Skip to main content

Posts

அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை

மனைவி இறந்ததன் பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.. "உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று. அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை" இதைகேட்ட தகப்பன் கேட்டான். "அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?" அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் ..... "நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும்.. ஆனால்.. "இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டால்.".!!! அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை...இந்த உலகில் என் கண்களால் நான் கண்ட கடவுள் என் அம்மா மட்டுமே....என் உயிர் என் அம்மாதான்.!!!!!    

மனிதனுக்கு ஏன் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது?

        இறைவன் எழுதிய அழகான மென் பொருள் தான் பிரச்னை. பிரச்னை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை. ஒரு ஜப்பானிய கதை சொல்வோமா? இது குளிர்சாதன பெட்டி இல்லாத காலத்து கதை. கடலில் மிக நீண்ட தூரம் சென்று மீன் பிடித்து வந்தால் அங்கே பிடித்தமான மீன் வகைகள் நிறைய இருக்கும் என்று அவர்கள் அறிந்து கொண்டனர். பல மணி நேரம் படகில் பயணித்து நடுக்கடல் சென்று மிக அதிக அளவு மீன்களை மீனவர்கள் பிடித்தனர். பல நாட்கள் தங்கியிருந்து அதிகமான மீன்களை பிடித்து கொண்டு கரைக்கு வந்தால் அவர்களுக்கு ஒரு பிரச்னை இருந்தது பல மீன்கள் இறந்து இருந்தன . உலர்ந்திருந்தன. நாற்றம் பிடித்தன. எனவே படகில் செயற்கை நீர் தேக்கம் உண்டாக்கி பிடிபட்ட மீன்களை அதில் இட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த முறையில் சிறிய வெற்றி கிடைத்திருந்தது. மீன்கள் சாகவில்லை. எனினும் முழு வெற்றி இல்லை. கரைக்கு கொண்டு வரப்படும் மீன்கள் சோர்ந்திருந்தன. எனவே வழக்கமான சுவை இல்லை. இதனால் விற்பனையிலும் தேக்க நிலை. எல்லையற்ற கடல் நீரில் நீந்தி களித்திருந்த மீன்களுக்கு, நான்கு பக்கமும் எல்லை உள்ள சிறிய நீர்த்தொட்டியில் உயிர் வாழ்வது மிகப...

எது? உலக அதிசயம்.

      எது? உலக அதிசயம். தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒருகட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ்மஹால் மிக அழகான கட்டிடம்தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ்மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா? அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழுஇசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில், குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். ...

தரிசாய் போயிருப்பேன் --- அழகிய கவிதை

 

An Engineer & a Doctor

காபி பொடி டப்பா மூடியில் இவ்வளவு பெரிய சைக்காலஜியா?

 காபி பொடி டப்பா மூடியில்  இவ்வளவு பெரிய சைக்காலஜி யா⁉️ கற்பனைக் கதை அல்ல. அனைவருக்கும் பாடம் புகட்டும் அருமையான நிகழ்வு. கேரளாவில்  ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு  வீடு. வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள். பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சியா இருக்கும். இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு  சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு. அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள  தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல. நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. இனிமே தான் குழந்தை. வார நாட்களில் எங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு போய்ட்டு வரவே சரியா இருக்கும். எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி. காபி குடித்து விட்டு ஒரு மணி நேரசம்பாஷணைக்கு பின் தான் வீடு. நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும். அந்த சில்லென்ற குளிரி...

சிந்தனைக்கு

  #ஒரு_நிறுவனம்   வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது...அதன்படி நிறைய நபர்கள் நேர்கானலுக்கு வந்திருந்தார்கள்.அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்... அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது. இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார்,இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது.''உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும்.அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.''தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்' என்றார்.... ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது.. நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின்...அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர். அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார். ...