அனுபவம் வாய்ந்த ஒரு குருவிடம் சிஷ்யன் " காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் குருவே!" என்று கேட்டான்.
குரு
சொன்னார் " கண்ணா நம் ஆசிரமத்துக்கு பின்னால் உள்ள கரும்பு தோட்டத்திற்கு
சென்று ஒரு நல்ல கரும்பை எடுத்து வா! கடைசி வரை சென்று தோட்டத்திலேயே நல்ல
கரும்பை நீ எடுத்து வரவேண்டும், ஒரே ஒரு நிபந்தனை நீ முன்னே தான்
செல்லவேண்டும் திரும்ப வரக்கூடாது. நல்ல ஒரு கரும்பு நீ பறித்த உடன் அதை
எடுத்துக் கொண்டு அப்படியே திரும்பி வா. திரும்ப வரும்போது எதையும்
தொடக்கூடாது!"
சரி
குருவே என்று சொல்லிவிட்டு சிஷ்யன் நல்ல ஒரு கரும்பை எடுத்து வரப்
புறப்பட்டான். தோட்டத்தில் நுழைந்தவுடன் ஒரு நல்ல கரும்பு விளைந்து
இருப்பதை பார்த்தான். ஆனால் மனதில் இன்னும் கொஞ்சம் முன்னே போகலாம் இதைவிட
நல்ல கரும்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று முன்னேறினான்.
அவன்
அடுத்தடுத்து பார்த்த கரும்புகள் ஒன்றைவிட ஒன்று நன்றாக இருக்கவே அடுத்தது
அடுத்தது என்று கடைசி விளிம்புக்கு வந்துவிட்டான். வெளியே வந்தவன் திரும்ப
உள்ளே நுழைய முடியாது , குருவின் நிபந்தனை ஆயிற்றே, வெறும் கையுடன்
ஆசிரமம் நோக்கி வந்தான். மனதில் ஆனால் பார்த்த முதல் கரும்பினை கொண்டு
வந்திருக்கலாமே என்று நினைத்து வருத்தம் அடைந்தான்.
வெறும்
கையுடன் வந்த சிஷ்யனை பார்த்து குரு " கண்ணா நீ மீண்டும் தோட்டத்திற்கு
செல்! அதே நிபந்தனை, ஒரு கரும்பு கொண்டு வா பார்க்கலாம்!" என்றார் குரு.
இந்த
முறை கரும்பு தோட்டத்திற்கு சென்ற சிஷ்யன் பார்த்த முதல் கரும்பு ஒன்றினை
பறித்துக்கொண்டு வந்துவிட்டான். அந்த கரும்பு சுமாராக தானிருந்தது. ஆனால்
சிஷ்யனுக்கு இதைவிட்டால் அடுத்து எப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில் கிடைத்த
முதல் ஒன்று ஓரளவுக்கு நன்றாக இருந்தால் போதும் என்று ஒரு கரும்புடன்
வந்துவிட்டான்!
நீ
முதலில் சென்றாயே அதுதான் காதல்! ஒன்றை விட ஒன்று நன்றாக தெரியும்.
அடுத்து அடுத்து என்று தேடிக் கொண்டே இருப்போம்! அடுத்த முறை நீ எடுத்து
வந்த கரும்பு தான் கல்யாணம்! எதற்கு வம்பு, இதைவிட்டால் அடுத்தது இதைவிட
மோசமாக இருந்தால் என்ன செய்வது. திரும்ப வர முடியாது காலத்தில்! கிடைத்த
ஒன்றை விரும்பிஎடுத்துக் கொள்வோம். இது தான் கல்யாணம்!
இது வயது வித்தியாசம் கடந்து எல்லா ஆண்களுக்கும் இந்த கல்யாண சைக்காலஜி ஒர்க் அவுட் ஆகும்!
சுவாரசியமான
ட்ரீவ்யா செய்தி : என்னைக் நீங்கள் காதலுக்கும் கல்யாணத்துக்கும்
வித்தியாசம் கேட்டீர்கள் என்றால் " நீங்களும் உங்கள் பார்ட்னர் இருவரும்
ஒன்றாக சேர்ந்து குளித்தால் அதுதான் காதல்! நீங்களும் உங்கள் பார்ட்னர்
இருவரும் உங்கள் குழந்தையை ஒன்றாக சேர்ந்து குளிப்பாட்டினால் அதுதான்
கல்யாணம்!"
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment