Skip to main content

Posts

Showing posts from February, 2021

அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை

மனைவி இறந்ததன் பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.. "உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று. அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை" இதைகேட்ட தகப்பன் கேட்டான். "அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?" அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் ..... "நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும்.. ஆனால்.. "இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டால்.".!!! அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை...இந்த உலகில் என் கண்களால் நான் கண்ட கடவுள் என் அம்மா மட்டுமே....என் உயிர் என் அம்மாதான்.!!!!!    

மனிதனுக்கு ஏன் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது?

        இறைவன் எழுதிய அழகான மென் பொருள் தான் பிரச்னை. பிரச்னை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை. ஒரு ஜப்பானிய கதை சொல்வோமா? இது குளிர்சாதன பெட்டி இல்லாத காலத்து கதை. கடலில் மிக நீண்ட தூரம் சென்று மீன் பிடித்து வந்தால் அங்கே பிடித்தமான மீன் வகைகள் நிறைய இருக்கும் என்று அவர்கள் அறிந்து கொண்டனர். பல மணி நேரம் படகில் பயணித்து நடுக்கடல் சென்று மிக அதிக அளவு மீன்களை மீனவர்கள் பிடித்தனர். பல நாட்கள் தங்கியிருந்து அதிகமான மீன்களை பிடித்து கொண்டு கரைக்கு வந்தால் அவர்களுக்கு ஒரு பிரச்னை இருந்தது பல மீன்கள் இறந்து இருந்தன . உலர்ந்திருந்தன. நாற்றம் பிடித்தன. எனவே படகில் செயற்கை நீர் தேக்கம் உண்டாக்கி பிடிபட்ட மீன்களை அதில் இட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த முறையில் சிறிய வெற்றி கிடைத்திருந்தது. மீன்கள் சாகவில்லை. எனினும் முழு வெற்றி இல்லை. கரைக்கு கொண்டு வரப்படும் மீன்கள் சோர்ந்திருந்தன. எனவே வழக்கமான சுவை இல்லை. இதனால் விற்பனையிலும் தேக்க நிலை. எல்லையற்ற கடல் நீரில் நீந்தி களித்திருந்த மீன்களுக்கு, நான்கு பக்கமும் எல்லை உள்ள சிறிய நீர்த்தொட்டியில் உயிர் வாழ்வது மிகப...