இந்தத்
தீபாவளிக்கு ஒரு பத்து நாளைக்கு முன்னாடி, ஒரு ஞாயித்துக்கிழமை காலையிலே
என் சம்சாரம் சேவல் ஒண்ணெ விலைக்கு வாங்கினாள்.கோழிக்காரனோ அது
ஒன்னரைக்கிலோ சுமார் வரும் ரூ 400.க்கு கம்மி குடுக்கமாட்டேன்னான். அப்போ
ரண்டு பேருக்கும் பேரம் நடந்துச்சு பாருங்க கேக்கறதுக்கே தனி
சுவாரஸ்யம்.இவள் ஒரு காரணம் சொல்லி முந்நூறுக்கு கேக்கறதும்...அவன் ஒரு
காரணம் சொல்லி முந்நூத்தி ஐம்பது குடுங்கன்னு சொல்றதும்..இல்லெயில்லெ
கடைசியா முந்நூத்திஇருபதுன்னு பேசி முடிக்கறக்குள்ளெ, எனக்கு கண்ணாமுழி
பிதுங்கிப்போச்சு.
"அட..நாம ரண்டு பேருதானே வீட்ல இருக்கோம்...இவ்ளோ பெரிய சேவல் எதுக்கு? பேசாம தீபாவளியன்னக்கி கடைக்கிப்போயி அரைக்கிலோ கோழிக்கறி எடுத்துட்டு வந்தா தீந்துபோச்சு".அப்படின்னேன்.
" அட..பெரியபையன் அபுதாபியில இருக்கான்.ஆனா சின்னப்பையன் சென்னையிலிருந்து தீபாவளிக்கு வர்றானில்ல, கோழிபிரியாணி..வருவல்னு சூப்பசரா செஞ்சு குடுக்கத்தான் நாட்டுச்சேவல் வாங்குனேன்.பின்ன ஐயாவுக்குத்தான், இதையெல்லாம் வாங்குறேன்னு நினைப்பாக்கும் ...ஹூம்.." அப்பபிடின்னு நக்கலா மோவாயால தோள்பட்டையை இடிச்சுகிட்டே, சேவல கட்டிப்போட்டாள்.
அதென்னவோ தெரியல, அப்பவே எனக்கு சேவலோட ரண்டு காலப்பாத்தா...ரண்டு லெக்பீசாட்டம் தெரிய ஆரம்பிச்சுருச்சு.சேவலோட தலை, கழுத்து, நெஞ்சு, றெக்கைன்னு...தனித்தனியா மசாலா தடவி ரெடியா நிக்கற மாதிரியே தெறிஞ்சுச்சு.வாயில எச்சில் கூடவே ஊற ஆரம்புச்சுருச்சு.ஆனால் அதெல்லாம் ரண்டு நாளக்கிதுதான்??.
********************
மூணாவது நாள்....
போட்ட தீனியே கொத்தீட்டிருந்த சேவல அவுத்த என் சம்சாரம், அதை தன்னோட ரண்டு காலையும் மூணுதடவெ சுத்தி வெளியேவுட்டாள்.
" இனி எங்கே போனாலும் சாயந்திரம் வீட்டுக்கு வந்துரும் பாருங்க" என்றாள்.அது அவளோட சாங்கியம்போலிருந்தது.
*******************
இப்போ சேவல் வந்து அஞ்சாறு நாளாச்சு.என்னப்பொறுத்தவரை நிலைமைத் தலைகீழாயிடுச்சு.
அந்த வீட்ட சுத்தி மேயற அழகிருக்கே, என் வாயால என்னன்னு சொல்றது? நாலுதடவை காலாலெ குப்பைய பின்னோக்கி கிளறும்.அப்றம் புழுபூச்சிய பட்பட்டுன்னு கொத்தும்.திடீர்னு தலையெ மேலெ தூக்கி இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பாத்து...கொக்...கொக்..கொகோ...கொக்கொக்..அப்டீங்கும் பாருங்க..." யார்லே அது? எம்பாட்டுக்கு எதுப்பாட்டு பாடுறது" ங்கற மாதிரி ஒரு கெத்து. என்னைக் கணுடா தூர ஓடும்.ஆனால் என் வீட்டுக்காரியக்கண்ட், அப்டி ஓடாது.
