உலகின் மிக வலிமையான ஆயுதம் எதுவோ அது தன்னிடம் இருக்க வேண்டும் என்பது அந்த அரசனின் ஆசை. "அகிலம் எங்கும் போங்கள், அதைக் கொண்டு வாருங்கள்' என ஆணையிட்டான். தளபதிகளும், அமைச்சர்களும் ஒன்று கூடி உரையாடி, அந்த ஆயுதம் எது என்று தீர்மானிக்க முற்பட்டனர். வாள், வேல், வில், கணை, கதை, குத்துவாள், கோடரி என்று படைவீரர்கள் பட்டியலிட்டனர். கூர்மையான சொல், கொடு வாளைவிட வலிமையானது, காலாட்படையை பெருக்குவதைவிட, கவிஞர் படையைப் பெருக்குவது நாட்டிற்கு நல்லது என இலக்கியச் சங்கங்கள் தீர்மானங்கள் இயற்றின. எதிரியின் பலவீனம் எதுவோ, அதுவே நமது வலிமையான ஆயுதம் என்பது அமைச்சர்களின் அபிப்பிராயம். மனையாளின் கண்ணீரா, குழந்தையின் புன்னகையா என வீடுகளுக்குள் விவாதங்கள் நடந்தன. விவாதம் வேறு வேறு திசைகளில் திரும்புவதைக் கண்டு வெறுப்பும், எரிச்சலும் அடைந்தான் அரசன். இவர்களை நம்பி இனிப் பிரயோசனம் இல்லை என்ற முடிவுக்கு வந்த அரசன், ஊரின் ஒதுக்குப் புறத்தில் வாழ்ந்து வந்த சாமியாரைச் சந்திக்கப் புறப்பட்டான். அவர் அவனது ஆன்மிகக் குரு. அரசியலிலும் அவ்வப்போது ஆலோசனைகள் சொல்வது உண்டு. சாமியார்களுக்கு ஆய...
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு