ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை
http://ta.oxforddictionaries.com/
பெண்ணே பெண்ணே நீ யார்???
--------------------------------------------------------
பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய்
தாய்க்கு தோழியாய், தந்தைக்கு குட்டி தேவதையாய்
உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும்
வண்ணநிலவல்லவா நீ !!!
வாழ வந்த வீட்டிற்கு விளக்காக,
தலைவனுக்கு தூணாக
கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி
கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து, கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து
வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!!
பணிக்கு போகும் பகல்நிலவுகளின்
பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ??
அலார அரைகூவலுடன் அதிகாலை,
கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி
சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல்
பெரியோர்களுக்கு வேண்டிய, பொறுப்புகளை செய்து
கணவனை கவனித்து,
கருத்தாய் கண்மணிகளை கிளப்பி
பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து
அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல்
கடமைகளுடன் காலைநேரம்,
பணிப் பொறுப்புடன் பகல் நேரம்,
சோர்வாக சாயங்காலம்
வேலை விட்டு வீடு திரும்பும் வேளை,
நெடுந்தூர பேருந்துப் பயணம்
கசக்கி பிழிந்த காகிதமாய்,
களைத்துப் போன கண்கள்
சோர்வுகள் சற்று தலைதூக்கிப் பார்க்கும்போது
தன்னைத்தானே தட்டிக்கொடுத்து,
கடமைகளைக் கருத்தில்கொண்டு
புத்துணர்வுக்கொண்டு புதியநாளுக்கான
பயணத்தை தொடரும்
பகலவனல்லவா நீ !!!
கல்லால் கட்டிய வீட்டிற்கு அன்பாலும் பண்பாலும்
புத்துயிரூட்டி இல்லமாக்கிய இல்லத்தரசியல்லவா நீ !!!
சோதனைகளை வெற்றிப் படிகளாக்கி
சாதனை சிறகுகளால் சிகரம் தொடும்
பாரதி பாடிய புதுமைப் பெண்ணடி நீ !!!
Comments
Post a Comment