
கிராமப்புறங்களில் ஒரு வேடிக்கையான புராணக்கதை ஒன்று சொல்வார்கள். அந்த கதையை இங்கு குறிப்பிடுகிறேன். அந்த கதையோடு இந்த கேள்விக்கான விளக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன்...
கட்டுடள் தேகம் கொண்ட அழகான பெண், அவள் பெயர் தும்பை... இவள் மற்றவர்களின் முகம்சுளிக்க வைக்கக்கூடிய வகையில் விரும்பத்தகாத வேலையை செய்து தன் பிழைப்பை நடத்தி வந்தாள். அப்படி என்ன வேலை அது என்றால் தேவதாசி அல்லது பரத்தை என்று அழைக்கக்கூடிய தேxxx(தேவரடியாள்) வேலைதான் அது....தனக்கும் பிடிக்காத வேலையாகத்தான் அவளும் இதை பார்த்தாள். அதேசமயம் அந்த வேலைதான் இவளுக்கு சோறு போடுவதால் தான் செய்யும் அந்த தாசி தொழிலை கடவுளாகவும் பார்த்தால்..அவளது சூழ்நிலை காரணமாக அந்த வேலையை விட்டு வெளியேறவும் முடியவில்லை.
அவ்வாறாக தாசி தொழில் செய்யும் இவள் தீவிர சிவபக்தி கொண்டவள்... தினமும் இறைவனிடம் தான் செய்யும் தவறான வேலையிலிருந்து தனக்கு பாவ விமோச்சனம் வேண்டி பூஜை செய்வாள்.
இந்த தாசி தொழில் செய்யும் பெண்மணியை அனுபவிக்க வேண்டும் என்றால் பூ,பழம்,வெற்றிலைபாக்கு அத்துடன் சிறதளவு பணத்தை தாம்புலத்தட்டில் வைத்து அவளிடம் குடுத்தால்.., அவள் அதை ஏற்றுக்கொண்டு அன்று ஓர் இரவு மட்டும் தாம்புலம் கொடுத்தவருக்கு மனைவியாக இருப்பது வழக்கம்.
அதன்படி ஒரு காலை பொழுதில்., பார்ப்பதற்கு அருவருக்கத்தக்க வயது முதிர்ந்த முதியவர் ஒருவர் "பூ, பழம், வெற்றிலைப்பாக்கு, பணத்துடன் கூடிய தாம்புலத்தை" கையில் ஏந்திக்கொண்டு அந்த தாசியின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு கதவை தட்டுகிறார்.
அந்த பெண் கதவை திறந்து சற்றும் முகம் கோணாமல் அந்த வயதானவரின் கையில் இருந்த தாம்புலத்தை பெற்றுக்கொண்டு "இன்று இரவு முழுவதும் உனக்கு நான் மனைவி" என்று வாக்குக் கொடுக்கிறாள்.
சூரியன் மறைகிறது., இரவு மலர்கிறது அந்த முதியவர் தாசியின் வீட்டிற்கு உள்ளே செல்கிறார். தாசியும் கம கம மல்லிகை பூவை கூந்தலில் சூடி முதியவரை இன்முகத்துடன் வரவேற்று தனது அறையில் அமரவைக்கிறாள்.
அப்போது கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது..தாசி கதவை திறந்து பார்க்கிறாள் அங்கே அந்த ஊரின் ராஜா நிற்கிறார்..ராஜா அவளிடம் "என்னால் காமத்தை அடக்கவே முடியவில்லை இன்று இரவு உன்னுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்படுகிறேன்., அதற்காக உனக்கு எவ்வளவு பொன், பொருள் வேண்டுமானாலும் தர தயாராக உள்ளேன்" என்று தாசியிடம் கூறுகிறார்..
அதற்கு அந்த தாசி நான் இன்று வேறு ஒருவரிடம் கை நீட்டி பணம் வாங்கிவிட்டேன்., அதன்படி இன்று இரவு மட்டும் உள்ளே அமர்ந்திருக்கும் முதியவருக்கு நான் சொந்தம். ஆதலால் உங்கள் கட்டளையை என்னால் ஏற்க முடியாது..., எனக்கு என்று ஒரு தொழில் தருமம் இருக்கு" என்று கூறுகிறாள்.
