Skip to main content

Posts

Showing posts from November, 2019

கணிதமேதை ராமானுஜம்

படித்ததில் பிடித்தது * ➕ ➖ ➗ ✖ ➕ ➖ ➗ ✖ ➕ கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம் “உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” என்று கேட்டார்.நான் அவ்வாறு பழகத்தான் விரும்புகிறேன், ஆனால், நான் எதிர்பார்க்கும் நபரைக் காண இயலவில்லை என ராமானுஜம் பதிலளித்தார் !!!. அவ்வாறென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் மனிதருக்கு என்ன தகுதிகள் தேவைபடுகின்றன? என அந்த நபர் கேட்டார் !!!. *நட்புக்கு இலக்கணமான எண்கள்“220, 284" ஆகிய இரு எண்களைப் போல, நானும் என் நண்பரும் விளங்க ஆசைப்படுகிறேன்”என ராமானுஜம் கூறினார்.* “நீங்கள் கூறிய எண்களுக்கும், என் கேள்விக்கும் என்ன தொடர்புள்ளது?” என்று குழம்பிய நிலையில் அந்த நபர் கேட்டார் !!!. குழம்பியவரைத் தெளிவுபடுத்த விரும்பிய ராமானுஜம் , 220, 284 ஆகிய இரு எண்களின் வகுத்திகளை (Divisors) முதலில் கண்டறியும்படிகூறினார் !!!. சிறிது சிரமப்பட்டு அந்த நபர் இவ்விரு எண்களின் வகுத்திகளைப் பட்டியலிட்டார் !!!. 220 → 1,2,4,5,10,11,20,22,44,55,110,220 284 →1,2,4,71,142,284 இந்தப் பட்டியலில் 220, 284...

கிராமத்து காக்கா

நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது. துபாயிலிருந்து திரும்பிய வடிவேலு மாதிரி அதன் அலட்டல் தாங்க முடியலை! ''எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரி ய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது. ஆனா, இங்கே கட்டைவண்டியும், சைக்கிளும்தான்...'' என்று பட்டணத்து பெருமை பேசியது நகரத்து காக்கா. 'பட்டணத்துல அப்படி என்னதான் இருக்குன்னு நாமளும் போய் பார்த்துட்டு வருவோம்' என்று நகரத்து காக்காவுடன் புறப்பட்டு போனது கிராமத்து காக்கா. ''நான் சொன்ன மாதிரி எவ்வளவு கட்டடம் இருக்குன்னு பார்த்தியா... இதெல்லாம் மனுசங்க வாழ்றது...''என்றது நகரத்து காக்கா. ''ஆமாமா... பார்த்தேன். ஆனா, நாம வாழறதுக்கு இங்கே மரங்களையே காணோமே...''என்றது கிராமத்து காக்கா. நகரத்து காக்கா உடனே பேச்சை மாற்றியது. ''கீழே பாரு... எவ்வளவு வாகனம் போகுது...'' ''வாகனத்தை விடு. ஆளுங்களைப் பாரு... கரும் புகை அடிச்சு அடிச்சு சீக்கிரமே நம்ம கலருக்கு மாறி காக்காவா ஆயிடப் போ...

அறநீர் - சிறுகதை

*அறநீர் - சிறுகதை* அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான். “தி சர்வீஸ்” என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை. பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன். வயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் சேவை இது. எங்கள் நிறுவனத்தில் வயதானவர்களுக்கான சகல சேவைகளும் உண்டு. ஈமெயிலில் தங்கள் தந்தை/தாயின் தகவல்கள், வீட்டு முகவரி ஆகியவற்றை கொடுத்துவிடுவார்கள். நாங்கள் தினமும் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். தினசரிகளை அவர்களே கவனித்துக்கொள்வார்கள். அவர்களுக்கான Emotional Balan...

What are some mind blowing facts about Albert Einstein

What are some mind blowing facts about Albert Einstein? Pratik Das , studied at Kalinga Institute of Industrial Technology Lets begin (1) Albert Einstein's wife often suggested that he dress more professionally when he headed off to work. "Why should I?" he would invariably argue. "Everyone knows me there." (2) When the time came for Einstein to attend his first major conference, she begged him to dress up a bit. "Why should I?" said Einstein. "No one knows me there!" (3)Albert Einstein was often asked to explain the general theory of relativity. "Put your hand on a hot stove for a minute, and it seems like an hour," he once declared. "Sit with a pretty girl for an hour, and it seems like a minute. That's relativity!" (4)When Albert Einstein was working in Princeton university, one day he was going back home he forgot his home address. The driver of the cab d...

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்

ElRich International # தந்தைக்கு_மரியாதை_செய்யுங்கள் .! இதை ஒரு வேண்டுகோளாக தங்கள் முன் வைக்கின்றேன். 🧓🏾 பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது. 🧓🏾 இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர். 🧓🏾 குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர். 🧓🏾 வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து...

*'மினிமலிஸம்'---- minimalism

Do you know minimalism? *'மினிமலிஸம்'* நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை ! ------------------ ``எங்கப்பா என்னைவிட குறைவாத்தான் சம்பாதிச்சார். வீட்ல நாங்க நாலு பிள்ளைங்க . நாலு பேரையும் *நல்லாப் படிக்க வச்சு,* அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, *கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.* ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். *ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல..."* இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. *இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது.* அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்..! *மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புர...

Stories from Glen Abraham Liang's FB page

Glen Abraham Liang October 14, 2011 · One day a farmer's donkey fell down into a well. The animal cried piteously for hours as the farmer tried to figure out what to do. Finally, he decided the anim al was old, and the well needed to be covered up anyway; it just wasn't worth it to retrieve the donkey. He invited all his neighbors to come over and help him. They all grabbed a shovel and began to shovel dirt into the well. At first, the donkey realized what was happening and cried horribly. Then, to everyone's amazement he quieted down. A few shovel loads later, the farmer finally looked down the well. He was astonished at what he saw. With each shovel of dirt that hit his back, the donkey was doing something amazing. He would shake it off and take a step up. As the farmer's neighbors continued to shovel dirt on top of the animal, he would shake it off and take a step up. Pretty soon, everyone was amazed as the donkey stepped up over the edge ...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

ஏதோ ஓர் பெண் கிடைத்தாலே போதும்

வயது ஏற ஏற எப்பேர்ப்பட்ட ஆணாக இருந்தாலும் எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறி கட்டிக்க ஏதோ ஓர் பெண் கிடைத்தாலே போதும் என்ற மன நிலைக்கு ஏன் வருகின்றனர அனுபவம் வாய்ந்த ஒரு குருவிடம் சிஷ்யன் " காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் குருவே!" என்று கேட்டான். குரு சொன்னார் " கண்ணா நம் ஆசிரமத்துக்கு பின்னால் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்று ஒரு நல்ல கரும்பை எடுத்து வா! கடைசி வரை சென்று தோட்டத்திலேயே நல்ல கரும்பை நீ எடுத்து வரவேண்டும், ஒரே ஒரு நிபந்தனை நீ முன்னே தான் செல்லவேண்டும் திரும்ப வரக்கூடாது. நல்ல ஒரு கரும்பு நீ பறித்த உடன் அதை எடுத்துக் கொண்டு அப்படியே திரும்பி வா. திரும்ப வரும்போது எதையும் தொடக்கூடாது!" சரி குருவே என்று சொல்லிவிட்டு சிஷ்யன் நல்ல ஒரு கரும்பை எடுத்து வரப் புறப்பட்டான். தோட்டத்தில் நுழைந்தவுடன் ஒரு நல்ல கரும்பு விளைந்து இருப்பதை பார்த்தான். ஆனால் மனதில் இன்னும் கொஞ்சம் முன்னே போகலாம் இதைவிட நல்ல கரும்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று முன்னேறினான். அவன் அடுத்தடுத்து பார்த்த கரும்புகள் ஒன்றைவிட ஒன்று நன்றாக இருக...