Skip to main content

Posts

*துருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. . . .*

*துருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. . . .* துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில ் தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள். அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான். ‘ ‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே. அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான். அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த ...

ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா!

ஒரு பசு மாடுகள் கூட்டம். தினமும் மேய்ச்சலை முடித்துவிட்டு அமைதியாக வீட்டுக்கு திரும்பும். வழியில் ஒரு பாலம். அதன் அடியில் எந்த நேரமும் பன்றி ஒன்று சேற்றில் புரண்டு கொண்டிருக்கும். பசுக்களைப் பார்த்து அது கேளிசெய்யும். ஆனால், பசுக்கள் ஒரு முறைகூட பன்றிக்கு பதில் கூறியதே இல்லை. பசுக்கூட்டத்தில் ஒரு கன்று இருந்தது. இளம் வயதல்லவா! பன்றியின் பேச்சு அதற்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அதற்கு தக்க பாடம் புகட்ட நினைத்தது. அதற்கான தருணத்திற்காக காத்திருந்தது. ஒரு நாள் மாலை பசுக்கள் கூட்டமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தன. வழக்கம் போல் பசுக்கூட்டத்தைப் பார்த்து கேளி செய்தது பன்றி. “தைரியமிருந்தால் ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா! என்னை ஜெயிச்சிட்டு பிறகு போங்கடா', என்று முழங்கியது பன்றி. கன்றுக்கு கோபம் வந்தது. பசுக்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல் சட்டென்று பன்றியின் மேல் பாய்ந்தது. அரை மணி நேர கடும் சண்டை. பன்றி சோர்ந்துபோனது. கன்று வென்றது. ஆனால், கன்று சண்டையிடுவதை பற்றி கவலைப்படாமல் பசுக்கள் வீடு திரும்பின. கன்றுக்கு மகிழ்ச்சி. பன்றியை வென்றுவிட்டதல்லவா! வீரத்துடன் த...

அழகிய கனவு

ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது . கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது . இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை . வண்ண வண்ண விளக்குகள் , அழகான நதிகள் , மரங்கள் , எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது . எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும் . அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது . ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை . அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது . காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன ? அவரிடம் குருவி வழி கேட்டது . “ எனக்கு முழு விபரம் தெரியாது . தெரிந்த வரை சொல்கிறேன் . அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர் . ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது . குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது . குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க , அந்த வழியே ஒரு பாம்பு வந்தது . பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி , “ அந்த உலகத்தின் சந்தோஷங்களை ...

குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விட கூடாது

*எக்காலத்திற்கும் ஏற்ற கதை* சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்.அவனை கண்ட ச ாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார். அவனை அசைத்துப் பார்த்தார்.அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார். மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார்.குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது. திகைத்துப் போனார் சாது. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும்,இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு. குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார். அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான். சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான். ச...

தமிழ் மருத்துவ அறிவுரை

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம் குரலுக்கு தேன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்...

"ஓம் நமசிவாய நமஹ"...!!

ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி..., "சிவபுராணம் படித்துக் கொண்டே இருப்பார்".....!! இளைஞன் ஒருவன்பல நாட்களாக....," இதனை கவனித்துக் கொண்டே இருந்தான்"....!! ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான்....!!" தாத்தா...! "எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே".....,"இதை எத்தனை நாளா படிக்கிறீங்க"...? என்றான். பெரியவர் சொன்னார், " ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் "....!! அப்படின்னா...., " இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே"....!! "அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க"..... ? என்றான். தாத்தா சிரித்தபடி கூறினார், " எனக்கு ஒரு உதவி செய்"....!! "அதை நீ செஞ்சு முடிச்சப்புறம் நான்  பதில் சொல்றேன்".....!! இளைஞன் கேட்டான், " என்ன உதவி தாத்தா.....? " பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார். "அதில் அடுப்புக் கரி இருந்தது"......!! அதை ஒரு மூலையில் கொட்டினார்....! பல நாட்களாக...

பெண் என்பவள் அழகிய தேவதையா?

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? ஒரு குட்டிக்கதை இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் ”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே” கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? (வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்) தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான். அவள் சொன்னாள் விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்? அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்” சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்” இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும் கிடைத்தது. அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான். அவள் கேட்டாள் "நீ...