Skip to main content

Kadi Joke

 




ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர்
வந்தாரு.
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.
சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி........ ...
"
உன் பேர் சொல்லு"
"
பழனி"
"
உன் அப்பா பேரு"
"
பழனியப்பா",
அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு"
"
மாரி"
"
உன் அப்பா பேரு"
"
மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........
"
உன் பேர் சொல்லு"
"
பிச்சை"
"
உன் அப்பா பேரு" "பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு,
சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க
அப்படினு புரிஞ்சுருச்சு.
அடுத்தப்
பையன எழுப்பினாரு.
"
முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு...."
(
மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"
ஜான்"
"
இப்பொ உன் பேரைச் சொல்லு" "ஜான்சன்"
கொஞ்சமா டென்சன் ஆயிட்டு,
அடுத்த பையன எழுப்பி,
உன் அப்பா பேர சொல்லு,
"
ரிச்சர்டு"
உன் பேரு,
"
ரிச்சர்டசன்"
கொலவெறி ஆயிட்டாரு,
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,
உன் தாத்தா பேர சொல்லு,
"
அப்பாவோட தாத்தாவா?,
அம்மாவோட தாத்தாவா?"
ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு,
அப்பாவோட தாத்தான்னாரு
"
மணி",
சரி அப்பா பேரு?,
"
ரமணி"
உன் பேரு?,
"
வீரமணி"
அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல..
😂😅😛😂😅😛😂😅😛😂😅







திருடன் ஒருவன் ஒரு வீட்டுக்கு திருடச் சென்றான். அங்கு காவலுக்கு ஒரு நாய் இருந்தது. அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை. வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்தது.இவனுக்கு திருடச் செல்லலாமா? வேண்டாமா? உள்ளே போனவுடன் நாய் குரைத்தால் என்ன செய்வது.. இப்போதே குரைத்தால் அடுத்த வீடாவது பார்க்கலாம். அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.
யோசித்தவன் முடிவாக ஒரு பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசி இருக்கிறான். அதை கண்டவுடன் நாய் திருடனை பார்த்து சத்தம்போட்டு குரைத்து, கடிக்க பாய்ந்தது..

அப்போது திருடன் நாயிடம், ''ஏன் சும்மா வேடிக்கை பார்த்த நீ, இலவசமாக பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னை கடிக்க வருகிறாய்'' என்று கேட்டான்..

அதற்கு அந்த நாய் சொல்லியது, ''நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக தெரிந்தவராக இருக்குமோ என்று நினைத்திருந்தேன்.. எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை கொடுத்தாயோ, அப்போதே உறுதியாகி விட்டது நீ திருடன் தான் என்று''..



Kalanchiyam/FB

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem