Skip to main content

Posts

Showing posts from April, 2021

காமராஜர் : நெய்வேலி நிலக்கரி சுரங்கம் உருவான வரலாறு

  நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் விவசாயி . வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார் . விடிவில்லை . முதல்வர் ராசாசியிடம் முறையிட்டார் . ஏற்கவில்லை . காமராசர் முதல்வரானதும் நேரில் சென்று பேசினார் . பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர் . மிக விரிவான விஞ்ஞானபூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார் . தில்லி சென்று நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார் . காகிதங்களைப் புரட்டியவர் கையை விரித்தார் .. " இதெல்லாம் சாத்தியமில்லை .." " ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர் . இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன . ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை . அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை .." கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளியை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி , கை சுத்தம் .. பிரதமராவது , பெரிய தலைவராவது ,. .. அடுத்தமுறை பொறியாளருடன் நேருவைச் சென்று சந்தித்தார் . விளக்கினார்