Skip to main content

Elango Kallanai

-Elango Kallanai
எனது எட்டாண்டு இயற்கை வேளாண் ஈடுபாட்டில் பல வேடிக்கை ஆசாமிகளை கண்டு வந்துள்ளேன். முதலில் அதிகம் தொண்டு நிறுவனப் பின்னணியில் இருந்து அதிக அறிவுரை வழங்கும் ஆசாமிகள். நாமே விவசாயி பிள்ளையாக இருந்தாலும் NGO க்களின் புனித வேடங்கள் நம்மை மிரள வைக்கும். அறிவுரை தேவையில்லை என்கிற நிலையை அடைய குறைந்தது நான்கு பயிர்ப் பருவமாவது உழல வேண்டும்.
அடுத்து வியாபாரிகள். "நீங்கள் ஆர்கானிக் சான்றிதழ் வாங்குங்கள். அப்போது தான் எங்கள் விற்பனைக்கு எளிதாக இருக்கும்" என்பார்கள். இந்த சான்றிதழ் அரசியல் பற்றி ஒரு புத்தகம் கூட போடலாம். ஒவ்வொரு நாட்டு ஏற்றுமதிக்கும் ஒரு விதமான சான்றிதழ். உதாரணமாக ஐரோப்பிய நாடுகளின் சான்றிதழுக்கு ஒரு இலட்சம் ரூபாய். இந்திய சான்றிதழ் பற்றிய உண்மை என்னவெனில் processக்குத் தான் சான்றிதழ். நமது தயாரிப்பைப் பற்றிய சோதனைகள் ஒன்றும் கிடையாது. அப்படி நாமே நமது பொருளைத் தரப்படுத்தச் சொன்னால் ph போன்ற பொதுவான சோதனைகள் செய்து தருவார்கள். ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் நாம் கேட்கும் அங்ககச் சோதனைகள் ஒன்றும் தரமாட்டார்கள். தனியாரிடம் நாம் எடுத்துச் சென்று steroid, preservatives மற்ற இரசாயனங்களின் சோதனைகளை செய்து தர ஒரு sampleக்கு 10000 ரூபாய் ஆகும். அந்தச் சான்றிதழ் ஏற்கபடுவதுமில்லை.
வியாபாரிகளிடம் நாம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தாலும் அவர்கள் அடித்து விளையாடுகிறார்கள்.பல உதாரணங்கள் இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் " நாங்கள் எப்படி இதை இயற்கை உணவு என்று நம்புவது?" என்பார்கள். உங்களுக்கு விவசாயம் தெரிந்தால் மட்டுமே உங்களுக்கு விளக்க முடியும் என்று சொல்வதுண்டு. இதுவரை கலப்படச் சந்தை மேல் வராத சந்தேகமெல்லாம் இப்போது வரும். ஏனென்றால் இவர்களை தூண்டி விளையாடும் அரசியல் முட்டாள்கள் வேறு குறுக்கே மறுக்கே ஓடுகிறார்கள்.
ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர் வேளாண்மையை விட்டு வெளியேறுகிறார்கள். இறக்குமதி செய்து கொண்டு கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லத் தான் ஒருத்தரும் இருக்க மாட்டார்கள்.
இந்த வருடம் தான் முதன் முதலாக விவசாயக் கல்லூரியில் இருந்து அழைத்து அங்கக உரம் விற்கிறோம். வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். சென்ற ஆண்டை விட GST உடன் இரண்டு மடங்கு விலை அதிகம்.
எவ்வளவு போராட்டங்கள் என்று எண்ணிப் பார்த்தேன். எட்டு ஆண்டுகள் பலருக்கும் ஆசிரியராக வழிநடத்த முடிந்தது என்பது தான் இதில் நான் பெற்றது.


Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem