Skip to main content

புத்திசாலியான சர்தார்ஜி

சமீபத்தில் நான் படித்த கதை. இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் வாழ்ந்துவந்த பஞ்சாபி சீக்கியர் ஒருவரின் கதை.

கிருஸ்தவர்களுக்கு ஈஸ்டர் ( ஏசுபிரான் உயிர்த்தெழுந்த நாள் ) ஒரு முக்கிய பண்டிகையாகும். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய நாற்பது நாட்கள் அவர்களுக்கு தவக்காலம் ( Lent) ஆகும். அந்த நாட்களில் அவர்கள் மட்டன், சிக்கன் போன்ற நான் வெஜ் அயிட்டங்களை சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். ரோம் நகரில் உள்ள மக்களில் 99 சதவீதம் கிருஸ்தவர்களே. ஆதலால் அவர்கள் வீட்டில் நான்வெஜ் அயிட்டம் எதுவும் சமைக்கப்படவில்லை, எவரும் அதை உண்ண வாய்ப்பில்லை.

ரோம் நகரில் பஞ்சாபி சீக்கியர் ஒருவர் வசித்துவந்தார். அவருக்கு தினமும் சிக்கன் இல்லாமல் சாப்பிடமுடியாது. ஒருதடவை அந்த பஞ்சாபி வசித்த ரோம் நகரில் தவக்காலம் வந்தது. எல்லா கிருஸ்தவர்களும் நான்வெஜ் தவிர்த்து மற்ற உணவு வகைகளை சாப்பிடத் தொடங்கினர்.

ஆனால் இந்த பஞ்சாபி வீட்டிலிருந்து கமகமவென்று சிக்கன் குருமா வாசனை வந்தது. அக்கம்பக்கத்து வீட்டிலிருந்த கிருஸ்தவர்களுக்கு வாயில் எச்சில் ஊற ஆரம்பித்தது.சிக்கன் சாப்பிடும் ஆசை பெருகியது. ஆனால் தவக்காலம் என்பதால் அதை சாப்பிடமுடியாது.தமது தவத்தை இவன் கெடுக்கப் பார்க்கிறானே என்று நினைத்தனர்.

அந்த தெருவிலிருந்த கிருஸ்தவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி அந்த பஞ்சாபி வீட்டிற்கு சென்று அவருடன் சண்டையிட்டனர். "நாங்க விரதத்தில் இருக்கோம். நீ இப்படி நான்வெஜ் சமைச்சா எங்களுக்கு ஆசை வராதா ? நீ செய்வது நியாயமா ? " என்று கேட்டனர். "இனிமேல் நாற்பது நாட்களுக்கு நீ வெஜிடெரியன் உணவுதான் சாப்பிடணும்" என்று எச்சரித்தனர். அவரும் ' சரி ! ' என்று சொல்வதுபோல் மண்டையை ஆட்டினார்.

மறுநாள் மதியம் அந்த பஞ்சாபி வீட்டிலிருந்து சிக்கன் வாசனை வந்தது. அனைவரின் மூக்கையும் துளைத்தது. தெருவிலுள்ளவர்கள் ஒரு முடிவிற்கு வந்தனர். போப் ஆண்டவரிடம் சென்று முறையிடுவதுதான் வழி என்பது அந்த முடிவு. அனைவரும் போப் ஆண்டவரிடம் சென்று இவன் இப்படிச் செய்து தங்கள் தவத்தைக் கெடுக்கிறானே என்று புகாரளித்தனர். போப் அவர்களிடம் "அந்த ஆசாமியை என்னிடம் அழைத்து வாருங்கள் ! நான் அவனுக்கு தக்க அறிவுரை கூறி அவன் மனதை மாற்றுகிறேன் ! " என்று உறுதியளித்தார்.

அவர்களும் அவ்வாறே அந்த பஞ்சாபியை போப்பிடம் அழைத்துச்சென்றனர். போப் அவரிடம் " சகோதரா ! நீ சிக்கன் சாப்பிடுவதுபற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை. நானும் அதை ருசித்துச் சாப்பிடுவேன் ! இது தவக்காலம் என்பதால் நான் அதை சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளேன். மற்ற கிருஸ்தவர்களும் சிக்கன் சாப்பிடுவதை இப்போதைக்கு நிறுத்திவைத்துள்ளனர். அவர்களின் தவத்தைக் கெடுக்கும் விதமாக நீ வீட்டில் சிக்கன் சமைக்காதே ! அது பெரிய பாவமாகும். அந்த பாவத்தை நீ செய்யாதே! " என்று புத்திமதி கூறினார். பஞ்சாபியும் " நீங்க சொல்றது சரிதாங்க ! நாளைலேந்து நான் என்னை மாத்திக்கிறேனுங்க ! " என்று கூறி விடைபெற்றார்.

மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் தந்தூரி சமையல். இந்த முறை வாசனை ரொம்ப சூப்பர். தெருவாசிகளை அந்த வாசனை வெகுவாக ஈர்த்தது. செய்வதறியாது திகைத்தனர். திபுதிபுவென்று ஓடி போப்பிடம் முறையிட்டனர். போப் விஷயத்தைப் புரிந்துகொண்டார். இந்த பஞ்சாபியை என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. சட்டென அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. அந்த பஞ்சாபியை இழுத்துவந்து அவருக்கு ஞானஸ்நானம் செய்வித்து கிருஸ்தவராக்கிவிடுவோம் என்று முடிவுசெய்தார். வந்தவர்களிடம் "நாளை அவரை இழுத்துவாருங்கள் ! அவரை ஒரு கை பார்த்துவிடுகிறேன் ! " என்று சொன்னார்.

