Skip to main content

ஆனந்தயாழ்


#ஆனந்தயாழ் by Lavannya suresh
தஞ்சை!
தெற்கு தெருவில் வந்து headmaster மணியையர் வீடு எது என்று கேட்டால் எல்லோருக்கும் தெரியும்.சிறு குழந்தை கூட அவரின் வீட்டை காட்டி விடும்.மணியையர் ,மீனாட்சி தம்பதிக்கு மூன்று மகன்கள், மற்றும் நான்கு பெண்கள் பெரிய குடும்பம்.அந்தகாலம் ஆதலால் பெரிய குடும்பம்.மணியையரும், மீனாட்சி அம்மாளும்
இருவரும் அத்தை பெண் மாமா பையன் சிறு வயது திருமணம்.எல்லோரையும் படிக்க வைத்து ஆளக்கவே அவர்களுக்கு நேரம் சென்று விட்டது.ஒரே புண்ணியம்
அந்த காலம் என்பதால் அவர்கள் வியாதிக்கான செலவு கிடையாது.அதனால் இருப்பதை வைத்து காலம் ஓட்டினார்கள். தன்னுடைய வேலையிலிருந்து விருப்ப ஓய்வு வாங்கி அதில் வந்த பணத்தில் பெரிய பெண் பவானியின் திருமணத்தை முடிந்ததார் மணியையர். .அவ்அப்பொழுது டியூஷன் சொல்லிக்கொடுத்து மாத பொழுது ஓடுகிறது.வீடு பூர்வீகமான வீடு .ரேழி,மித்தம்,கிணறு பெரிய தூண்கள்,தூண்கள் மீது தஞ்சாவூர் பொம்மைகள் தாங்கி பிடித்து இருப்பதை போல செதுக்கி இருப்பார்கள்.
ஆத்து பெண்கள் பாலா,ராஜீ புவனேஸ்வரி எல்லாரும் காலை வேளைகளில் ஈடுபட்டு இருந்தனர்.பிள்ளைகள் தங்கள் தினசரி கடமைகளை செய்து கொண்டு இருந்தனர்.நம் கதையின் நாயகன் தியாகு ஆபிஸ் சென்று விட்டு இருந்தான்.
சமையலுக்கு
மீனாட்சி வாழைத்தண்டை அருவாமனையில் வட்டமாக நறுக்கி அதில் வரும் நூலை களைந்து எடுத்து பின்பு பொடியாக நறுக்கி மோரில் போட்டுக்கொண்டே மணியையரிடம் ...
ஏந்நா,நீங்களோ ரிடையர் ஆயிட்டேள், judge பொண்ணுக்கு Shakespeare பாடம் சொல்லி கொடுக்க கூப்பிட்டாளே ,போனேளா?
போனேன் மா... பொண்ணு கொஞ்சம் மந்தம் தான் ஆன நல்ல அழகு.நம்ம பெரியவன் தியாகுவை (தியாகராயராஜன் சர்மா) கல்யாண பண்ணிக்கனும் ஆசை அவாளுக்கு...
பின்ன நம்ம தியாகு இருக்கிற அழகுக்கும் ,உத்தியோகத்திற்கும் யாருதான் கேட்க மாட்டா சொல்லுங்கோ?
ராஜா மாதிரி பிள்ளையை பெத்து இருக்கேன்..
சாயந்திரம் தியாகுஆபிஸ்ல இருந்து வந்தவுடன் கேட்டு சொல்லு...
சாயங்காலம் மீனாட்சி
வாசல் தெளித்து கோலம் போட்டு துளசி மாடத்துக்கு விளக்கு ஏற்றினாள்
தியாகு வந்தான்.
அவனுக்கு காபியை கலந்துக்கொண்டு வந்து
தியாகு,judge ஆத்துல உன்ன அவா பொண்ணுக்கு கேட்கிறா போய் பார்த்துட்டு வரலாமா?அம்பி
தியாகு காபியை வாங்கி குடித்துக்கொண்டே அமைதியாக சரியென்று தலையாட்டினான்.
தியாகு AGS OFFICEயில் CHIEF ACCOUTANTவேலை .பார்பதற்கு ஜெமினி கணேசனை போன்ற தோற்றம்..எல்லோரும் ஒரு  நல்ல நாள் பார்த்து பெண் பார்க்க சென்றார்கள்.கூடவே ஆபிஸில் வேலை செய்யும் கிருஷ்ணன் மாமா section manager கல்யாணமானவர் தமிழ் வருடத்திற்கு ஏற்ப ஜெய ,ஜய,விளம்பி, மழலை பட்டாளங்கள் கொண்ட மிக பெரிய சம்சாரி.
பெண்ணை ரொம்ப பிடித்து இருந்தது எல்லோருக்கும். தேனிலவு படத்தில் வரும் நடிகை வசந்தி சாயல் நிறைய இருந்தது. தலையை குனித்துக் கொண்டே காபி தந்தாள்.
விரல்கள் வீணை வாசிக்க தெரியும் என்பதை சொல்லாமல் சொன்னது. பச்சை நரம்புகள் கண்கள் அருகே ஓடியது.
எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணுமா என்றார் விஜயாவின் தோப்பனார்..இல்ல அது எல்லாம் எதுக்கு என்றனர் பெரியவர்கள்...விஜயாவின் அம்மா பிள்ளைக்கு பண்ணு போதும் என்றாள்...எல்லோரும் அமைதியானர்கள்.
காபி மற்றும் சொஜ்ஜி,பஜ்ஜி எல்லாம் பரிமாறப்பட்டது.
கிருஷ்ணன் சார் தொண்டையை கனைத்துக்கொண்டு,இப்படி தான் பாருங்கோ நான் எங்க ஆத்து மாமியை பொண்ணு பார்க்க போகும் போது பையன் என்ன பதவில இருக்கானு அவாத்து பாமா ( சாரி )மாமா கேட்டார்..
நான் டேமேஜர் (சாரி) மேனேஜர் சொல்ல டேமேஜரா??னு கேட்க அவாத்து சின்ன பொண்ணு இன்னிவரைக்கும்என்னை டேமேஜர் மாமான்னு தான் கூப்பிடுவா... அதை கேட்டு எல்லாருக்கும் சிரிப்பு...
(கிருஷ்ணன் sir எப்பவும் முதல் எழுத்து தப்பாக சொல்லறது அவறது பழக்கம். நம்ம தமிழ் சினிமாவில் வர நாகேஷ் மாதிரி,shakesphere merchant of Venice dramaவில் வரும் lancelot போல்) எல்லாரும்
கிளம்பும் போது மீனாட்சி ஏம்மா ,விஜயா ஆத்தில பூத்த நித்யமல்லி உனக்காக தொடுத்து எடுத்து வந்தேன். இந்தா தலையில் வைச்சுக்கோ என்றாள் ..விஜயாவுக்கு மிகவும் மகிழ்ச்சி...
பிறகு
வீட்டிற்கு சென்று கலந்து பேசி சொல்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்தார்கள்.
மறுநாள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்.!!தியாகு பிரகாரத்தை சுற்றி கொண்டு இருந்தான்.
இரண்டு அடி முன்னால் விஜயா அடி பிரதஷனம் செய்துக்கொண்டு இருந்தாள்...
என்ன விஜயா நேற்றைக்கு பெண் பார்க்க வந்தாளாமே என்ன சொன்ன?? என்று அவளின் தோப்பனார் friend கேட்டார்..
வெட்கத்துடன் இன்னிக்கு சொல்றேன் சொல்லி இருக்கா மாமா.
ஓஓஓ,நோக்கு மாப்பிள்ளை பிடிச்சுட்டுது போல இருக்கு, அவர் சரினுசொல்லனும் தானே இந்த அடி பிரதக்ஷணம் மா??பேஷ் பேஷ் ..என்றார்
போங்க மாமா என்று கன்னம் சிவக்க முகம் குனிந்தாள்...
இதை பார்த்துக்கொண்டு இருந்த தியாகு விற்கும் மனம் சந்தோஷம் வானில் பறந்தது.
அடி பிரதக்ஷனம் சுற்றி வரும் போது விஜயா தியாகுவை கடந்து செல்ல..
இருவரும் மெளன பார்வையில் பார்த்துக்கொள்ள... மிக அருகில் சன்ன குரலில் அத்தையை கேட்டதாக சொல்லுங்க ....என்று சொல்லிவிட்டு
வெட்கத்தில் வேண்டுதலை முடிக்காமல் பாதிலேயே ஓடினாள்....
சிரித்துக்கொண்டே ஆத்துக்கு வர..அங்கே ரேடியோவில் "மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்..."
சந்தோஷ வானில் பறந்தான்.
அம்மாவின் பொங்கல் , கத்திரிக்காய் கொஸ்து வாசனை சாப்பிட அழைத்தது.
சாப்பிடும் போது...
ஏன் தியாகு அவாகிட்ட சம்மதம் சொல்லிடலாமா?என்றாள் விசிறியால் விசிறிக்கொண்டே
சரிம்மா ..என்றான்
ஆனால் ஏதும் கேட்காதே அவர்களுக்கு என்ன விருப்பமோ அதை செய்யட்டும்...
ஆமாம் டா..நமக்கும் நாலு குழந்தைகள் இருக்கு இல்லையா ம்ம் ம்ம் எப்படி கரையேத்த போறோமோ தெரியல...
நான் இருக்கேன் ம்மா கவலைபடாதே..ஜாம் ஜாம் நடத்துவேன்.
என்னவோ ,உன்னைதான் தாயுமானவனாக நம்பி இருக்கேன்.
சாமா மாமாவை விட்டு சொல்ல சொல்லேறேன்.
அப்புறம் நேரல போய் நாம் மூகூர்த்த தேதி பேசலாம் ...
சரிம்மா..நான் ஆபிஸ் கிளம்பறேன்..
சைக்கிள்லில் ஆபிஸ் வரும் போது பார்க்கும் எல்லாம் அழகாக தெரிஞ்சது....ஆபிஸில் பொறுக்க முடிவில்லை,வேலை ஓடவில்லை.
ஆபிஸில் வேலை செய்யும் கிருஷ்ணன் சார்...
என்னப்பா தியாகு முகத்தில் களிவட்டம் ஓ (சாரி )ஒளிவட்டம் தெரியறதே... கண்னை(சாரி )பெண்னை பிடித்திடத்தோ?
இல்ல சார்... அப்படி இல்லை....
சரி ,சரி அழுக்கும் போதே (சாரி )இழுக்கும் போதே தெரியறது...
வாழ்த்துக்கள்...
கருந்து எங்கப்பா?(சாரி) விருந்து எங்கப்பா??
இல்ல சார் இன்னும் உறுதியாகல...மாமா போய் இருப்பார்...
போய் தெரிஞ்சுண்டு வந்துடு ..எதுக்கு வீண் மங்கடம் (சாரி) சங்கடம்...
நல்ல யோசனையாக தோணித்து அவர் சொன்னது.
மதியம் சாமா மாமாவை பார்க்க அவா ஆத்துக்கு வந்தான்.
குமிட்டி அடுப்பில் ஈயச்சொம்பில் ரசம் கொதித்துக் கொண்டு இருந்தது..
வாசனை நாசியை தொட்டதது.மாமா...
மாமி வாடா குழந்தை என்ன அதிசயமா இந்த பக்கம்..
இல்ல மாமி..
ம்ம் எல்லாம் தெரியும்.மாமா அங்கதான் போயிருக்கார்.
சட்டென மனத்தில் சுவராசியம் குறைந்தது வெளியில் காண்பிக்காமல்..ஓ அப்படியா ... என்றான் தியாகு.
சித்த நாழி இரு என்று மாமி அரிசி , தேங்காய் போட்டு பாயசம் பண்ணினாள்.
வராதகுழந்தை வந்து இருக்கே...
அதுவும் இல்லாம ,நல்ல விஷயம் வேற நடக்க போறது...
அப்புறம் இந்த மாமி ஞாபகம் எங்க வரபோறது...
சிரித்துக்கொண்டே பரிமாறினாள், அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டான்...கூடவே மாமா பெண் வாண்டு வேதா, அத்தங்கா ,வந்தா தான் பாயசம் எல்லாம்....ம்ம் என்றது
தியாகு சிரித்துக்கொண்டே தன் கிண்ணத்திலிருந்து பாயசம் அவளின் இலையில் விட்டான்...
அத்தங்காவிற்கு கல்யாண நிச்சயம் ஆகட்டும் தினமும் பாயசம் தான் உனக்கு என்றாள் மாமி..
கேட்டவுடன் தியாகுவிற்கு இனிப்பு அதிகமாக தித்திதது..
சாயங்காலம் ஆபிஸ் பியூன் வந்து உங்களையை பார்க்க யாரோ வந்து இருக்கா என்றான்...
விஜயாவின் அப்பா...
புருவ உயர்த்தி ஏன் என்று யோசித்தான்...
அவர் எடுத்தவுடனே மாப்பிள்ளை என்றார்...
இவனுக்கு மனம் ராக்கெட் வேகத்தில் மனம் பறந்தது சந்தோஷத்தில்...
எங்க எல்லாருக்கும் உங்கள் பிடிச்சுட்டுது..
ஆனால் ஒரு விஷயம் என்று தயங்கினார்
எதுவாக இருந்தாலும் சொல்லுங்க மாமா என்றான்..
மாமா என்ற வார்த்தையை கேட்டவுடன் கண்கள் விரிந்தது..
நீங்க.....ங்கவீட்டோடு மாப்பிள்ளை வரனும்.
உங்களை நன்னா பாத்துகிறோம்.
அங்க எல்லா தங்கைக்கும் கல்யாண எல்லாம் பண்ணி வாழ்க்கை ஆரம்பித்திற்குள்ள உங்களுக்கு வயசாகி என் பொண்ணுக்கும் கஷ்டம் தான் மிஞ்சும்.. எங்களுக்கும் ஒரே பொண்ணு என்றார்...
என்று தயங்கி தயங்கி கூறினார்...
அதில் அவருக்கே பெரிய உடன்பாடு இல்லாமல் போல இருந்தது.. எங்கிருந்து வந்து இருக்கும் என்று ஊகிக்க முடிந்தது...
இப்படியொரு நிகழ்வு வை எதிர்பார்க்கவில்லை தியாகு...
எந்த ஷணமும் தாமதிக்காமல் நீங்கள் வேறு நல்ல பையனை விஜயாவிற்கு பாருங்கள் சார் என்றான்.
அதுக்கு அவர்,
ஆத்துக்கு போய் கலந்து பேசி சொல்லுங்களேன்...என்றார்.
காபி சாப்பிடுறேளா? எங்க ஆபிஸ் காபி நன்னா இருக்கும்...
அவர் புரிந்து கொண்டு வேண்டாம் என்று சொல்லி சென்றார்.
கிருஷ்ணர் சார், தியாகு
நான் மாட்டிக்கொண்டு தான் இருந்தேன் (சாரி) கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்..
காட்டிற்கு போய்( சாரி) வீட்டிற்கு போய் நன்றாகயோசித்து...கல்லு (சாரி) சொல்லு என்றார்...
அந்த சூழ்நிலையிலும் தியாகுவிற்கும் கஷ்டமான சிரிப்பு வந்தது...
ஆத்துக்கு சைக்கிளில் வரும் போது ஏனோ கண்களிலிருந்து அழுகை எட்டி பார்க்கும் போல ஈரமாக இருந்தது...இரும்பு பாறையாக கனத்தது மனம்
சைக்கிளையைஒரு ஓராமான இடத்தில் நிறுத்தினான்..
மனம் சூறாவளியில் சிக்கிய சிறகாக குழப்பத்தில் உழன்றது.நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டே யோசித்தான்.
அங்கே முனியன் வயலில் வேலை செய்துக்கொண்டு இருந்தான் முதுகில் தன் ஊனமுற்ற மகனை கட்டிக்கொண்டு...
அந்த வழியே சென்றவர் ஒரு பெரியவர் கேட்டார்,ஏலே முனியா , ஏன் இந்த வெயிலில் அந்த குழந்தை முதுகில கட்டிக்கனு கஷ்டபடுறே...
இல்லீங்க ,அவனுக்கு இரண்டு காலும் வராது உங்களுக்கே தெரியும்.. நேற்றைக்கு கீழே படுக்கை போட்டு இருக்கும் போது நாய் கிட்ட வந்து வந்து மோப்பம் பிடிச்சதது...வயலிருந்து ஓடிவரத்துக்குள்ள ரோட் யாரோ போறவரு விறட்டினாரு..
அவன் அம்மா கீரை விக்க ஊருக்குள்ள போயி இருக்கா..அதுதான் இப்படி...
இது ஒரு சுமையா..இதை
கேட்டவுடன் தியாகுவிற்கு "இது ஒரு சுமையா"...
யோசித்துக்கொண்டே வீட்டிற்கு வந்தான்..
சாமா மாமா இருந்தார்.
எல்லார் கண்களிலும் ஒரு சொல்ல முடியாத வேதனை....
புரிந்தது...
அம்மா பசிக்கிறது ஏதாவது சாப்பிட இருக்கா எனக்கும் மாமாவுக்கும் கொடு..
தவலை அடை மணக்க மணக்க கொடுத்தாள்.
.மாமா ..
பாலாவுக்கு நல்ல இடம் பாருங்கோ...
அம்மா,ஏன்டா அம்பி அடுத்த தெருதானே வந்து பார்த்திட போறோம் அதில என்ன கஷ்டம் சொல்லு நல்ல இடம்...
இல்லமா அது சரிப்படாது மா..
உங்களை எல்லாம் விட்டு எப்படி போக முடியும் சொல்லு??
தம்பிகள் இரண்டு பேரும் படிச்சுண்டு இருக்கா முடிச்சயுடனே அவா தங்கைகளை பார்த்துண்ட பிறகு நான் பண்ணிக்கிறேன்...
குளித்து முடித்துவிட்டு சாயங்காலம் சந்தியாவந்தனம் செய்தான்.மனம் லேசானது.
சிறு வயது பழக்கம் மனம் அமைதியாகும் அவனுக்கு சந்தியாவந்தனம் பண்ணும்போது.
இராத்திரி மித்ததில் படுத்துக்கொண்டே நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டே யோசித்தான் ..
தனக்காக தன் படிப்புக்காக இருந்த இருந்த நகையை விற்று படிக்க வைத்து ...
இன்று அப்படியே விட்டு விட மனம் இல்லை.
முடிவுக்கு வந்தான்.
இரண்டாவது தங்கை பாலாவின் கல்யாணத்திற்கு பணம் சேர்க்க ஆரம்பித்தான்.
கிருஷ்ணன் சாரல் ஏற்படும் கலாட்டாக்களும்,உழைப்பும் அவனை எதையும் யோசிக்கவிடாமல் காலம் பறந்தது.
இதற்கு நடுவில் இரண்டாவது தம்பி கிறித்துவ மதத்திற்கு மாறி அங்கு உள்ள பெண்னை திருமணம் செய்து கொண்டான்.மணியையரும் , மீனாட்சி அம்மாளும் அதை ஜீரணிக்க முடியாமல் நடைபிணம் ஆக மாறினார்கள்.இதனால் தியாகு ஒரு முடிவுக்கு வந்தான் ஒரு பிள்ளையின் திருமணமாவது பார்க்கட்டும் என்று இன்னெரு தம்பியை படிப்பு முடிக்கும் நிலையில் தன் மாமா சாமாவின் பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தான்.
தியாகு அண்ணா, நான்
யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா எனக்கு மேல் நாடு போக பணம் தரனும் அங்கு போய் படித்துவிட்டு வேலை செய்ய போகிறேன்..என்றான்
சாமா மாமா தன் நிலத்தை விற்று இவன் பங்குக்கு இருக்கும் கொஞ்சம் நிலத்தையும் விற்றுஅவனுக்கு வெளிநாடு அனுப்பினார் . திருமணம் நடந்து இருவரும் வெளிநாட்டு பிரஜைகள் ஆனார்கள்..பிறகு அந்த மண்ணின் வேகமோ இல்லை வாசமோ மனம் மாற்றியது அவர்களை.
தியாகு அண்ணா,
என்னால் பணம் எல்லாம் தங்கைகள் கல்யாணத்திற்கு அனுப முடியாது..எனக்கு வீட்டை விற்கும் பணம் வேண்டாம்..
நீங்கள் என் சார்பில் அதை தங்கைகள் திருமணத்திற்கு வைத்துக்கொள்ளங்கள் என்றான்.
அதற்காகவும் கவலை படவில்லை தியாகு.
இது ஒரு சுமையா !!என்றே அப்பொழுதும் மனம் கூறியது.
கிருஷ்ணன் சாரும் வாலன்டையர் ரிடையர்மென்ட் வாங்கி அந்த இடத்திற்கு அவருடைய பையன் வந்தான்.தம்பிகள் என்ற இருக்கிறார்கள் என்பதை மறந்தான் .காலம் இறக்கையாக கட்டி பறந்தது.
வயதான காலத்தில் சாமா மாமா,மாமிக்கும் ஆதரவு இல்லாமல் இவனுடையே வைத்துக்கொண்டான்.
ராஜி, புவனேஸ்வரி என்று எல்லாரையும் கரை ஏத்தினான்.
அதற்குள் அவனுக்கு 35 வயது ஆனது .பெரியவாளும் முதலில் அம்மாவும் பின்பு அப்பாவும் போய் சேர்ந்தனர். இறக்கும் தருவாயில் அம்மா தன்னுடைய மாங்கல்யத்தை தந்து எவ்வளவு வயதாலும் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்தாள்.
தம்பிகள் யாரும் அம்மா ,அப்பாவின் கடைசி கர்மாக்களுக்கு கூட வரவில்லை.அம்மா சென்ற பிறகு.. அவனுக்கு
நாட்கள் மெதுவாக நத்தை போல் நகர்ந்தது....
சாயங்கால வேளையில் கிருஷ்ணன் சார் வீட்டிற்கு சென்று அவருடன் பொழுதை கழித்தான்.
ஒரு நாள் சாயங்காலம்
ஏன் சார் என்ன கையில கட்டு?
அதுவா தியாகு அந்த புட்டு (சாரி) கட்டு ,காலம்பற தேள் ஒன்னு கீழே போயிண்டு இருந்தது ...என் இரண்டு பையிலும் ( சாரி) கையிலும்
அவளுடைய தோச்ச ஈர புடவையை வைச்சுண்டு இருந்தேன் ..இவக்கிட்ட பிடி பிடி அடிஅடி சொல்லறத்துக்கு பதிலாக கடி கடி அடி கடி அடி சொல்லிட்டேன் அவ அடிச்சுதும் இல்லாம கடிச்சும் கடிச்சிட்டா...இப்பதான் காசி(சாரி)ஊசி போட்ண்டு வரேன்.
தியாகுவிற்கு சிரிப்பு அடங்கவே நாழி ஆனது.
மாமி ,நான் என்ன பண்ணறது தியாகு ,அவர் டேபிள் பேன் கிட்ட நின்ணடு இருந்தார் ஷாக் தான் அடிக்கிறதோ நினைச்சு மரகட்டையால அடிச்சேன்,சரி கடி,கடி சொன்னார் கடிச்சுட்டேன்...அதுக்கு ஏதோ வைத்தியம் நினைச்சுண்டு செஞ்சுட்டேன்..தப்பா சொல்லு ...
சிரித்துக்கொண்டே தப்பு இல்லை மாமி என்றான்...
வீட்டிற்கு வரும் போது எல்லாம் தனிமையாக இருப்பது போல தோன்றும்..
நிறைய நேரங்களில் அம்மா "தியாகு"என்று கூப்பிடுவது போல இருக்கும்.எப்பொழுதும் தலையணையில் அம்மாவின் ஒன்பது கஜ புடவையை வைத்து க்கொண்டே தூங்குவான்.
தங்கைகள் மிகவும் ஆதரவாக இருந்தனர்.
அம்மாவின் சிராத்தத்திற்கு மறுநாள் சுமங்கலி பிராத்தனை போது..
பவானி ,:அண்ணா எவ்வளவு நாள் எங்களுக்காக இருப்பே,நாங்களும் எவ்வளவு நாள் உனக்காக இருக்க முடியும் சொல்லுங்கோ அம்மா ஆசைபடி கல்யாண பண்ணிக்கோ அண்ணா...
ஆமாம் என்றாள் பாலா..
ராஜி ,என்னுடைய ஒன்று விட்ட நாத்தனார் பெண் லட்சுமி உன்னை மாதிரியே அவர்களின் சகோதரிக்கு எல்லோருக்கும் கல்யாணம் ஆன பின் பண்ணிக்கொள்ளலாமல் என்று இருக்கிறாள்...அப்பா கிடையாது அம்மா மட்டும் தான் என்ன சொல்லற சொல்லு??
எப்போ பெண் பார்க்க போலாம்??
பெண் பார்க்க போலாம் வார்த்தையை கேட்டவுடன் மனம் வருடங்கள் கடந்து சென்றது..
பெரு மூச்சு விட்டபடியே சரி ஆனா பெண் பார்க்கறது எல்லாம் வேண்டாம்..நீங்க பார்த்தா போதும்...
என்றான்..
திருமணம் ஆனது..
அவனுக்கு எப்பொழுதும் அவன் அம்மா அப்பாவை போன்று மனம் ஒத்த தம்பதியை போன்று இருக்க வேண்டும் என்றுன்றும் ஆசை...இருவரும் ஒருநாளும் சண்டையிட்டு பார்த்து இல்லை...
லட்சுமி ரொம்ப பொறுமைசாலியாகவும் ,நல்ல பண்புகளையை கொண்டவாளாகவும் இருந்தாள்.இருவருக்குமான புரிதலில் வாழ்க்கை சொர்க்கமாக மாறியது.
நாட்கள் சென்றது...இருவருக்கும்
வயதை தாண்டிய திருமணம் என்பதால் குழந்தை பாக்கியம் என்பது கனவாக இருந்தது...
இரண்டாவது வருட திருமணநாள்...
பிரகதீஸ்வரர் தரிசனம் செய்ய போகும் போது போது
லட்சுமி,
ஏந்நா, எனக்கு நித்திய மல்லி வாங்கி குடுங்கோ இதோ இங்கே என்று கைகாமித்தாள்... திரும்பினான்...ஒரு சிறு பெண் பூ கட்டிக்கொண்டு இருந்தாள்..
அந்த பெண்னை, அவள் விரல்களையை எங்கோ பார்த்த ஞாபகம்...
புரிந்தது.. அங்கே இருந்தவர்களிடம் விசாரித்ததில் விஜயாவின் பெண் என்று தெரிந்தது.அவளுக்கு(விஜயாவிற்கு) கல்யாணம் ஆனது என்று தெரிந்தவுடன் அவளை பற்றி அறிந்துக்கொள்ள கூடாது என்று அவன் அவளை பற்றி விசாரித்ததே இல்லை.
இப்போது தான் அவளின் நிலைமையை அறிந்தான் .விஜயாவிற்கு திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து உண்டாகி இருக்கிறாள்.மிகவும் உடல் வலிமை இல்லாத நிலையில் பிரசவம் நடந்தது இருக்கிறது.
பிரசவம் முடிந்து சில மாதங்களில் ஜன்னி வந்து இறந்து போனாள் விஜயா என்று கேட்டவுடன் மனம் கதறியது. அவளின் பெற்றோர் அவள் இறந்த வேதனையில் இறந்தனர் என்று கூறினர். கணவர் வேறு திருமணம் செய்து இருந்த சொத்தை எல்லாம் எடுத்துண்டு இந்த பெண்னையை அனாதையாக கோயில் கைங்கரியத்தில் விட்டு விட்டார் என்று கூறினர்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு பின்பு
பிரகதீஸ்வரரை தரிசிக்க சென்றான்.நந்தியம் பெருமானிடம் உட்கார்ந்தான் பழைய நினைவுகள் பசுமையாக ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு முடிவுக்கு வந்தான். வெளியே வந்து அந்த பெண்ணிடம் திரும்பி உன் பெயர் என்னமா என்றான் "மீனாட்சி" . பெயரை கேட்டவுடன்...மனம் நெகிழ்ந்தான்.
லட்சுமியின் அனுமதியோடு அவளை தன் வாரிசாக தத்து எடுத்தான்... வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு தயாரானான். மனத்திற்க்குள் மீனாட்சியை வீணை பயில அனுப்ப வேண்டும் என்று எண்ணினான்..,.இயற்கையின் விசித்திரங்கள் பல...பல...என்று எண்ணி வியந்தான்.
மற்றவர்களுக்காக வாழ்வதே வாழ்க்கை.
யார் யாருக்கு யார் என்று யாருக்கு தெரியும் இறைவன் மட்டுமே அறிவான்..
பெயரில் மட்டும் அல்ல வாழ்விலும் தியாகம் நிறைந்தது தான் ..தியாகுவின் வாழ்க்கை.
அவனுக்கும் அவளுக்கும்,மீனாட்சிக்குமான நிறைவான வாழ்க்கை ...வாழ ஆரம்பித்தார்கள்.
கிருஷ்ணன் சார் மீனாட்சியை பார்த்து இதுதான் உன் "ஜிப்பா"என்றார் அதற்கு அய்யோ மாமா அது ஜிப்பா இல்ல அப்பா என்றதது.
நீங்க கப்பு ,கப்பா (தப்பு,தப்பா)பேசறேளே என்றுஅவரை மாதிரியே சொல்லித்து...அங்கே
எல்லோருடைய சிரிப்பு அடங்க வெகு நேரமானது..

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...