Skip to main content

குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விட கூடாது

*எக்காலத்திற்கும் ஏற்ற கதை*
சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்.அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார்.
அவனை அசைத்துப் பார்த்தார்.அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார்.

மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார்.குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது.
திகைத்துப் போனார் சாது. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும்,இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு.
குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார்.
அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்.
சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான்.
சாது மெல்லச் சிரித்தார்.
"சொல்லாதே!" என்றார்.
திருடன் மிரண்டான்."எது?
என்ன?" என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.
சாது சொன்னார்.
."குதிரையை நீயே வைத்துக்கொள்.
ஆனால்,நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே.
மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள்.
நான் இந்த குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி நான் கவலை படவில்லை.
காரணம், சில தினங்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும்.
தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய,நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிர் போககூடும்.
புரிகிறதா?"...
திருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
💎
*குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விட கூடாது*.
*நல்லவர்களையும், நல்ல நட்பையும் இழந்து விடக் கூடாது*



ஒருவர் தன் குருவிடம் கேட்டார்
என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள்.
நான் என்ன செய்வது..?
குரு சொன்னார்,
அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்.
என்னால் முடியவில்லையே!
அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்.
அதுவும் முடியவில்லையே!
சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள்.
குருவே! அதுவும் முடியவில்லை!
குரு சொன்னார்,
அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை, கடக்க முடியவில்லை, கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்று அர்த்தம்..

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem