Skip to main content

General Health Tip


( 3௦ வயதுக்கு மேற்ப்பட்வர்களுக்கு .... ஆண், பெண் இருபாலருக்கும்....)

• 1
கப் ... மஞ்சள் எலுமிச்சை பழம் ( 20 பழம் ) சாறு
• 1
கப் ... இளம் இஞ்சி சாறு
• 1
கப் ... வெள்ளை பூண்டு சாறு
• 1
கப் ... ஆப்பிள் சைடர் வினிகர் ( தங்க நிறம் )
இஞ்சி / பூண்டு சாறு எடுக்க .... இஞ்சி / பூண்டு தோலை நீக்கி விட்டு... கேரட் துருவியில் தேய்த்து ... சிறு துண்டுகளாக்கி ... பின்னர் மிக்சியில் போட்டு ... சிறிதளவு தண்ணீர் சேர்த்து ... அரைத்து கூழாக எடுத்து ... மெல்லிய துணியில் ... வடி கட்டி சாறு எடுக்க வேண்டும்...

மேலே உள்ள 4 சாறுகளையும் ஒரு வாணலியில் கலந்து.... அடுப்பில் வைத்து... மிக மிக குறைவான தீ சூட்டில் வைத்து .... மொத்த சாற்றின் அளவு 3 கப் அளவுக்கு ... குறையும் படி செய்ய வேண்டும்... கிண்டி விட வேண்டியது இல்லை ... இதை செய்து முடிக்க சுமார் ஒரு மணி நேரம் பிடிக்கும் ...
பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து மூடி வைத்து ... இந்த கலவையை ஆற விடுங்கள்...
நன்கு ஆறியவுடன் ... இந்த கலவையோடு ... 3 கப் ... சுத்தமான தேன் கலந்து ... முன்னமே கழுவி காய வைத்துள்ள 5௦௦ மில்லி பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில்... காற்று புகாவண்ணம் அடைத்து ... சாப்பாட்டு மேசை மேல் வைத்து விடவும்....
6
மாதங்களுக்கு ... ( இப்பொழுது ஏதாவது உடல் நலக் குறைவு இருக்கும் பட்சத்தில்... உதாரணத்திற்கு ... முட்டி வலி ... முதுகு வலி ... இனிப்பு நீர் ... மற்றும் ) குறைந்தது ஒரு வருடம் ..) தினமும் காலையில் எழுந்து பல் தேய்த்தவுடன்... ஜூஸ் உள்ள பாட்டிலை குலுக்கி விட்டு... வெறும் வயிற்றில்... 15 - 2ml அளவு, ... ஒரு டேபிள் ஸ்பூனில் எடுத்து ... சிறிது சிறிதாக ... சப்பி சப்பி சாப்பிடவும்....
அடுத்த 1 மணி நேரத்துக்கு ... வேறு எதுவும் அருந்த்தவோ / உண்ணவோ கூடாது ...
1
மணி நேரத்திற்கு பிறகு ... வழக்கமான காலை உணவு சாப்பிடலாம் ...
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இந்த மனித வாழ்க்கையை வென்றிடுங்கள்.. 

.Kathiervel Kumar/ FB

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem