Skip to main content

காமராஜர் : நெய்வேலி நிலக்கரி சுரங்கம் உருவான வரலாறு

 

நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். விடிவில்லை. 

முதல்வர் ராசாசியிடம் முறையிட்டார். ஏற்கவில்லை. காமராசர் முதல்வரானதும் நேரில் சென்று பேசினார். பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர். 

மிக விரிவான விஞ்ஞானபூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார். 

தில்லி சென்று நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார். 

காகிதங்களைப் புரட்டியவர் கையை விரித்தார் ..

" இதெல்லாம் சாத்தியமில்லை.." 

"ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன. 

ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை. அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை.." 

கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளியை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி, 

கை சுத்தம் .. பிரதமராவது, பெரிய தலைவராவது ,. ..

அடுத்தமுறை பொறியாளருடன் நேருவைச் சென்று சந்தித்தார். விளக்கினார். முதலீடு 150 கோடி என்றார் 

"திட்டம் ஓகே.. நிதியில்லையே.. தமிழக அரசு நடத்தலாம்..." 

"அரசின் ஆண்டு வருமானம் 150 கோடி .. 
எங்களால் எப்படி...." 

" நிலக்கரியை வெளியே கொண்டுவர மூன்றாண்டுகள் ஆகும் என்கிறார். ஆண்டுக்கு 50 கோடி போடுங்க..."

முடிவெடுத்தார் தமிழக முதல்வர் தமிழர் காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம். தமிழ்நாடுதானே காமராசருக்கு குடும்பம். 

1954 ல் 50 கோடி ஒதுக்கினார். பணிகள் தொடங்கப்பட்டன. 

அடுத்த வருடம் 50 கோடி. 

1956 ல் கடைசி தவணையைக் கொடுத்துவிட்டு தவிக்கத் தொடங்கினார். 

மக்கள் வரிப்பணமாச்சே.. மத்திய அரசு கேள்வி கேட்குமே ...! 

சுரங்கப் பணிகள் முடிவடைந்து, நிலக்கரியை வெட்டியெடுத்து வெளியே கொண்டு வரும் நாளில்.... 

முதல்வர் நெய்வேலி வந்தார். சுரங்கத்தில் நின்றார். 

அதோ.. 

நீரும் நிலக்கரியும் கலந்து வழியும் கனிம வளத்தை தலையில் சுமந்தபடி தொழிலாளிகள் வருகின்றனர். 

ஓடினார் முதல்வர்....

தமிழ் மண்ணின் வளம்.. தமிழர் நலம் அல்லவா தலையிலிருந்து கறுப்பு தங்கமாக வழிகிறது ? 

தாவியணைத்தார் அந்த தொழிலாளியை... கரியை அள்ளி கைகளால் முகர்ந்தார். ஆனந்தக் கூத்தாடினார். 

வெள்ளை கதர் சட்டை , கறுப்பாகி மின்னியது. 

இன்று ஆண்டுக்கு லாபம் 3500 கோடிகள்...!

இந்த பதிவை படித்தபோது என்னையுமறியாமல் என் கண்கள் நனைந்தன!

இப்படியும் ஒரு தலைவர் இவரன்றி,  இனி பிறக்கபோவதுமில்லை... %

நன்றி .. > வாழ்க வளமுடன் ... %

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Thamizh Poem

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...