உடனே ராஜாவுக்கு மூக்குமேல் கோபம் வந்து "ராஜாவுக்கே எதிர்ப்பு தெரிவிக்கிறாயா நான் நினைத்தால் உன்னை இங்கே கொன்று புதைத்து விடுவேன்" என்று மிரட்டுகிறார். அதற்கு தாசி "தாராளமாக கொல்லுங்கள் எனக்கு மகிழ்ச்சிதான் ஆனால் என் தொழில் தருமத்தை மீரச் சொல்லி என்னை கொலை செய்வதால் அந்த பாவம் உங்களை தான் சேரும்" என்று தாசி ராஜாவிடம் வாதம் செய்கிறாள்.
உடனே ராஜா வேறு வழி இல்லாததால்" ச்சீ போ " என்று சென்றுவிடுகிறார்.
தாசி கதவை சாத்திவிட்டு உள்ளே போய் முதியவரை பார்க்கிறாள். முதியவருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஒரே வாந்தி, பேதியான நிலையில் இருக்கிறார். அதை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு முதியவரை கட்டிலில் அமர்த்துகிறார். மீண்டும் தாசியின் மீது வாந்தி எடுக்கிறார். இவ்வாறாக அந்த முதியவர் விடிய விடிய வாந்தி பேதியுமாக போகிறார்..தாசியும் சிறிதும் முகம் சுளிக்காமல் முதியவர் எச்சங்களை சுத்தம் செய்து அவரிடம் அன்பாகவே அந்த இரவை கடத்துகிறார்.
அந்த முதியவர் அந்த பெண்ணிடம் கடந்த இரவில் "உங்களை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கிவிட்டேன். நீங்கள் நினைத்திருந்தால் ராஜாவுடன் சென்றிருக்கலாம்..இதை எல்லாம் பொருட்படுத்தாமல் இந்த இரவை என்னுடன் பயணிக்க வைத்து உங்கள் நிம்மதியை கெடுத்துவிட்டேன்." என்று முதியவர் மன்னிப்பு கேட்கிறார்.
அதற்கு அவள் "நான் என் வேலையைத்தான் செய்தேன்..இரவு முழுவதும் நான் உங்களுக்கு பணிவிடை செய்யும் மனைவியாக இருந்தேன்..நான் பார்க்கும் வேலை என் மதிப்பை குறைத்தாலும் என் பணியில் நான் நேர்மையாகவும், என் தொழிலை தெய்வமாகவும் பார்கிறேன்" என்று சொன்னாலாம் அந்த தாசி.
உடனே அந்த முதியவர் சிவப்பெருமானாக அவதாரம் எடுத்து தாசிக்கு காட்சி கொடுக்கிறார்.."உனது தொழில் பக்தியை மெச்சினோம்....உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றார்.
இந்த தாசிக்கு ஒரே மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை..நான் செய்த பூஜை வீண் போகவில்லை என்று மனதில் மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க. அதே சமயம் சற்று பதற்றம் வேறு.
பதற்றத்தால் தான் கேட்க வந்த வரத்தை மாற்றி சொல்லி விட்டாள்.அதாவது "உன் திருவடியின்(பாதம்) மீது என் திருமுடி இருக்க வேண்டும்" என்று தான் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தால் மாறாக "ஐயனே, நின் திருமுடியின்மேல் என் திருவடி இருக்கவேண்டும்'' என்று கேட்டுவிட்டாள்.
ஈசனும் அப்படியே வரம் அருளினார். அதற்குள் தான் சிவபெருமானைப் பற்றி அபசாரமாகப் பேசிவிட்டதை அறிந்துகொண்ட தும்பை, ''ஐயனே, எம்பெருமானே! தங்களை நேரில் தரிசித்த பதற்றத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்து அருள்புரியுங்கள் பிரபு"என்று பிரார்த்தித்தாள்.
கருணைக் கடலான சிவபெருமான் மென்மையாகப் புன்னகைத்தபடி, ''தும்பையே, உன் பக்தியின் பெருமையை விவரிக்க முடியாது. நீ பூவாகப் பிறந்து என் திருமுடியை எப்பொழுதும் அலங்கரிப்பாய்' என்று அருள்புரிந்தார். அது முதல் ஈசனுக்கு பிடித்த மலர்களில் ஐந்து விரல்களைப் போன்ற இதழ்களைக் கொண்ட இந்த தும்பை பூவும் பூஜையில் சிவனின் திருமுடிகளை அலங்கரிக்கிறது.
https://qr.ae/pGFPxF
இராஜபதி இரா
Comments
Post a Comment