*******************
இப்பொ எட்டு ஒம்பது நாளாயிப்போச்சு.
இப்பல்லாம் நான் காலையிலும் மத்தியானமும தொழிலுக்குப் போயிட்டு வந்ததும், " ஏம்மா..கோழி எங்கெ காணோம்" இப்டீன்னு கேக்கறது வாடிக்கையா போச்சு.
உடனே அவள் கொஞ்சம் குரலை உயர்த்தி.....ஏய்..கோழி..பொப்பொப்பொப் ...எங்கெ சத்தத்தையே காணோம்..ன்னு சத்தம் போடுவா.அப்பவே மதிலுக்கு அந்தப்பக்கமிருந்து....கொகோ..கொக்கொக்...னு கூவிக்கிட்டே வீட்டைப்பாத்து ஓடி வரும் பாருங்க..." அம்மா..இதோ வந்துட்டேன் ங்ற மாதிரி எனக்குக் கேக்கும்
*******************
சில சமயம் கொஞ்ச நேரம் தீனியப்பொறுக்கிட்டு...ரண்டு எட்டு வச்சு மூக்கெ இப்படியும் அப்படியும் தேச்சுட்டு கொக்கரேக்கோ..ன்னு ஒரு நடைவிடும் பாருங்க...பாக்க கண்கோடி வேணும்.மெதவா வலதுகாலைத் தூக்கும்...அப்போ கால் விரல்களெ அழகா மடக்கி..அப்றம் நீட்டிகுகீழேவைக்கும்.அடுத்து இடது காலை அதேமாதிரி செய்யும்.ஒரு வேளை பொன்னியின்செல்வன் ராஜராஜசோழனோ...அல்லது கரிகால் வளவனோ அவ்ளோ கம்பீரமாக நடந்திருக்கலாம். இது என் அனுமானம்.இப்பல்லாம் போனா வந்தா அந்தச் சேவலெ என்னாலெ பாக்காமெ இருக்க முடியலெ..ஏண்டா தீபாவளி வருதுன்னு பயமா இருந்துச்சு!!!
*********************
பத்தாவது நாள்...
செவ்வாய்கிழமை....வந்தே விட்டது தீபாவளி...எனானோட நெஞ்சு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சுது.என் சம்சாரம் பெரிய அலட்டல் எதுவுமில்லாமெ அதை அறுத்து சுத்தம் பண்றக்கு கோழிக்கடைக்கு போகத்தயாரானாள்.
ஆனால் என்னாலே அவக்கையிலிருந்த சேவலெ கண்ணால பாக்கறக்கே கஷ்டமா இருந்தது.அந்தக் கஷ்டத்திலும் கிட்டெப்போயி சம்சாரத்திடம் சொன்னேன்.." இனிமேல் தீபாவளிக்கு சேவலோ கோழியோ வாங்கி விடவேண்டாம்.தேவைப்படும்போது கடையில வாங்கிக்கலாம்" இப்டி சொல்றதுக்குள்ளெ குரல் பிசுறு தட்டிப்போச்சு.
*******************
அப்புறம் என்ன?
என் சம்சாரம் சேவலை அருமையா சமச்சா. எல்லாரும் சப்புக்கொட்டிகிட்டே சாப்டாங்க...நானுந்தான் சாப்டேன்.ருசியாத்தான் இருத்துச்சு.
நான் மனசார அந்த சேவல் மேல பாசமா இருந்தேன்.ஆனால் வயிறார ருசியா அதை சாப்பிட்டேன்.
இப்ப சொல்லுஙுக....
நான் மனுசனா..மிருகமா...?
*********************
ஆனால் இப்பவுமும் என் மணக்கண்ணுலெ அதுமெதுவா நடக்கறதும்..மிடுக்கா ஓடறதும்...தலையெத்தூக்கி கம்பீரமா ..கொக்கரேக்கோ..ன்னு கூவுறதும் ....நிழலா ஆடி ஒரு விதமான சோகம் இருந்துகிட்டேயிருக்கு..
நண்பர்களுக்கு இனிய ஞாயிறு வணக்கங்கள்...

Comments
Post a Comment