அவர்கள் அவ்வாறே அந்த மனிதரை அழைத்து வந்தனர். போப் அந்த பஞ்சாபியிடம் கிருஸ்தவ மதத்தின் பெருமைகளை எடுத்துக்கூறி அவரை அங்கிருந்த ஒரு சிறிய குளத்தில் மூன்றுமுறை அமுக்கி ஞானஸ்நானம் செய்வித்தார். போப் அவரிடம் " உன் பெயர் என்ன ? " என்று கேட்டார். அவர் " என் பெயர் சுக்வீந்தர் சிங் ! " என்று பதிலளித்தார். போப் ஆண்டவர் அவரிடம் "இப்போது நீ கிருஸ்தவனாகிவிட்டாய் ! இப்போதுமுதல் உன் பெயர் சாமுவேல், சாமுவேல், சாமுவேல் ! " என்று மூன்றுமுறை கூறி அவரை மூன்றுமுறை தண்ணீரில் அமுக்கி எடுத்தார்.

பிறகு அவரிடம் " இப்போது நீ கிருஸ்தவன் ஆகிவிட்டபடியால் நாளைமுதல் ஈஸ்டர் பண்டிகை வரும்வரை நீ சிக்கன் சாப்பிடக்கூடாது ! இது ஜீசஸ் பேரில் ஆணை ! " என்று போப் கூறினார். சாமுவேல் ஆன சுக்வீந்தர் சிங்கும் அதற்கு ஒப்புக்கொண்டார். போப்பிற்கு மிக்க மகிழ்ச்சி. கூட இருந்த மக்களும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். சாமுவேலை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

மறுநாள் மதியம் சாமுவேல் என்ன சமைக்கிறார் என்பதை அறிய தெருவாசிகளுக்கு ஆர்வம். அன்றும் அவர் வீட்டிலிருந்து சிக்கன் சமைக்கும் வாசனை. மக்கள் திடுக்கிட்டனர்.நேராக போப்பிடம் சென்று புகார் செய்தனர். திடுக்கிட்ட போப் " அவனை இங்கே இழுத்து வாருங்கள் ! நான் விசாரிக்கிறேன் ! " என்று சொன்னார். அந்த கிருஸ்தவர்கள் அனைவரும் சாமுவேல் வீட்டுக்குச் சென்று அவரை தரதரவென்று இழுத்துவந்து போப்பின் முன் நிறுத்தினர்.

போப் அவரிடம் "சாமுவேல் ! இன்று மதியம் சிக்கன் சமைத்து சாப்பிட்டாயா ? "என்று கேட்டார். அவர் " இல்லவே இல்லீங்க ! நான் சிக்கன் சமைக்கலீங்க ! இவங்க பொய் சொல்றாங்க ! நான் Potato (உருளைக்கிழங்கு)தான் சமைத்து சாப்பிட்டேன் ! இது ஜீசஸ்மீது சத்தியம்! " என்று கூறினார். போப் குழம்பிப்போய்விட்டார். யார் சொல்வதை நம்புவது என்று அவரால் முடிவுசெய்ய முடியவில்லை. அவருக்கு புதிய உத்தி ஒன்று தோன்றியது. மறுநாள் சாமுவேல் வீட்டுக்குச் சென்று அவர் என்ன சமைக்கிறார் என்பதை நேரடியாகப் பார்த்துவிடவேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தார்.

மறுநாள் பகல் 11 மணிக்கு போப் சாமுவேல் வீட்டுக்குச் சென்றார். கதவின்பின் மறைந்துகொண்டு சாமுவேல் சமையலறையில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை கவனித்தார். சாமுவேல் ஒரு முழு சிக்கனை தூக்கிப்பிடித்து அதை ஒரு வாளியில் உள்ள தண்ணீரில் மூன்று முறை அமுக்கி அதனிடம் " இப்போது முதல் நீ சிக்கன் இல்லை,

Potato

Potato

Potato

என்று மூன்று முறை கூறினார். இதைப் பார்த்த போப் திகைத்து நின்றார். என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை.

போப் வந்ததை அறிந்த தெருவாசிகள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். போப் அவர்களிடம் "நான் இவனுக்கு டேக்கா கொடுத்து கிருஸ்தவனாக மாற்றினேன். இன் எனக்கே டேக்கா கொடுத்து சிக்கனை Potatoவாக மாற்றுகிறான்.இவனிடம் இனி வாதம்செய்து பயனில்லை. நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றுவிடுங்கள். நான் என் வேலையைப் பார்த்துக்கொள்கிறேன் ! " என்று கூறினார்.

பிறகு அந்த பஞ்சாபியைப் பார்த்து " சாமுவேல் ! கர்த்தர் உன்னை ஆசீர்வாதிப்பாராக ! " என்று கூறினார். அதற்கு பஞ்சாபி " ஐயா ! எப்படி சிக்கனை Potatoவாக மாற்றமுடியாதோ அப்படி சுக்வீந்தர் சிங்கை சாமுவேலாக மாற்றமுடியாது. நான் சுக்வீந்தர் சிங்தான்!" என்று சொன்னார். போப் பதில் ஏதும் கூறமுடியாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

புத்திசாலியான சர்தார்ஜியின் கதை இது.

  Thanks to G. Raghavan  ta.quora

 https://qr.ae/pGAM08

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

+6   அய்யனார் தங்கவேலு ஆலகிராமம் October 20, 2017 இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல ் விக்கிறான். உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான். மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் . நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான். இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான். Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம். நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செ...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...