Skip to main content

Posts

General Health Tip

( 3 ௦ வயதுக்கு மேற்ப்பட்வர்களுக்கு .... ஆண் , பெண் இருபாலருக்கும் ....) • 1 கப் ... மஞ்சள் எலுமிச்சை பழம் ( 20 பழம் ) சாறு • 1 கப் ... இளம் இஞ்சி சாறு • 1 கப் ... வெள்ளை பூண்டு சாறு • 1 கப் ... ஆப்பிள் சைடர் வினிகர் ( தங்க நிறம் ) இஞ்சி / பூண்டு சாறு எடுக்க .... இஞ்சி / பூண்டு தோலை நீக்கி விட்டு ... கேரட் துருவியில் தேய்த்து ... சிறு துண்டுகளாக்கி ... பின்னர் மிக்சியில் போட்டு ... சிறிதளவு தண்ணீர் சேர்த்து ... அரைத்து கூழாக எடுத்து ... மெல்லிய துணியில் ... வடி கட்டி சாறு எடுக்க வேண்டும் ... மேலே உள்ள 4 சாறுகளையும் ஒரு வாணலியில் கலந்து .... அடுப்பில் வைத்து ... மிக மிக குறைவான தீ சூட்டில் வைத்து .... மொத்த சாற்றின் அளவு 3 கப் அளவுக்கு ... குறையும் படி செய்ய வேண்டும் ... கிண்டி விட வேண்டியது இல்லை ... இதை செய்து முடிக்க சுமார் ஒரு மணி நேரம் பிடிக்கும் ... பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து மூடி வைத்து ... இந்த கலவையை ஆற விடுங்கள் ... நன்கு ஆறியவுடன் ... இந்த கலவையோடு ... 3 கப் ... சுத்தமான தேன் கலந்து ... முன்னமே கழுவி காய வைத்துள்ள 5 ௦௦ மில்லி பிளாஸ்டிக...

Manja Pai

அப்பச்சி வைத்திருந்த மஞ்சப்பை எல்லாம் பிளாஸ்டிக் பையானபோது நாம் கலங்கவில்லை. செவ்வந்தியும் சாமந்தியும் தவழ்ந்த பூஜை அறைகளில் பிளாஸ்டிக் பூக்கள் கடவுள்களை அலங்கரித்த போது நாம் பதறவில்லை. அத்தனை சூட்டையும் தாங்கிய வாழையிலை, ஹோட்டல்களில் பிளாஸ்டிக் இலைகளாக மாறியபோது நாம் கவலைப்படவில்லை. பார்சல் டீ காபி வாங்க கூஜாவை தூக்கிக் கொண்டு அலைவதை அவமானமாக பார்த்து, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கிய போது நாம் அதை உணரவில்லை. நிமிர்ந்து குடிக்கிற இளநீரை வசதிக்காக பிளாஸ்டிக் ஸ்ட்ரா போட்டு குடித்தபோது நமக்கு அது பெரிய விஷயமாக இல்லை. இலைதழை தின்று கொண்டிருந்த ஆடு,மாடுகள் பிளாஸ்டிக்கை மென்று விழுங்கியபோது நமக்கு எந்த குற்ற உணர்வுமில்லை. மண்பானையையும், எவர்சில்வரையும் ஒதுக்கிவிட்டு, பிளாஸ்டிக் குடங்களில் நீர்பிடித்தபோது நமக்கு எந்த வலியுமில்லை. ஒவ்வொருநாளும் கொட்டுகிற குப்பைகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களாய் இருந்தபோதும் நமக்கு எந்த பதற்றமுமில்லை. இப்போது அரிசியில்தானே பிளாஸ்டிக் வந்திருப்பதாக சொல்கிறார்கள். பதற வேண்டியதில்லை. *நம்முடைய மூளை பிளாஸ்டிக் ...

Kannadasan

அந்தக் காலத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் . பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட ... அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் . கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – கண்ணதாசனை ..! ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் . இதோ .. அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது : " ஒரு முறை சென்னை வானொலியில் ' இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும் ' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள் . நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி , கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன் . ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது .” அவ்வளவுதான் ..! அடுக்கடுக்காக போன் கால்கள் ..! யார் யாரோ போன் செய்த...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...