நேற்று என் உறவினரான 75 வயதான பாட்டியை அழைத்துக் கொண்டு முகநூல்
நண்பர்களின் ஆலோசனைப்படி,ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்,பலம்நேர்
வட்டத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள "விருப்பாக்சிபுரம்"என்ற கிராமத்திற்க்கு சென்றேன்,
பாட்டி ஸ்ட்ரோக் என்றழைக்கப்படும் பக்க வாதத்தால் வலது புற கை மற்றும்
கால் செயலிழந்து கடந்து 10 நாட்களாக காஞ்சியில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்,சிகிச்சை பலனளிக்காத
நிலையில்,நேற்று அதிகாலை 3 மணியளவில் காஞ்சியிலிருந்து காரில் கிளம்பினோம்,
நாங்கள் விருப்பாக்சிபுரம் சென்றடைந்தபொழுது 6 மணி ஆகி விட்டது,எங்களுக்கு முன்னரே சுமார் 50 கார்கள் அணிவகுத்து நின்றன,
பல்வேறு மாநிலங்கள் இருந்தும் நெடுந்தூரம் பயணித்தும் இங்கு அளிக்கப்படும் ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்தனர்,வந்திருந்த அனைவரும் முகத்திலும் பயணச் சோர்வையும் தாண்டி ஒரு நம்பிக்கை,
சற்று நேரத்தில் "மோகன்ராவ்" என்றழைக்கப்படும் அந்த வைத்தியர் கைகளில் செப்பு டம்ளரில் மருந்து கொண்டு வந்து கார்களில் அமர்ந்திருக்கும் நோயுற்றுவர்களுக்கு கொடுத்தார்,கூடவே சிறிது புழுங்கல் அரிசியும்,
எங்களின் முறை வந்ததும்,மருந்தை கொடுத்து விட்டு,இரண்டு வார்த்தைகள் பாட்டியிடம் நம்பிக்கை சொல்லிவிட்டு மருந்தைக் கொடுத்தார்,3 மணிநேரம் கழித்து மீண்டும் ஒருமுறை மருந்து கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் அடுத்த காரை நோக்கி நகர்ந்தார்,
ஓய்வெடுக்கும் வேளையில் ஒருசிலரின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்,92 வயதான முதியவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இங்கே வந்து மருந்து சாப்பிட்டு குணமடைந்து தற்போது இரண்டாவது முறை வந்துள்ளார்,அவர் நடந்து சென்றே மருந்து வாங்கி உண்டதைப் பார்க்க ஆச்சரியமடைந்தேன்,
பல லட்சங்களை செலவு செய்தும் தனியார் மருத்துவமனைகளில் குணமடையாதவர்கள் கூட இங்கு வந்த பிறகு குணமடைந்து செல்வதைக் கண்கூடாக கண்டபிறகு வியப்படையாமல் இருக்க முடியவில்லை,
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை,ஆனால் பெரும்பாலானவர்கள் குணமடைந்துள்ளனர்,9 மணியளவில் உப்பு இல்லாத பச்சரிசி சாதம் சுடச்சுட வழங்கப்பட்டது,
அதேபோல மூன்று மணிநேர இடைவெளியில் மூன்று முறை மருந்து கொடுத்து விட்டு,குணமாகவில்லை என்றால் மட்டும் பதினைந்து நாள் கழித்து மீண்டும் அழைத்து வர வேண்டும் எனக் கூறினார்,அதற்க்காக அவர் வாங்கும் தொகை ரூ.500/- மட்டுமே,பணமில்லாமல் வரும் ஏழைகளுக்கு இலவசமாகவும் மருந்தளிப்பதாகக் கூறுகின்றனர்,
நாங்களும் நம்பிக்கையுடனும் திருப்தியுடனும் திரும்பினோம்,
2 மாதங்களுக்கு பத்திய உணவுக்கான பட்டியலையும்,இயற்க்கை வலி நிவாரணிகளும் கொடுக்கப்பட்டது,
அதே ஊரில் பல வைத்தியர்கள் இதே மருத்துவத்தை செய்தாலும் இவரிடம் வரும் கூட்டம் மட்டும் குறைவதில்லை,
உங்கள் குடும்பத்தில் அல்லது உறவினர்களில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் தாராளமாக இங்கு சென்று வர பரிந்துரை செய்யலாம்.
மோகன்ராவ்
ஆயுர்வேத வைத்தியசாலை,
விருப்பாக்சிபுரம்,
பலம்நேர் வட்டம்,
சித்தூர் மாவட்டம்.
Uthamarasa Ramalingam

Comments
Post a Comment