ஒரு பசு மாடுகள் கூட்டம். தினமும் மேய்ச்சலை முடித்துவிட்டு அமைதியாக
வீட்டுக்கு திரும்பும். வழியில் ஒரு பாலம். அதன் அடியில் எந்த நேரமும்
பன்றி ஒன்று சேற்றில் புரண்டு கொண்டிருக்கும். பசுக்களைப் பார்த்து அது
கேளிசெய்யும். ஆனால், பசுக்கள் ஒரு முறைகூட பன்றிக்கு பதில் கூறியதே இல்லை.
பசுக்கூட்டத்தில் ஒரு கன்று இருந்தது. இளம் வயதல்லவா! பன்றியின் பேச்சு அதற்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அதற்கு தக்க பாடம் புகட்ட நினைத்தது. அதற்கான தருணத்திற்காக காத்திருந்தது.
ஒரு நாள் மாலை பசுக்கள் கூட்டமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தன. வழக்கம் போல் பசுக்கூட்டத்தைப் பார்த்து கேளி செய்தது பன்றி.
“தைரியமிருந்தால் ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா! என்னை ஜெயிச்சிட்டு பிறகு போங்கடா', என்று முழங்கியது பன்றி.
கன்றுக்கு கோபம் வந்தது. பசுக்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல் சட்டென்று பன்றியின் மேல் பாய்ந்தது. அரை மணி நேர கடும் சண்டை. பன்றி சோர்ந்துபோனது. கன்று வென்றது. ஆனால், கன்று சண்டையிடுவதை பற்றி கவலைப்படாமல் பசுக்கள் வீடு திரும்பின.
கன்றுக்கு மகிழ்ச்சி. பன்றியை வென்றுவிட்டதல்லவா! வீரத்துடன் தன் கூட்டத்தை நோக்கி ஓடியது.
‘நண்பர்களே! பன்றி இனி நம் வம்புக்கு வராது. அதன் கொட்டத்தை அடக்கிவிட்டேன்', என்று பெருமையோடு சொல்லியது கன்று.
எந்த பதிலையும் சொல்லாமல் பசுக்கள் அமைதியாக இருந்தன.
‘என்ன அமைதியாக இருக்கிறீர்கள்? ஏதாவது பதில் சொல்லுங்கள்', என்று கேட்டது கன்று. அப்போதும் அங்கு அமைதி நிலவியது. அப்போது ஏதோ துர்நாற்றம் வீசியது.
‘ஏதோ துர் நாற்றம் வீசுகிறதே!' என்று மூக்கை பிடித்துக் கொண்டது கன்று.
அங்கிருந்த பசுக்கள் கன்றைப்பார்த்து சிரித்தன.
‘நாற்றம் உன் உடம்பிலிருந்து தான் வீசுகிறது. பன்றியுடன் சகதியில் சண்டையிட்டதால் உன் உடலில் ஒட்டியிருக்கும் சகதியிலிருந்து துர் நாற்றம் வீசுகிறது. சண்டையிடும் போதும், பிறகு ‘வெற்றி. வெற்றி, .வெற்றி', என்று முழங்கியபோதும் நாற்றத்தை உன்னால் உணர முடியவில்லை. இப்படி நடக்கும் என்று தெரிந்ததால்தான் நாங்கள் அமைதியாக இருந்தோம்', என்று சொல்லிய பசுக்கள் சற்று விலகி நின்றன.
‘நீங்கள் என்னை வெறுத்தாலும் பரவாயில்லை! உங்களின் சார்பாகத்தான் பன்றியுடன் சண்டையிட்டேன். பன்றியை வென்றேன். பன்றியின் கர்வத்தை அடக்கினேன்', என்று பெருமையோடு சொன்னது கன்று.
பசுக்கள் மீண்டும் சிரித்தன.
‘நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை போலிருக்கிறது. என்னுடன் வாருங்கள். தோற்றுப்போன பன்றியிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன். தனது தோல்வியை அது உங்களிடம் சொல்லும்', என்றவாறு பன்றி இருக்கும் இடத்திற்கு பசுக்களை அழைத்துச்சென்றது கன்று.
சேறும் சகதியுமாய் காட்சியளித்த இடத்தில் சோகமாக படுத்திருந்தது பன்றி.
‘பன்றியே! சண்டையில் நீ தோற்றுப்போனது உண்மைதானே? அதை இவர்களிடம் சொல்', என்றது கன்று.
‘என்னது சண்டையா? நான் தோற்றேனா? யார் சொன்னது? உன்னுடன் சேர்ந்து சகதியில் புரண்டது எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமா', என்றது பன்றி!

Comments
Post a Comment