Skip to main content

Posts

Showing posts from March, 2021

My mom

 My mom did not sleep. She felt exhausted. She was irritable, grumpy, and bitter. She was always sick until one day, suddenly, she changed....!   One day my dad said to her: -I've been looking for a job for three months and I haven't found anything, I'm going to have a few beers with friends.   My mom replied: - It's okay.   My brother said to her: - Mom, I'm doing poorly in all subjects at the university.   My mom replied: - Okay,  you will recover, and if you don't, well, you repeat the semester, but you pay the tuition.   My sister said to her: - Mom, I smashed the car.   My mom replied: - Okay daughter, take it to the car shop & find how to pay, and while they fix it, get around by bus or subway.   Her daughter-in-law said to her: - Mother-in-law, I've come to spend a few months with you.   My mom replied: - Okay, settle in the living room couch and look for some blankets in the closet.   All of us gathered worried to see th...

குடியாத்தம் இடைத்தேர்தலில் தலைவர் காமராஜர்

      1954-ம் வருடம். குடியாத்தம் இடைத்தேர்தலில் தலைவர் காமராஜர் போட்டியிட்டார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மக்கள் அங்கீகாரத்திற்காக இந்தத் தேர்தலைச் சந்தித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அவரை எதிர்த்து நின்றது. தமிழ்நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் அவரை ஆதரித்தன. சொல்லப் போனால் குடியாத்தத்துக்கும், காமராஜருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. “அங்கே நிற்க வேண்டாம்.. அது உங்களுக்குப் பாதுகாப்பான தொகுதியில்லை..” என்று பலரும் அவரைப் பயமுறுத்தினார்கள். “நீங்கள் விருதுநகர்க்காரர். அந்த வட்டாரத்திலேயே ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பதுதான் உசிதம்..” என்றனர். தலைவர் அவர்களது விவாதத்தை மறுத்துவிட்டார். “நான் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர். எல்லாப் பகுதி மக்களும் என்னை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரிய வேண்டும். முடிவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எனக்காக ஒரு தொகுதியைக் காலி பண்ணச் சொல்வது முறையில்லை. இடைத்தேர்தல் வந்திருக்கிற தொகுதியில் நிற்கிறதுதான் நியாயம்..” என்று கூறிவிட்டார். தேர்தலில் கடுமையாக வேலை செய்தார். கிராமம், கிராமமாகப் போனார். குடிசைகளி...

அன்புள்ள சுஜாதா ஸாருக்கு.. நலமா..?

  02-03-2008 அன்புள்ள சுஜாதா ஸாருக்கு.. நலமா..? தாங்கள் இப்போது ‘எங்கே’ இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது என்றாலும், தங்களின் விருப்பப்படியே ‘நரகம்’ என்றழைக்கப்படும் சுவாரசியத்தின் பிறப்பிடத்தில் வாசம் செய்பவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் சொர்க்கத்தைவிட நரகத்தையே அதிகம் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அப்படி அங்கேயே போய்ச் சேர்ந்திருந்தால், உங்களைவிட நானும் சந்தோஷப்படுவேன். ஏனெனில் உங்களின் சந்தோஷமே எனது சந்தோஷம். இங்கிருந்ததைவிட ‘அங்கு’ நன்றாகவே இருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன். ‘புதிய இடம்’ என்பதால் முதலில் கொஞ்சம் குழப்பமாகவே இருக்கும். மனம் ஒருநிலைப்படாது.. மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள், உடன்பிறந்தார், நண்பர்கள், பகைவர்கள் என்று அனைவரையும் தேடும். ஆனால் புறப்பட்ட இடம் அதுதான் என்பது, தாங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் இடம் ஏது?’ என்ற கவியரசின் கருத்துக்கேற்ப, கொடுத்தவனே தங்களை எடுத்துக் கொண்டான்.. அரங்கனடி இணைந்துவிட்டீர்கள். சந்தோஷம்.. உங்களுக்கும், எனக்கும் என்ன ஸார் சம்பந்தம்? நான...

நாம உச்சாடனம்..

       நாம உச்சாடனம்.. ஒருநாள் காசி விஸ்வநாதர் கோவிலில், திடீரென்று ஏதோ உலோகம் விழும் ஒலி கேட்டது. பார்த்தால், தரையில் ஒரு தங்கத்தட்டு கிடந்தது. கர்ப்பக்கிரகத்தின் முன்னிருந்த அரங்கத்தின் உச்சியிலிருந்த திறந்தவெளி வழியே அது விழுந்திருக்க வேண்டும். எல்லோரும் ஆச்சரியத்துடன், அதைச் சூழ்ந்து நின்றனர். அதனருகே தலைமைப் பூஜாரி சென்று கூர்ந்து பார்த்தார். "என் பிரியமான பக்தனுக்கு உரியது இது" என்று அதில் எழுதப்பட்டிருந்தது. புரோகிதர் அதை உரக்கப் படித்தார். எல்லாப் பூஜாரிகளும் அதைப் பிடுங்கிக்கொள்ளப் போட்டி போட்டனர், "என்னைவிட யார் பெரிய பக்தன்? எனது நேரம், திறமை, பலம் எல்லாவற்றையும் நான் விஸ்வநாதரைப் பூஜிப்பதிலேயே செலவிடுகிறேன்!" என்றனர். ஆனால், யார் தொட்டாலும் அந்தத் தட்டு மண்ணால் ஆனதாக மாறிப்போனது. தங்கத் தட்டைப் பற்றிய தகவல் காட்டுத்தீ போல எங்கும் பரவியது. பண்டிதர்கள், பாடகர்கள், கவிஞர்கள், உபன்யாசகர்கள் என்று எல்லோரும் அங்கே வந்தனர். ஆனால் யாருக்கும் அதிர்ஷ்டம் இருக்கவில்லை. காலம் உருண்டோடியது. தங்கத்தட்டு கேட்பாரில்லாமல் இருந்தது. ஒருநாள் ஓர் வெளியூர்க்காரன் அங்கே வந்த...